அப்பாச்சி (பழங்குடிகள்)
அப்பாச்சி (ஒலிப்பு: /əˈpætʃiː/) என்பவர்கள் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் வசித்து வந்த பல பண்பாடுகளைச் சேர்ந்த முதற்குடி மக்கள் குழுக்களாவர். இந்த வட அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள் அலாஸ்கா மற்றும் மேற்கு கனடாவில் பேசப்படும் அதபஸ்கான் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. தற்காலத்தில் அப்பாச்சி என விளிக்கப்படுபவர்கள் தொடர்புள்ள நவயோ இன மக்களை உள்ளடக்கியவர்கள் அல்லர். இருப்பினும் இந்த இரு இனக்குழுக்களிடையே பலமான பண்பாடு மற்றும் மொழி வகையிலான பிணைப்பு உள்ளது. சிலநேரங்களில் இவ்விரு இனமக்களையும் கூட்டாக அப்பாச்சியர் என விளிக்கின்றனர். இந்த இன மக்கள் துவக்கத்தில் கிழக்கு அரிசோனா,வடமேற்கு மெக்சிக்கோ,நியூ மெக்சிகோ,டெக்சாஸ் மற்றும் தெற்கு பெரும் புல்வெளி பகுதிகளில் வாழ்ந்திருந்தனர்.

தற்கால அப்பாச்சியர் குடியேற்றங்கள்
![]() | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(56,060 (சுய அடையாளம்) [1]) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
அரிசோனா, நியூ மெக்சிகோ மற்றும் ஒக்லகோமா | |
மொழி(கள்) | |
கிரிகாயுவா மொழி, ஜிகாரில்லா மொழி, லிபான் அப்பாச்சி, பிளைய்ன்ஸ் அப்பாச்சி, மெஸ்கலரோ மொழி, மேற்கு அப்பாச்சி மொழி | |
சமயங்கள் | |
நாட்டு அமெரிக்க பள்ளி, கிறித்துவம், பரம்பரை ஷமானிய பழங்குடி சமயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
நவயோ |
ஆதாரம்
- Census.gov Census 2000 PHC-T-18. American Indian and Alaska Native Tribes in the United States: 2000. US Census Bureau 2000 (பார்வையிட்டது திசம்பர் 28, 2009)
புற இணைப்புகள்
- Fort Sill Apache Tribal Chairman Jeff Houser's Website
- Kiowa Comanche Apache Indian Territory Project
- American Indian Language Development Institute (has children's video of Cactus Boy story in Western Apache)
- Apache Times (San Carlos)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.