ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பு

ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பு என்பது ஆசிய நெடுஞ்சாலைகள் திட்டத்தின் கீழ் வருகின்ற நெடுஞ்சாலைகளின் வலையமைப்பு ஆகும். இத் திட்டம் ஆசியாவில் உள்ள நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்காக ஆசியாவைச் சேர்ந்த நாடுகளும், ஐரோப்பாவைச் சேர்ந்த சில நாடுகளும், "எஸ்காப்" எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் ஆசியாவுக்கும் பசிபிக்குக்குமான பொருளியல் சமூக ஆணையம் (Economic and Social Commission for Asia and the Pacific) என்னும் நிறுவனமும் கூட்டாகச் செயற்படுத்தும் ஒரு திட்டம் ஆகும். இந்தத் திட்டம் 1959 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் தொடங்கப்பட்டது. 1960க்கும் 1970க்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற இதன் முதல் கட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்பட்டன. எனினும், 1975 ஆம் ஆண்டில் நிதி உதவிகள் நிறுத்தப்பட்டதனால் திட்டத்தின் முன்னேற்றம் தடைப்பட்டது.

நெடுஞ்சாலைகளைக் காட்டும் நிலப்படம்


1992 ஆம் ஆண்டில் எஸ்காப் ஆணையத்தினால் அதன் 48 ஆவது அமர்வில் நிறைவேற்றப்பட்ட ஆசியத் தரைவழிப் போக்குவரத்துக் கட்டமைப்பு வளர்ச்சித் திட்டம் எனும் திட்டத்தின் கீழ், ஆசிய நெடுஞ்சாலைகள் திட்டத்தின் உறுப்பு நாடுகளுடன் இணைந்து படிப்படியாகச் சில திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன.


அரசுகளுக்கிடையே இடம்பெற்ற கூட்டம் ஒன்றில், ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பு தொடர்பான அரசுகளிடை ஒப்பந்தம் ஒன்று 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம், ஏறத்தாழ 87,500 மைல்கள் (140,000 கிலோமீட்டர்) நீளம் கொண்டனவும், 32 உறுப்பு நாடுகளூடாகச் செல்வனவுமான 55 ஆசிய நெடுஞ்சாலைகளைப் பட்டியலிடும் பின்னிணைப்பு 1 ஐயும், இந் நெடுஞ்சாலைகளின் வகைப்பாடு, வடிவமைப்புத் தரம் என்பவற்றை விளக்கும் பின்னிணைப்பு 2 ஐயும் உள்ளடக்குகிறது. 2004 ஆம் ஆண்டு ஏப்ரலில், சீனாவின் சாங்காயில் நடைபெற்ற "எஸ்காப்" நிறுவனத்தின் 60 ஆவது அமர்வில், மேற்படி ஒப்பந்தத்தில் 23 நாடுகள் கைச்சாத்திட்டன. பின்னர் கையெழுத்திட்ட நாடுகளையும் சேர்த்து 2007 ஆம் ஆண்டு நிலைவரப்படி இதுவரை 28 நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளன.

எண்ணிடலும் அடையாளப் பலகைகளும்

தாய்லாந்தின் ராட்சபூரிக்கு அண்மையில் உள்ள ஆசிய நெடுஞ்சாலை 2 அடையாளப் பலகை.

திட்ட ஆவணம், எல்லா நாடுகளிலும் பொதுவான அடையாளப் பலகைகளைப் பயன்படுத்த வேண்டும் என முன்மொழிந்துள்ளது. இதன்படி வழி இலக்கங்கள், ஆங்கிலத்தில் ஆசிய நெடுஞ்சாலை என்பதைக் குறிக்கும் "Asian Highway" என்பதன் முதல் எழுத்துக்களான "AH" என்பவற்றுடன் ஒன்று, இரண்டு அல்லது மூன்று இலக்கங்களைக் கொண்ட ஒரு எண்ணையும் சேர்ப்பதன் மூலம் குறிக்கப்படும். இது மேலை நாட்டு முறையைத் தழுவி ரோமன் எழுத்திலும், அராபிய எண்களிலும் எழுதப்படும். அனைத்துலக ஈ-சாலை வலையமைப்பைச் சேர்ந்த நெடுஞ்சாலைகளின் அடையாளப் பலகைகளிலேயே ஆசிய நெடுஞ்சாலை எண்ணையும் குறிக்கலாம். "AH" உடன் ஒரு இலக்க எண்ணுடன் அமையும் சாலை எண்கள் முழு ஆசியாக் கண்டத்தினூடும் செல்லும் சாலைகளைக் குறிக்கும், இரண்டு இக்கங்கள் கொண்ட எண்ணுடன் கூடியவை ஒரே நாடு அல்லது பல நாடுகளூடாகச் செல்லும் நீண்ட சாலைகளைக் குறிக்கும், மூன்று இலக்கங்கள் கொண்ட எண்களால் குறிக்கப்படும் சாலைகள் ஒரே நாட்டின் சிறிய பகுதிக்குள் அடங்கிய நீளம் குறைவான சாலைகளைக் குறிக்கும்.

அடையாளப் பலகைகளின் வடிவமைப்புக்கள் தரப்படுத்தப்படவில்லை. எழுத்துக்களும், இலக்கங்களும் மட்டுமே வெள்ளை அல்லது கறுப்பு நிறத்தில் இருக்க வேண்டும், பலகைகளின் நிறம் வடிவம், அளவு என்பவற்றை உசிதமான படி வடிவமைத்துக் கொள்ளலாம். பெர்ம்பாலான பலகைகள் நீல நிறப் பின்னணியில் வெள்ளை நிற எழுத்துக்களால் ஆனவை. எனினும், பச்சை நிறப் பின்னணியில் வெள்ளை எழுத்துக்களுடன் கூடிய பலகைகளும், வெள்ளைப் பின்னணியில் கறுப்பு எழுத்துக்களுடன் கூடிய பலகைகளும் உள்ளன.

நெடுஞ்சாலைகள்

முழுக் கண்டத்துக்கூடாகவும் செல்லும் ஒற்றை இலக்கச் சாலைகள்:

10-29 உம் 100-299 உம் தென்கிழக்கு ஆசியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன:

  • AH11, 992.5 மைல்கள் (1,588 கிமீ); வியெண்டியான், லாவோஸ் (AH12 இல்) - சிகானூக்வில்லி, கம்போடியா வரை
  • AH12, 747 மைல்கள் (1,195 கிமீ); Nateuy, லாவோஸ் (AH3 இல்) - இன் கொங், தாய்லாந்து (AH1 இல்)
  • AH13, 456 மைல்கள் (730 கிமீ); ஓடோம்சாய், லாவோஸ் (AH12 இல்) - நாக்கோன் சுவான், தாய்லாந்து (AH1/AH2 இல்)
  • AH14, 1298 மைல்கள் (2,077 கிமீ); ஆய் ஃபோங், வியட்நாம் - மண்டலே, மியன்மார் (AH1/AH2 இல்)
  • AH15, 354 மைல்கள் (566 கிமீ); வின், வியட்நாம் (AH1 இல்) - உடோன் தானி, தாய்லாந்து (AH12 இல்)
  • AH16, 645 மைல்கள் (1,032 கிமீ); டோங் ஹா, வியட்நாம் (AH1 இல்) - தாக், தாய்லாந்து (AH1/AH2 இல்)
  • AH18, 651 மைல்கள் (1,042 கிமீ); ஹட் யாய், தாய்லாந்து (AH2 இல்) - சோகோர் பாஃரு கடற்சாலை, மலேசியா
  • AH19, 287 மைல்கள் (459 கிமீ); நாக்கோன் ரட்சாசிமா, தாய்லாந்து (AH12 இல்) - பாங்காக், தாய்லாந்து (AH2 இல்)
  • AH25, 1593 மைல்கள் (2,549 கிமீ); பண்டா Aceh, இந்தோனீசியா - மேரக், இந்தோனீசியா (AH2 இல்)
  • AH26, 2198 மைல்கள் (3,517 கிமீ); லாவோக், பிலிப்பைன்ஸ் - சாம்போங்கா, பிலிப்பைன்ஸ்

30-39 உம் 300-399 உம் - கிழக்காசியாவுக்கும் வடகிழக்கு ஆசியாவுக்கும் ஒதுக்கப்பட்டவை:

  • AH30, 1712 மைல்கள் (2,739 கிமீ); உசிரியிஸ்க், ரசியா (AH6 இல்) - சித்தா, ரசியா (AH6 இல்)
  • AH31, 997 மைல்கள் (1,595 கிமீ); பெலோகோர்சுக், ரசியா (AH30 இல்) - டாலியான், சீனா
  • AH32, 2342.5 மைல்கள் (3,748 கிமீ); சோன்போங், வட கொரியா (AH6 இல்) - கோவ்ட், மங்கோலியா (AH4 இல்)
  • AH33, 359 மைல்கள் (575 கிமீ); அர்பின், சீனா (AH6/AH31 இல்) - தொங்சியாங், சீனா
  • AH34, 646 மைல்கள் (1,033 கிமீ); லியான்யுங்காங், சீனா - சியான், சீனா (AH5 இல்)

40-59 உம் 400-599 உம் தென்னாசியாவுக்கு ஒதுக்கப்பட்டவை:

60-89 உம் 600-899 உம் வட ஆசியா, நடு ஆசியா, தென் மேற்கு ஆசியா ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டது:

  • AH60, 1344 மைல்கள் (2,151 கிமீ); ஓம்ஸ்க், ரசியா (AH6 இல்) - புருபைட்டல், கசாக்ஸ்தான் (AH7 இல்)
  • AH61, 2599 மைல்கள் (4,158 கிமீ); காசுகர், சீனா (AH4/AH65 இல்) - ரசியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான எல்லை.
  • AH62, 1701 மைல்கள் (2,722 கிமீ); பெட்ரோபாவ்லோவ்சுக், கசாக்ஸ்தான் (AH6/AH64 இல்) - மசாரி சாரிஃப், ஆப்கானிசுத்தான் (AH76 இல்)
  • AH63, 1521 மைல்கள் (2,434 கிமீ); சமாரா, ரசியா (AH6 இல்) - குசார், உசுபெக்கிசுத்தான் (AH62 இல்)
  • AH64, 1041 மைல்கள் (1,666 கிமீ); பார்னோல், ரசியா (AH4 இல்) - பெட்ரோபாவ்லோவ்சுக், ரசியா (AH6/AH62 இல்)
  • AH65, 781 மைல்கள் (1,250 கிமீ); காசுகர், சீனா (AH4/AH61 இல்) - தேர்மெசு, உசுபெக்கிசுத்தான் (AH62 இல்)
  • AH66, 622 மைல்கள் (995 கிமீ); சீனாவுக்கும் தாசிக்கிசுத்தானுக்கும் இடையிலான எல்லை - Dushanbe, தாசிக்கிசுத்தான்
  • AH67, 1430 மைல்கள் (2,288 கிமீ); குயிட்டுன், சீனா (AH5 இல்) - செசுக்காசுகன், கசாக்ஸ்தான் (AH62 இல்)
  • AH68, 174 மைல்கள் (278 கிமீ); ஜிங்கே, சீனா (AH5 இல்) - உச்சாரல், கசாக்ஸ்தான் (AH60 இல்)
  • AH70, 3020 மைல்கள் (4,832 கிமீ); உக்ரைன், ரசியா என்பவற்றுக்கு இடையிலான எல்லை - பந்தர் அப்பாசு, ஈரான்
  • AH71, 266 மைல்கள் (426 கிமீ); டிலாரம், ஆப்கானிசுத்தான் (AH1 இல்) - டாசுத்தாக், ஈரான் (AH75 இல்)
  • AH72, 717 மைல்கள் (1,147 கிமீ); தெகரான், ஈரான் (AH1/AH2/AH8 இல்) - புசேர், ஈரான்
  • AH75, 1169 மைல்கள் (1,871 கிமீ); தெஜேன், துர்க்மெனிசுத்தான் (AH5 இல்) - சாபகர், ஈரான்
  • AH76, 616 மைல்கள் (986 கிமீ); போலேகும்ரி, ஆப்கானிசுத்தான் (on AH7) - ஏரத், ஆப்கானிசுத்தான் (AH1/AH77 இல்)
  • AH77, 811 மைல் (1,298 கிமீ); சுபுல்சார்க், ஆப்கானிசுத்தான் (AH7 இல்) - மேரி, துர்க்மெனிசுத்தான் (on AH5)
  • AH78, 672.5 மைல்கள் (1,076 கிமீ); ஆசுகாபாத், துர்க்மெனிசுத்தான் (AH5 இல்) - கெர்மான், ஈரான் (AH2 இல்)
  • AH81, 714 மைல்கள் (1,143 கிமீ); லார்சி, ஜார்ஜியா - அக்தோ, கசாக்ஸ்தான் (AH70 இல்)
  • AH82, 788 மைல்கள் (1,261 கிமீ); ரசியா, ஜார்ஜியா ஆகியவற்றுக்கு இடையிலான எல்லை - ஈவியோக்லு, ஈரான் (AH1 இல்)
  • AH83, 107.5 மைல்கள் (172 கிமீ); கசாக், அசர்பைசான் (AH5 இல்) - யெரெவான், ஆர்மேனியா (AH81/AH82 இல்)
  • AH84, 742.5 மைல்கள் (1,188 கிமீ); டோகுபேயாசித், துருக்கி (AH1 இல்) - İçel, துருக்கி
  • AH85, 211 மைல்கள் (338 கிமீ); ரெபாகியே, துருக்கி (AH1 இல்) - மேர்சிபோன், துருக்கி (AH5 இல்)
  • AH86, 154 மைல்கள் (247 கிமீ); ஆசுக்காலே, துருக்கி (AH1 இல்) - டிராப்சன், துருக்கி (AH5 இல்)
  • AH87, 378.75 மைல்கள் (606 கிமீ); அங்காரா, துருக்கி (AH1 இல்) - ஆசுமீர், துருக்கி

நாடுகள் அடிப்படையில் சாலைகளின் நீளம்

திட்டப்படி வலையமைப்பின் மொத்த நீளம் 87799 மைல் (140,479 கிமீ).

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.