ஆம்ரபாலி
ஆம்ரபாலி, பழங்காலத்து இந்திய நாடான வைசாலியின் அரசவை நடனமங்கை. இவளைப் பற்றி பழைய பௌத்த மற்றும் பாளி மொழி நூல்களில் செய்திகள் அறியப்படுகின்றன. சமஸ்கிருத்தத்தில் "ஆம்ரம்" என்பது "மா"வையும், "பாலி" - இலையையும் குறிக்கும், அரசின் மாந்தோப்பில் கண்டெடுக்கப்பட்டதால் அவளுக்கு இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

ஆம்ரபாலி ஒப்பற்ற அழகுடையவளாக இருந்தமையால், வைசாலி நகரத்தின் பல செல்வந்தர்கள் அவளைத் தனதாக்க முற்பட்டனர். இப்பிரச்சனையைத் தீர்க்க அவளை அரசவை நாட்டியக்காரியாக்க வேண்டியிருந்தது. ஆம்ரபாலியின் அழகு அண்டை நாடுகளுக்கும் பரவ, வைசாலியின் அண்டைநாடான மகதத்தின் அரசனான பிம்பிசாரனுக்கு, அவளுக்கு இணையான அழகுடைய நடனமங்கையைத் தனது அரசவைக்கு நியமிக்கும் கட்டாயம் ஏற்பட்டது. பின் வைசாலி மீது படையெடுத்து அவளை மணமுடித்தான். இவர்களிருவருக்கும் பிறந்த மகவுக்கு விமல கொண்டண என பெயரிடப்பட்டது.
ஒருமுறை அமர்பாலி புத்தருக்கு விருந்தளிக்க விரும்பினாள். புத்தரும், வைசாலி அரசின் எதிர்ப்பையும் மீறி விருந்துக்கு வர ஒப்புக்கொண்டார். ஆம்ரபாலி புத்தருக்கு ராஜபோக உபச்சாரம் செய்தாள். இந்நிகழ்வுக்குப்பின் அவள் புத்த மதத்தை தழுவி புத்த பிக்குணியாக மாறினார். அவள் மகன் விமல கொண்டணனும் பௌத்த பிக்குவானான்.
உசாத்துணை
- Khanna, Anita (2004). Stories Of The Buddha. Children's Book Trust. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7011-913-8. http://books.google.co.in/books?id=G3Uph1xLa74C&pg=PA45&dq=Amrapali&lr=&cd=17#v=onepage&q=Amrapali&f=false.
- அனுராக் ஆனந்தின் புத்தகம்