ஆசம்கர் மாவட்டம்
ஆசம்கர் மாவட்டம் (இந்தி: आज़मगढ़ ज़िला, உருது: اعظم گڑھ ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரான ஆசம்கர் நகரின் பெயரால் இம்மாவட்டம் ஆசம்கர் மாவட்டம் எனப் பெயர்பெற்றது.
ஆசம்கர் மாவட்டம் आज़मगढ़ ज़िला اعظم گڑھ ضلع | |
---|---|
![]() ஆசம்கர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப்பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | ஆசம்கர் |
தலைமையகம் | ஆசம்கர் |
பரப்பு | 4,054 km2 (1,565 sq mi) |
மக்கட்தொகை | 4,616,509 (2011) |
வட்டங்கள் | 7 |
மக்களவைத்தொகுதிகள் | ஆசம்கர், லால்கஞ் |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
பொருளாதாரம்
2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆசம்கர் மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[1] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]
மொழிகள்
பீகாரி மொழிக்குடும்பத்தில் 40 000 000 பேர்கள் பேசக்கூடிய போஜ்புரி மொழியானது ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள மக்களால் அதிகமாக பேசப்படுகிறது.[2]
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி ஆசம்கர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 4,616,509.[3] இது தோராயமாக பொசுனியா எர்செகோவினா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[4] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 30வது இடத்தில் உள்ளது.[3] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,139 inhabitants per square kilometre (2,950/sq mi).[3] மேலும் ஆசம்கர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.17%.[3]ஆசம்கர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 1017 பெண்கள் உள்ளனர்.[3] மேலும் ஆசம்கர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 72.69%.[3]
மேற்கோள்கள்
- Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.
- "Bhojpuri: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-30.
- "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
- US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்த்த நாள் 2011-10-01.