ஹராம்

ஹராம்(அரபி : حَرَام‎ , ஆங்கிலம்:ḥarām) என்றால் தவிர்க்கப்பட்ட அல்லது புனித மற்றது என்று பொருள். இஸ்லாமிய சட்டப்படி ஒரு முஸ்லிம் தவிர்க்கப்பட வேண்டியவையை ஹராம் என்று கூறுவார். இதன் எதிர்சொல் ஹலால் ஆகும். இஸ்லாமியத்தின் படி பின் வருவன அனைத்தும் ஹராமாகும்: • கொலை செய்தல், கற்பழித்தல் • கூடா ஒழுக்கம் • ஹலால் அல்லாத உணவு வகை • உருவ வழிபாடு

"ஹராம்" என்ற சொல்

இச் சொல் அரபி பேசும் மக்கள் மற்றும் அரபி பேசா மக்கள் என இருவரிடமும் வேறு பட்டு பயன்படுத்தபடுகின்றது.

அரபு பேசும் நாடுகள்

அரபு மொழி பேசும் நாடுகளில் இச்சொல் இசுலாமியச் சட்டப்படி அனுமதிக்கப்படாத பொருள் அல்லது செயல்" என்ற பொருள் கொண்ட சொல்லாக வழங்குவதாகவும். பேச்சுவழக்கில் ஒருவன் தவறான செயலில் இடுப்பட்டான் என்று கூறும்பொழுது ஹராம் என்ற வர்த்த பயன்படுத்தப்படுகிறது. தவறான செயல்களான கொள்ளை அடித்தல். கொலை செய்தல், திருடுதல், மற்றவரை துன்புறுத்தல், தீய வழியில் பொருள் சேர்த்தல் போன்றவையும் ஹராமாகும். பொதுவாக குழந்தைகளுடன் மற்றவரை அடித்தல் , பொய் சொல்லுதல் மற்றும் மிருகங்களை துன்புறுத்தல் போன்றவை ஹராம் என்று கூறப்படுகிறது.

அரபு பேசா நாடுகள்

அரபு பேசா நாடுகளில், பொதுவாக இச்சொல் ஹராம் என்ற சொல் ஹரேம் என்ற பெண்களின் அந்தபுரத்தை குறிக்கும் சொல்லாக கருதப்படுகிறது.

திருக்குர்ஆனில் ஹராம்

உணவு பொருட்களில் ஹராம்
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.

- (திருக் குர்ஆன்-2:173)

அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது? நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான் - ஆனால் பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள்; வரம்பு மீறிச்செல்பவர்களை நிச்சயமாக உம் இறைவன் நன்கு அறிகிறான்.

- (திருக் குர்ஆன்-6:119)

கூடா ஒழுக்கம்
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.

- (திருக் குர்ஆன்-17:32)

அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.

- (திருக் குர்ஆன்-25:68)

(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிஸுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார்.

- (திருக் குர்ஆன்-17:33)

உருவ வழிபாடு
“நீங்கள் அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை(க் கடவுளர்களாக) அழைக்கின்றீர்களோ அவர்களை வணங்கக் கூடாதென்று நான் நிச்சயமாக தடுக்கப்பட்டு உள்ளேன்” (என்று நபியே!) நீர் கூறுவீராக: “உங்களுடைய மன இச்சைகளை நான் பின்பற்ற மாட்டேன்; (நான் அப்படிச் செய்தால்) நான் நிச்சயமாக வழி தவறி விடுவேன்; மேலும் நான் நேர்வழி பெற்றவர்களிலும் இருக்கமாட்டேன்” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.

- (திருக் குர்ஆன்-6:56)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.