அப்பல்லோ 13 (விண்கலம்)

அப்பல்லோ 13 (Apollo 13) அமெரிக்க அப்பல்லோ திட்டத்தின் ஏழாவது மனிதர் பயணித்த விண்கலமாகும். இது நிலவில் தரையிறங்கும் நோக்கோடு ஏவப்பட்டது (அப்பல்லோ 11, அப்பல்லோ 12 -களைத் தொடர்ந்து). இக்கலம் ஏப்ரல் 11, 1970 அன்று சரியாக 13:13 CST (மத்திய கால மண்டலம்-- வட அமெரிக்காவில்)-ல் ஏவப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆக்சிசன் கலன் வெடித்ததால் நிலவில் தரையிறங்குவது இடைநிறுத்தம் செய்யப்பட்டது. ஆக்சிசன் கலன் வெடித்ததால் சேவைப் பெட்டகமும் அதைச் சார்ந்திருந்த கட்டளைப் பெட்டகமும் பாதிக்கப்பட்டன. குறைந்த திறன்மூலம், சிற்றறை வெப்பக்குறைவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் குறைபாடு, கார்பன்-டை-ஆக்சைடு வாயுவை பிரித்தெடுக்கும் அமைப்பை தற்காலிகமாக செய்தாகவேண்டிய சூழல் போன்ற மிகக் கடினமான சவால்களையும் மீறி, குழுவினர் ஏப்ரல் 17 அன்று மீண்டும் பூமியில் தரையிறங்கினர்.

அப்பல்லோ 13
திட்டச் சின்னம்
திட்ட விபரம்[1]
திட்டப்பெயர்: அப்பல்லோ 13
விண்கலப் பெயர்:CSM: Odyssey
LM: Aquarius
கட்டளைக் கலம்:CM-109
mass 12,365 pounds (5,609 kg)
சேவைக் கலம்:SM-109
mass 51,105 pounds (23,181 kg)
நிலவுக் கலம்:LM-7
mass 33,493 pounds (15,192 kg)
உந்துகலன்:Saturn V SA-508
ஏவுதளம்:LC 39A
கென்னடி விண்வெளி மையம்
புளோரிடா, USA
ஏவுதல்: {{{launch}}}
சந்திரனில் இறக்கம்:Planned for Fra Mauro. Cancelled due to onboard explosion
இறக்கம்: April 17, 1970
18:07:41 UTC
South Pacific Ocean
21°38′24″S 165°21′42″W
கால அளவு: {{{duration}}}
சந்திரச் சுற்று எண்ணிக்கை:0
பயணக்குழுப் படம்

Left to right: Lovell, Swigert, Haise

ஜேம்ஸ் ஏ. லொவெல் இப்பயணத்தின் ஆணையாளராயிருந்தார். ஜான் எல். ஜாக் ஸ்விகர்ட் கட்டளைப் பெட்டகத்தின் ஓட்டி/இயக்கியாகவும் ஃப்ரெட் டபிள்யூ. ஹெய்ஸ் நிலவு (நிலவு உலவி?) பெட்டகத்தின் ஓட்டி/இயக்கியாகவும் இருந்தனர். கட்டளைப் பெட்டகத்தின் ஓட்டியாக முதலில் தேர்வாகியவர் கென் மாட்டிங்லி. இவர் ஜெர்மன் மீசல்ஸ்-ஆல் பாதிக்கப்பட்டதால் கடைசி நேரத்தில் அப்பணி ஸ்விகர்ட்-டுக்கு கிடைத்தது.

உசாத்துணைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.