ஆசியக் கிண்ணம் 1988

1988 ஆசியக் கிண்ணம் (1988 Asia Cup, அல்லது வில்ஸ் ஆசியக் கிண்ணம்), மூன்றாவது ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளாகும். இச்சுற்றுப் போட்டி வங்காள தேசத்தில் 1988 ஆம் ஆண்டு அக்டோபர் 26 முதல் நவம்பர் 4 வரை இடம்பெற்றது. வங்காள தேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நான்கு அணிகள் இத்தொடரில் பங்கு பற்றின.

1988 ஆசியக் கிண்ணம்
நிர்வாகி(கள்)ஆசியத் துடுப்பாட்ட வாரியம்
துடுப்பாட்ட வடிவம்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
போட்டித் தொடர் வடிவம்ரொபின் சுற்று
நடத்துனர்(கள்) வங்காளதேசம்
வாகையாளர் இந்தியா (2வது-ஆம் title)
பங்குபெற்றோர்4
மொத்த போட்டிகள்7
தொடர் நாயகன்நவ்ஜோத் சித்து
அதிக ஓட்டங்கள்?
அதிக வீழ்த்தல்கள்?

இச்சுற்றுப் போட்டியின் முதற் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றைய அணிகளுடன் தனித்தனியே ஒரு முறை மோதின. இவற்றிம் முதல் இரண்டு அணிகள் இறுதிச் சுற்றில் விளையாடின. இறுதிச் சுற்றில் இந்திய அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.

மேற்கோள்கள்

  • Cricket Archive: Wills Asia Cup 1988/89
  • CricInfo: Asia Cup in Bangladesh (Bdesh Ind Pak SL) : Oct/Nov 1988
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.