கென்னடி விண்வெளி மையம்

"ஜான் எஃப். கென்னடி விண்வெளி மையம்" (John F. Kennedy Space Center (KSC))  என்பது நாசா-வின் பத்து கள மையங்களுள் ஒன்றானதும் ஏவுதல் மற்றும் ஏவுசுமை முறைவழியாக்க தொகுதிகளுள் ஒன்றானதும் ஆகும்.[2] ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள இதன் அருகில்தான் "கேப் கேனவரல் வான் படை நிலையம்" உள்ளது. இவ்விரு நிறுவனங்களின் மேலாண்மையும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன; வளங்கள் பங்கீடு மற்றும் மற்றவற்றின் நிலப்பகுதியில் தமது கட்டிடம் மற்றும் ஆய்வகங்கள் அமைத்தல் என ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

ஜான் எஃப். கென்னடி விண்வெளி மையம்
கென்னடி விண்வெளி மையத் தலைமையகத்தின் வான்பார்வை - தெற்கு நோக்கி
அமைப்பு மேலோட்டம்
அமைப்பு சூலை 1, 1962 (1962-07-01)
Preceding agencies ஏவுதல் செயல்பாடுகளின் ஆணையரகம்
ஏவுதல் செயற்பாடுகள் மையம்
ஆட்சி எல்லை ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு
தலைமையகம் மெரியட் தீவு, புளோரிடா,
ஐக்கிய அமெரிக்கா

28°31′26.61″N 80°39′3.06″W
பணியாளர்கள் 13,100 (2011)
ஆண்டு நிதிநிலை ஐஅ$350 மில்லியன் (2010)
அமைப்பு தலைமைs ராபர்ட் டி. கபானா (Robert D. Cabana), இயக்குநர்
ஜேனெட் இ. பெட்ரோ (Janet E. Petro), துணை இயக்குநர்
மூல நிறுவனம் நாசா
இணையத்தளம்
NASA KSC home page
அடிக்குறிப்புகள்
[1]
வரைபடம்
கென்னடி விண்வெளி மையம் வெள்ளையில்; கேப் கேனவரல் வான் படை நிலையம் பச்சையில்

திசம்பர் 1968-ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் மானிட விண்பயணங்களுக்கு கென்னடி விண்வெளி மையமே நாசாவின் முதன்மையான ஏவுதளமாக செயல்பட்டு வருகிறது. அப்போலோ, ஸ்கைலேப் மற்றும் விண்ணோடத் திட்டங்களுக்கான ஏவுதல்கள் கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதொகுதி-39-இல் நிகழ்த்தப்பெற்றன;  அவ்வித ஏவுதல்களின் மேலாண்மையும் கென்னடி விண்வெளி மையத்தாலேயே மேற்கொள்ளப்பட்டன. ஆரம்பகால அப்போலோ பறத்தல்கள், மற்றும் அனைத்து மெர்க்குரி திட்டம், ஜெமினி திட்ட பறத்தல்களும் கேப் கேனவரெல் வான்படை நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டாலும், அத்தகைய ஏவுதல்கள் அனைத்தும் கென்னடி விண்வெளி மையம் மற்றும் அதற்கு முந்தைய அமைப்பான ஏவுதல் செயல்பாடுகள் ஆணையரகத்தால் நிர்வகிக்கப்பட்டன.[3][4] ஜெமினி திட்டத்தின் நான்காவது ஏவுதலிலிருந்து புளோரிடாவின் நாசா ஏவுதல் கட்டுப்பாட்டு மையமானது, ஏவுதல் நிகழ்த்தப்பட்டவுடன் ஏவூர்தி கட்டுப்பாட்டை ஹூஸ்டனின் திட்ட கட்டுப்பாட்டு மையத்திற்கு மாற்றியளித்துவருகிறது; அதற்கு முன்னர் திட்டத்தின் முழுமையான பறத்தல் கட்டுப்பாடும் புளோரிடா கட்டுப்பாட்டு மையத்திடமே இருந்துவந்தது.[5][6]

1999-இல் "வாகன ஒருங்குசேர்ப்பு கட்டிடம்" (நடுவில்) - அதன் வலது புறத்தில் "ஏவுதல் கட்டுப்பாட்டு மையம்" சற்றே வெளியே தெரிகிறது. தூரத்தில் ஏவுதிடல்கள் ஏ மற்றும் பி.

மேற்கோள்கள்

  1. "Kennedy Business Report". Annual Report FY2010. NASA (February 2011). பார்த்த நாள் August 22, 2011.
  2. "Kennedy Space Center Implementing NASA’s Strategies". NASA (2000). பார்த்த நாள் November 5, 2015.
  3. "APPENDIX 10 - GOVERNMENT ORGANIZATIONS SUPPORTING PROJECT MERCURY". NASA. பார்த்த நாள் November 6, 2015.
  4. "2. PROJECT SUPPORT FROM THE NASA Centers". NASA. பார்த்த நாள் November 6, 2015.
  5. "Mercury Mission Control". NASA. பார்த்த நாள் November 6, 2015.
  6. Lipartito, Kenneth; Butler, Orville (2007). 'A History of the Kennedy Space Center. University Press of Florida. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8130-3069-2.

உசாத்துணைகள்

  • லிபார்டிடோ, கென்னெத் மற்றும் பட்லர், ஆர்வில்.ஆர். "கென்னடி விண்வெளி மையத்தின் வரலாறு (2007)" (A History of the Kennedy Space Center)
  •  This article incorporates public domain material from websites or documents of the National Aeronautics and Space Administration.

வெளியிணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.