ஆங்கில-ஈராக்கியப் போர்
ஆங்கில-ஈராக்கியப் போர் (Anglo-Iraqi War) என்பது இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய இராச்சியத்துக்கும் ஈராக்கின் புரட்சி அரசுக்கும் இடையே நடைபெற்ற போர். மே 2-31, 1941 காலகட்டத்தில் நடைபெற்ற இப்போர் நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் ஒரு பகுதியாகும்.
ஆங்கில-ஈராக்கியப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் பகுதி | |||||||
![]() பக்தாத் நகருக்கு வெளியே பிரித்தானியப் படைகள் (ஜூன் 11, 1941) |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
![]()
| ![]()
|
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
![]() ![]() | ![]() ![]() |
||||||
இழப்புகள் | |||||||
குறைவான இழப்புகள்[9] குறைந்த பட்சம் 60 பேர் கொல்லப்பட்டனர்[10] 28 வானூர்திகள்[11] | 1,750 பேர் (500 பேர் மாண்டனர்)[9] மிகப் பெரும்பாலான ஈராக்கிய வானூர்திகள்</ref> 19 ஜெர்மானிய வானூர்திகள்[7] 3 இத்தாலிய வானூர்திகள்[7] |
முதலாம் உலகப் போருக்குப்பின் பிரிட்டன் உலக நாடுகள் சங்கத்தின் அனுமதியோடு ஈராக்கை நிருவகித்து வந்தது. 1932 இல் ஈராக்கிற்கு தன்னாட்சி வழங்கி படிப்படியாக தனது படைகளை விலக்கிக் கொண்டது. ஈராக்கிய பிரதமர் நூரி அஸ்-சைத் ஒரு பிரித்தானிய ஆதரவாளர். அவரது ஆட்சியில் ஈராக் பிரித்தானியாவுடனும் பிற நேச நாடுகளுடனும் நட்புறவுடன் செயல்பட்டு வந்தது. இரண்டாம் உலகப் போர் மூண்டவுடன் நாசி ஜெர்மனியுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டது. ஆனால் மார்ச் 1940 இல் அஸ்-சைத் பதவியிலிருந்து இறக்கப்பட்டு தேசியவாதியான ரசீத் அலி பிரதமரானார். அவர் அச்சு நாட்டு ஆதரவாளர். அவரது நிருவாகத்தில் ஈராக் அச்சு நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கியது. மத்திய கிழக்காசியாவில் அச்சு நாடுகளின் கூட்டணி நாடு போலவே செயல்பட்டது. ஆனால் ஜனவரி 1941 இல் ரசீத் அலியின் அரசு கவிழ்ந்து தாகா அல் ஹஷீமி பிரதமரானார். மீண்டும் ஈராக் நேச நாட்டு ஆதரவு நாடானது. ஆனால் ஏப்ரல் 1941 இல் ரசீத் அலி இராணுவ அதிகாரிகளுடன் துணையுடன் புரட்சி ஒன்றை ஏற்படுத்தி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார். விடுதலைக்கு முன்பு பிரிட்டனுடன் செய்து கொண்ட ஒப்பந்தகங்களை ரத்து செய்ய முயன்றார். மேலும் பிரிட்டனுக்கு ஆதரவான மன்னராட்சி பதிலாளுனர் அப்துல்லாவையும் பதவியிலிருந்து அப்புறப்படுத்தினார். இதனால் கோபம் கொண்ட பிரித்தானியத் தலைவர்கள், படைபலத்தால் ஈராக்கைப் பணிய வைக்க முடிவு செய்தனர்.
ஏப்ரல் 1941 இல் ஈராக்குக்கு பிரித்தானிய தரை, கடல் மற்றும் வான்படைப் பிரிவுகள் பல அனுப்பப்பட்டன. இதனால் இரு தரப்புக்குமிடையே பேச்சுவார்த்தைகள் முறிந்து வெளிப்படையாகப் போர் மூண்டது. மே 2ஆம் தேதி ஈரக்கியப் படைகள் ஹப்பானியாவிலிருந்து வேந்திய வான்படைத் தளத்தை முற்றுகையிட்டன. இந்த முற்றுகையை முறியடிக்க பிரித்தானியப் படைகள் முயன்றன. அடுத்த சில வாரங்களில், ரசீத் அலி அரசுக்கு ஆதரவாக அச்சுப் படைகள் ஈராக்குக்கு அனுப்பப்பட்டன. நாசி ஜெர்மனி, பாசிச இத்தாலி, விஷி பிரான்சு ஆகியவை ரசீத் அலிக்கு ஆதரவாக படைப்பிரிவுகளையும் தளவாடங்களையும் ஈராக்குக்கு அனுப்பின. ஹப்பானியா முற்றுகையை முறியடிக்க பாலஸ்தீனத்திலிருந்து ஜெனரல் ஆர்ச்சிபால்டு வேவல் தலைமையில் ஒரு பிரித்தானியப் படை வடக்கிலிருந்து ஈராக் மீது படையெடுத்தது. இரு பிரிவுகளாக ஈராக்கினுள் முன்னேறி மே 17ம் தேதி ஹப்பானியா தளத்தை அடைந்து முற்றுகையை முறியடித்தது. இதே வேளை ஈராக்கின் தெற்கே பாஸ்ரா நகரிலிருந்து பிரித்தானியப் படைகள் ஈராக்கினுள் முன்னேறின. மே 18ம் தேதி ஃபல்லூஜா கைப்பற்றப்பட்டது. மே 27ம் தேதி பிரித்தானியப் படைகள் ஈராக்கியத் தலைநகர் பக்தாத்தை நோக்கி முன்னேறத் தொடங்கின. மே 31ம் தேதி பக்தாத் நகரம் சரணடைந்து போர் முடிவுக்கு வந்தது.
ரசீத் அலியின் அரசு கலைக்கப்பட்டு, அப்துல்லா மன்னராட்சி பதில் ஆளுனராக மீண்டும் நியமிக்கப்பட்டார். மேலும் ஒரு பிரித்தானிய ஆதரவு அமைச்சரவை ஈராக்கில் பதவியேற்றது.
குறிப்புகள்
- Playfair (1956), pp. 192, 332
- Young, p. 7
- Wavell, p. 4094
- Waters, p. 24
- Playfair (1956), p. 186
- Wavell, p. 3439
- "Habbaniya War Cemetery". Commonwealth War Graves Commission. பார்த்த நாள் 12 August 2010.
- Playfair (1956), p. 193
மேற்கோள்கள்
- Ammentorp, Steen. "Major-General George Guy Waterhouse.". Generals of World War II website. பார்த்த நாள் November 2, 2009.
- Claude Auchinleck (1946). Despatch on Operations in the Middle East From 5th July, 1941 to 31st October 1941. London: War Office. in You must specify வார்ப்புரு:And list when using {{London Gazette}}.
- Winston Churchill (1985) [1950]. "Chapter 14: The Revolt in Iraq". The Second World War, Volume III, The Grand Alliance. Boston: Houghton Mifflin Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-395-41057-6.
- Jackson, Ashley (2006). The British Empire and the Second World War. Hambledon Continuum. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85285-417-0.
- James, Barrie G. (2009). Hitler's Gulf War, The Fight for Iraq 1941. South Yorkshire: Pen & Sword Aviation. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84884-090-4.
- Kiwarkis, Gaby. "Assyrian R.A.F. Levies".
- Kurowski, Franz (2005). The Brandenburger Commandos: Germany's Elite Warrior Spies in World War II. Mechanicsburg, Pennsylvania: Stackpole Book. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:13: 978-08117-3250-5, 10: 0-8117-3250-9.
- Lyman, Robert (2006). Iraq 1941: The Battles for Basra, Habbaniya, Fallujah and Baghdad. Campaign. Oxford, New York: Osprey Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-84176-991-6.
- Compton Mackenzie. Eastern Epic: Volume 1 September 1939-March 1943 Defence. London: Chatto & Windus. இணையக் கணினி நூலக மையம்:59637091.
- Martin, Colonel Thomas Alexander (1952). The Essex Regiment, 1929-1950. Essex Regiment Association.
- Mead, Richard (2007). Churchill's Lions: A biographical guide to the key British generals of World War II. Stroud (UK): Spellmount. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-86227-431-0.
- Peretz, Don (2004) [1963]. The Middle East Today. Greenwood Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-027594-576-3.
- Ian Stanley Ord Playfair; with Stitt, Commander G.M.S.; Molony, Brigadier C.J.C. & Toomer, Air Vice-Marshal S.E. (2004) [1st. pub. HMSO 1954]. James Ramsay Montagu Butler. ed. The Mediterranean and Middle East, Volume I The Early Successes Against Italy (to May 1941). History of the Second World War, United Kingdom Military Series. Naval & Military Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-84574-065-3.
- Playfair, Major-General I.S.O.; with Flynn R.N., Captain F.C.; Molony, Brigadier C.J.C. & Toomer, Air Vice-Marshal S.E. (2004) [1st. pub. HMSO 1956]. Butler, J.R.M. ed. The Mediterranean and Middle East, Volume II The Germans come to the help of their Ally (1941). History of the Second World War, United Kingdom Military Series. Naval & Military Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-84574-066-1.
- Royal Air Force. "RAF Valley No 4 Flying Training School".
- Royal Air Force Museum. "Royal Air Force Museum".
- Rodger, Alexander (2003). Battle Honours of the British Empire and Commonwealth Land Forces. Marlborough: The Crowood Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-86126-637-5.
- Saunders, Hilary Adrian St. George; Richards, Denis (1953). Volume I: The Fight at Odds. The Royal Air Force 1939-1945. London: Her Majesty's Stationary Office.
- Thomas, David A. (1972). Nazi Victory: Crete 1941. New York: Stein and Day.
- Waters, S. D. (2008). H.M.N.Z.S. Leander. Wellington, New Zealand: Merriam Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4357-5892-6.
- Archibald Wavell, 1st Earl Wavell (1946). Despatch on Operations in the Middle East From 7th February, 1941 to 15th July 1941. London: War Office. in You must specify வார்ப்புரு:And list when using {{London Gazette}}.
- Archibald Wavell, 1st Earl Wavell (1946). Despatch on Operations in Iraq, East Syria and Iran from 10th April, 1941 to 12th January, 1942. London: War Office. in You must specify வார்ப்புரு:And list when using {{London Gazette}}.
- Weal, John (1999). Messerschmitt Bf 110 Zerstorer Aces of World War 2. Oxford: Osprey. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1 855327538.
- Henry Maitland Wilson, 1st Baron Wilson (1946). Despatch on the Persia and Iraq Command Covering the Period from 21st August, 1942, to 17th February, 1943. London: War Office. in You must specify வார்ப்புரு:And list when using {{London Gazette}}.
- Young, Peter (1972). The Arab Legion. Men-at-Arms. Osprey Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0850450845.