ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்
ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் (André Borschberg), சுவிட்சர்லாந்து நாட்டு வணிகரும் இராணுவ ஜெட் விமானியும் ஆவார். பெர்ட்ராண்ட் பிக்கார்டை தலைவராகக் கொண்ட சோலார் இம்பல்ஸ் திட்ட நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனர் ஆவார்.
ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் | |
---|---|
![]() ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் (2011) | |
பிறப்பு | 13 திசம்பர் 1952 (age 67) சூரிக்கு |
பணி | பொறியாளர் |
இணையத்தளம் | http://www.andreborschberg.ch |

7 சூலை 2010ஆம் ஆண்டில், சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் சோலார் இம்பல்ஸ் விமானத்தை, நீண்ட தொலைவிலும் அதிக உயரத்திலும், இரவிலும் பகலிலும் 26 மணி நேரம் வரை பறந்து காட்டி சாதனை படைத்தவர்.[1]
சோலார் இம்பல்ஸ்-1 எனும் சூரிய ஆற்றல் விமானத்தை மூன்று முறை இயக்கிக் காட்டியதன் மூலம், பன்னாட்டு விமான அமைப்பு, இவருக்கு எட்டு விருதுகள் வழங்கி சிறப்பு செய்தது.
சோலார் இம்பல்ஸ்-2
9 மார்ச் 2015 முதல் சோலார் இம்பல்சு-2 விமானத்தை பெர்ட்ராண்ட் பிக்கார்டுடன் தாமும், மாறி மாறி ஓட்டிக் கொண்டு, உலகை வலம் வர, அபுதாபியிலிருந்து புறப்பட்டு, மஸ்கட், அகமதாபாத், வாரணாசி, மியான்மர், சீனா,வட அமெரிக்கா, வடஆப்பிரிக்கா அல்லது தெற்கு ஐரோப்பா நாடுகளை, அரபுக் கடல், பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் மேல் பறந்து கடந்து மீண்டும் அபுதாபியில் தரையிறங்க உள்ளனர்.[2]
மேற்கோள்கள்
- Alan Cowell (8 July 2010). "Solar-Powered Plane Flies for 26 Hours". The New York Times. http://www.nytimes.com/2010/07/09/world/europe/09plane.html. பார்த்த நாள்: 8 July 2010.
- first round-the-world solar flight