ஆசிய நெடுஞ்சாலை 2
ஆசிய நெடுஞ்சாலை 2 அல்லது ஏஎச்2 (AH2), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இந்தோனீசியாவின் டென்பாசரில் இருந்து ஈரானின் கோசுராவி வரை செல்லும் இது, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 10 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 13,177 கிலோமீட்டர்.

ஆசிய நெடுஞ்சாலை 2 இன் நிலப்படம்

தாய்லாந்திலுள்ள ராய்ச்சபூரிக்கு அண்மையில் உள்ள ஆசிய நெடுஞ்சாலை 2 பெயர்ப் பலகை
நாடுகள்
இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- வங்காளதேசம் - 510 கிமீ
- இந்தியா - 339 கிமீ
- இந்தோனீசியா - 1,440 கிமீ
- ஈரான் - 2,310 கிமீ
- மலேசியா - 821 கிமீ
- மியன்மார் - 807 கிமீ
- நேபாளம் - 1,024 கிமீ
- பாகிசுத்தான் - 1,828 கிமீ
- சிங்கப்பூர் - 19 கிமீ
- தாய்லாந்து - 1,549 கிமீ
உசாத்துணை
- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு, 2003. (ஆங்கில மொழியில்)
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புக்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.