அய்யூப்பிய வம்சம்

அய்யூப்பிய வம்சம் (Ayyubid dynasty) (அரபு மொழி: الأيوبيون al-Ayyūbīyūn; குர்தியம்: خانەدانی ئەیووبیان Xanedana Eyûbîyan) சன்னி இசுலாமிய குர்து மக்கள் வாழும் பகுதியான குர்திஸ்தான் பகுதிகளை (மேல் மெசொப்பொத்தேமியா) அய்யூப்பிய வம்சத்தினர், அப்பாசியக் கலீபகத்தின் கீழ் சிற்றரசாக ஆண்டனர்.[2][3][4][5] அய்யூப் வம்சத்தை 1171-இல் நிறுவியவர் சலாகுத்தீன் என்ற குர்து இனத்தவர் ஆவார். அய்யூப்பிய வம்சத்தினர் 1174 முதல் 1254 முடிய லெவண்ட் பகுதியை ஆட்சி செய்தனர்.[6] அயூப்பிய பேரரசில் படைத்தலைவர்களாக இருந்த அடிமை வீரர்கள், பின்னர் மம்லுக் சுல்தானகத்தையும் மற்றும் இந்தியாவில் இசுலாமிய அடிமை வம்ச ஆட்சியையும் நிறுவினர்.[7][8]

அய்யூப்பிய சுல்தானகம்
அய்யூப்பிய வம்சம் الأيوبيون
ئەیووبی
Eyûbî
கொடி
Location of அய்யூப்பித்துகள்
Status சுல்தானகம்
தலைநகரம்கெய்ரோ (1171–1174)
டமாஸ்கஸ் (1174–1218)
கெய்ரோ (1218–1250)
அலெப்போ (1250–1260)
சமயம் சன்னி இசுலாம்
அரசாங்கம் அப்பாசியக் கலீபகத்தின் கீழ் சிற்றரசு[1]
நாணயம் தினார்
aஅயூப் வம்சத்தின் ஒரு கிளையினர் 16-ஆம் நூற்றாண்டு வரை இசின் கைபா பிரதேசத்தை ஆண்டனர்.
bஅய்யூப் வம்ச பேரரசின் ஆட்சியாளர்கள் பேசிய மொழிகள், சமயங்கள், இனக்குழுக்கள்
c அயூப்பிய வம்ச பேரரசின் பகுதிகள் தற்கால எகிப்து, சிரியா, மேல் மெசொப்பொத்தேமியா, பாலஸ்தீனம், ஜெருசலம், ஜோர்தான், ஹெஜாஸ், மற்றும் ஏமன்
அய்யூப்பிய வம்சத்தின் இறுதிக் காலத்தில் ஆட்சிப் பரப்புகள்

12 - 13-ஆம் நூற்றாண்டுகளில் அய்யூப் வம்சத்தினர் வளமான பிறை பிரதேசம் எனப்படும் மத்திய கிழக்கின் பெரும்பகுதிகளை கைப்பற்றி ஆண்டனர். 1171-இல் எகிப்தின் பாத்திம கலீபகத்தை முடக்கப்பட்ட பின்னர் அய்யூப்பிய வம்சத்தின் சலாகுத்தீன் எழுச்சி கொண்டார். பின்னர் அப்பாசியக் கலீபகத்தின் சலாகுத்தீன் குர்திஸ்தான் பகுதியின் சிற்றரசராக இருந்தார். 1171-இல் பாத்திமா கலீபகம் வீழ்வதற்கு முன்னர் சலாவுதீன் 1169-இல் பாத்திமா கலீபகத்தின் வீசியர் பகுதிகளை கைப்பற்றினார். செங்கித் வம்சத்தின் ஆட்சியாளர் நூருத்தீன் சாங்கியின் மறைவிற்குப் பின் 3 ஆண்டுகள் கழித்து சலாகுவுதீன் தன்னை மன்னராக அறிவித்துக் கொண்டார்.[9] அடுத்த பத்தாண்டுகளுக்குள் சலாவூதீன் அய்வூப்பியிய வம்சத்தின் மெசொப்பொத்தேமியாவில் தனது ஆட்சியை விரிவாக்கினார். கிபி 1183-இல் தற்கால ஈராக்கின் வடக்கு பகுதி (மேல் மெசொப்பொத்தேமியா), சிரியா, இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்தான், அரேபியாவின் ஹெஜாஸ், ஏமன் மற்றும் வட ஆப்பிரிக்காவின் எகிப்து, துனிசியா பகுதிகளை கைப்பற்றி தனது பேரரசை விரிவுப் படுத்தினார். சிலுவைப் போரின போது கிபி 1187-இல் ஜெருசலம் இராச்சியத்தைக் கைப்பற்றினார்.

கிபி 1193-இல் சலாவூதீனின் இறப்பிற்குப் பின் அவரது மகன்கள் வாரிசுமைப் பிணக்கில் ஈடுபட்டிருந்த போது, சலாவூதீனின் சகோதர் அல் அதில் என்பவர் கிபி 1200 தன்னை அய்யூப்பிய வம்சத்தின் எகிப்திய சுல்தானகத்தின் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். அய்யூப்பிய வம்சத்தின் சுல்தான் அல் அதில் 1249-இல் மறைந்த பின், ஹெஜாஸ், ஏமன், மேல் மெசொப்பொத்தேமியாவின் பகுதிகளின் உள்ளூர் படைத்தலைவர்கள் அய்யூப்பிய வம்ச ஆட்சியை விரட்டி அடித்து தன்னாட்சியை நிறுவினர். 1249-இல் அய்யூப்பிய வம்ச சுல்தான் அல் மூசாம் துரான்ஷா எகிப்தின் சுல்தானாக பதவியேற்றார்.

இவரை எகிப்தின மம்லுக் சுல்தானகத்தார் பதவியிலிருந்து விரட்டியடித்ததன் மூலம் அய்யூப்பிய வம்சத்தின் ஆட்சி எகிப்தில் மட்டும் முடிவுற்றது. 1260-இல் மங்கோலியர்கள், அய்யூப்பிய வம்சத்தின் கீழிருந்த சிரியாவின் பண்டைய அலெப்போ நகரத்தையும் பிற பகுதிகளை கைப்பற்ற்றினர். பின்னர் எகிப்திய மம்லுக் சுல்தானகப் படைகள் மங்கோலியர்களை விரட்டியடித்தது. அய்யூப்பிய வம்சத்தின் இறுதி சுல்தான் 1341 வரை ஹமா எனும் சிறு பகுதியை மட்டும் ஆண்டார். அய்யூப்பிய வம்ச ஆட்சியில் பெருநகரங்களில் இசுலாமிய கல்விக்கூடங்களான மதராச்சாக்கள் அதிகமாக நிறுவப்பட்டது.

அய்யூப்பிய வம்ச ஆட்சியாளர்கள்

  1. சலாகுத்தீன் - 1174–1193
  2. அல்-அஜீஸ் உதுமான் - 1193 –1198
  3. அல்-மன்சூர் - 1198–1200
  4. அல்-அடில் I - 1200–1218
  5. அல்-கமீல் - 1218–1238
  6. அல்-அடில் II -1238–1240
  7. அஸ்-சலீப் அயூப் - 1240–1249
  8. அல்-அஷ்ரப் மூசா -1250–1254

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

— அரச மாளிகை —
அய்யூப்பிய வம்சம்
முன்னர்
பாத்திம கலீபகம்
எகிப்தின் ஆட்சியில்
1171 – 1254
அய்யூப்பிய வம்சம்
பின்னர்
பக்ரி வம்சம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.