அப்பல்லோ 14

அப்பல்லோ 14 (Apollo 14) அமெரிக்க அப்பல்லோ திட்டத்தில் மனிதர் பயணித்த எட்டாவது திட்டமாகும். மேலும் சந்திரனில் தரையிறங்கிய மூன்றாவது திட்டமாகும். இதுவே இத்திட்ட வரிசையில் கடைசி 'ஹெச்' திட்ட ('H' mission) பயணமாகும். அதாவது துல்லியமாக சந்திரனில் தரையிறங்குவதோடு இரண்டு நாட்கள் நிலவில் தங்கி ஆய்வுகள் செய்யும் திட்டம். இதில் உலவு வாகனத்தை விட்டு இறங்கி சந்திரனில் நடப்பதும் அடக்கம்.

அப்பல்லோ 14
Apollo 14
திட்டச் சின்னம்
திட்ட விபரம்[1]
திட்டப்பெயர்: அப்பல்லோ 14
Apollo 14
விண்கலப் பெயர்:CSM: Kitty Hawk
LM: Antares
கட்டளைக் கலம்:சிஎம்-110
திணிவு 29,240 கிகி
சேவைக் கலம்:எஸ்எம்-110
நிலவுக் கலம்:எல்எம்-8
திணிவு 15,264 கிகி
உந்துகலன்:சட்டர்ன் V எஸ்ஏ-509
பயணக்குழு அளவு:3
ஏவுதளம்:கென்னடி விண்வெளி மையம்
புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
ஏவுதல்: சனவரி 31, 1971
21:03:02 UTC
சந்திரனில் இறக்கம்:பெப்ரவரி 5, 1971
09:18:11 UTC
Fra Mauro
3°38′43.08″S 17°28′16.90″W
(based on the International Astronomical Union
Mean Earth Polar Axis coordinate system)
சந்திரனில் இருந்த நேரம்:1 d 09 h 30 m 29 s
நிலவு மாதிரி நிறை:42.28 kg (93.21 lb)
இறக்கம்: பெப்ரவரி 9, 1971
21:05:00 UTC
தெற்குப் பசிபிக் பெருங்கடல்
27°1′S 172°39′W
கால அளவு: 9 நா 00 ம 01 நி 58 செ
சந்திரனைச் சுற்றிய நேரம்:2 d 18 h 35 m 39 s
பயணக்குழுப் படம்

இடமிருந்து வலம்: ரூசா, ஷெப்பர்ட், மிட்ச்செல்

திட்ட ஆணையாளர் ஆலன் ஷெபர்டு, கட்டளைக் கலன் விமானி ஸ்டூவர்ட் ரூசா, நிலவுக் கலன் விமானி எட்கர் மிட்செல் ஆகியோர் தமது ஒன்பது நாள் பயணத்தினை சனவரி 31, 1971 அன்று 4:04:02 உள்நாட்டுக் காலப்படி துவக்கினர். இது திட்டமிடப்பட்ட நேரத்தை விட 40 நிமிடங்கள் 2 விநாடிகள் காலதாமதமான தொடக்கமாகும். வானிலை கோளாறுகளால் இத்தகைய காலதாமதம் ஏற்பட்டது அப்பல்லோ திட்டத்தில் இதுவே முதல் முறையாகும்.[2]. ஃப்ரா மொரா அமைப்பில் பிப்ரவரி 5 அன்று ஷெபர்டும் மிட்செலும் தரையிறங்கினர். கைவிடப்பட்ட அப்பல்லோ 13 திட்டத்தின் தரையிறங்கும் இலக்கு இதுவேயாகும். இரண்டு நிலவில் நடக்கும் செயல்பாடுகளில் 42 கிலோகிராம் அளவிலான நிலவின் கற்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் நில அதிர்வு சோதனைகள் உட்பட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில்தான் ஷெபர்டு, பூமியிலிருந்து கொண்டு வந்த கோல்ப் மட்டைகளால், இரண்டு கோல்ப் பந்துகளை நிலவின் பரப்பில் அடித்தார். மொத்தம் 33 மணி நேரம் நிலவின் பரப்பில் ஷெபர்டும் மிட்செலும் கழித்தனர். அதில் 9½ மணி நேரம் நிலவில் இறங்கி ஆய்வுகள் செய்தனர்.

ஷெபர்டும் மிட்செலும் நிலவின் பரப்பில் இருந்தபோது ரூசா, கட்டளை/சேவைக் கலனில் இருந்தபடியே ஆய்வுகளை மேற்கொண்டார். மேலும் கலனிலிருந்தபடியே நிலவை படம் பிடித்தார். இப்பயணத்தின் போது அவர் நூற்றுக்கணக்கான விதைகளை எடுத்துச் சென்றிருந்தார். அவற்றில் பெரும்பாலானவை பூமிக்குத் திரும்பும்போது முளைவிட்டிருந்தன. அவை நிலா மரங்கள் என்று அழைக்கப்பட்டன. பிப்ரவர் 9 அன்று பூமிக்குத் திரும்பிய மூவரும் பசிபிக் பெருங்கடலில் இறங்கினர்.

உசாத்துணைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.