அருவாள்
அருவாள் அல்லது அரிவாள் மலையாளம்:അരിവാള്}} ) என்பது தென் இந்தியாவில் உள்ள ஒரு வெட்டுகத்தி வகையாகும். இது குறிப்பாக தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் பொதுவாக காணப்படுகிறது. இது ஒரு கருவியாகவும், ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. தமிழர்கள் இதை கருப்பசாமியின் அடையாள ஆயுதமாக வைத்திருக்கின்றனர். பரவலர் பண்பாட்டில், இது சில நேரங்களில் குண்டர்கள் தொடர்புடையதாக சித்தரிக்கப்படுகிறது. திரைப்படங்களில், இது தேர்ந்த ஆயுதமாக காட்டப்படுகிறது. கேரளத்தில், முதன்மையாக வேளாண் பணிகளான நெல் அறுவடை மற்றும் தேங்காய் வெட்டும் கத்தியாக பயன்படுத்தப்படுகிறது.
அரிவாள் Aruval | |
---|---|
![]() தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு அரிவாள். | |
வகை | அரிவாள் |
அமைக்கப்பட்ட நாடு | தமிழ்நாடு |
அளவீடுகள் | |
நீளம் | 3 to 6 அடிகள் (0.91 to 1.83 m) |
அறிமுகம்
அருவாளானது பொதுவாக 3-6 அடி நீளம் (கை அரிவாள் 1.5 அடி) கொண்டதாக உள்ளது. இதன் கைப்பிடியில் இருந்து வெட்டுவாய்ப்பகுதியானது நீண்டு பின்னர் தட்டையாக விரிவடைகிறது. இது தமிழகத்தில் வேளாண் பணிகளுக்கு பயன்படுத்தும் வெட்டுக் கத்தியின் நீண்ட வடிவமாகும். மேலும் இது எதிர் வளைவுடய ஒரு வாள் என்று கருதப்படுகிறது. இதன் குட்டை வடிவமானது தேங்காய்களை எளிதாக வெட்ட பயன்படுத்தப்படுவதாகவும், நீண்ட வடிவமானது போர் ஆயுதங்கள் போன்றவை. சிறிய வடிவிலான அருவாள்கள் பொதுவாக சிற்றூர்களில் காணப்படுகிறது. இதன் வெட்டுவாய்ப்பகுதி பெரும்பாலும் நேராக நீண்டதாகவும் அதன் முனையில் ஒரு வளைவைக் கொண்டதாகவும் இருக்கும். கத்தியின் நேராக பகுதியானது ஒரு வழக்கமான கத்தி போன்று, வெட்டப் பயன்படுத்தப்படுகிறது.
மாறுபாடுகள் மற்றும் பயன்பாடு
பொதுவாக வேளாண் மக்கள் பயிர்களை அறுக்க அரிவாள் போன்று பயன்படுத்துவது கொய்த்தருவாள் என்றும், இதைவிட நீண்டது வீச்சரிவாள் எனப்படுகிறது. இது மரங்களையும், புதர்களையும் அகற்றப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வீச்சரிவாளானது கிராமப் பகுதிகளிலும், நகர்ப்பகுதிகளிலும் கும்பல் சண்டைகளில் ஒரு தற்காப்பு ஆயுதமாக இன்னமும் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் நாட்டுப்புற தெய்வங்களான முனீசுவரன், மாரியம்மன் போன்ற தெய்வங்களுக்கு ஆடுகளை பலியிடும்போது அவற்றின் தலைகளை வெட்ட இந்த வீச்சரிவாள்கள் பயன்படுத்தப்படுகின்றன. காவல் தெய்வ வழிபாடுகளில் பயன்படுத்தப்படும் சில அருவாள்கள், 3.5 அடி நீளம் கொண்டவை.
![]() வீச்சருவாள் |
![]() கதிர் அறுவாள் |