அடங்க மறு

அடங்க மறு (Adanga Maru), கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் தமிழில் வெளியான திரைப்படம். இத்திரைப்படத்தில் செயம் இரவி, ராசி கன்னா, சம்பத் இராச் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்[1]. இப்படம் சாம் சி. எசின்[2] இசையில், சத்தியன் சூரியன்ன் ஒளிப்பதிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2017இல் தொடங்கியது.

அடங்க மறு
இயக்கம்கார்த்திக் தங்கவேல்
தயாரிப்புசுசாதா விசயகுமார்
கதைகார்த்திக் தங்கவேல்
இசைசாம் சி. எசு
நடிப்புசெயம் இரவி
ராசி கன்னா
சம்பத் இராச்
ஒளிப்பதிவுசத்தியன் சூரியன்
படத்தொகுப்புஅந்தோணி.எல். ரூபென்
ஓட்டம்146 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு15 கோடி

நடிகர்கள்

கதை

பணியில் இருக்கும் போது செய்ய முடியாததை ஒரு முன்னாள் காவல் அலுவராக ஒருவர் செய்து முடிப்பதுதான் அடிப்படைக்கதை[4].கொலை வழக்கொன்றில் அதிகாரம் படைத்த குற்றவாளிகளை சுபாசு கைது செய்ததால், அவரின் குடும்பம் பலியாகிறது. பணி, குடும்பம் என எல்லாவற்றையும் இழந்த அவரிடம் மிஞ்சியிருப்பது கோபம் மட்டும்தான். தன் அறிவாலும் நுட்பங்களாலும் தன் எதிரிகளை அழிக்கின்றார்[5].

படப்பணிகள்

இத்திரைப்படம் கார்த்திக் தங்கவேலுவின் இயக்கத்தில்[6] , கெவின் குமார் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்ற உள்ளது குறித்து திசம்பர் 2017இல் செயம் இரவி குமுக ஊடகங்களில் அறிவித்தார். திசம்பர் 2017இல் தொடங்கிய இப்படத்தின் பணிகள் மே 2018இல் நிறைவடைந்தன.

இசைப்பணி

இப்படத்தின் பாடல், பின்னணி இசைப்பணிகளை சாம் மேற்கொண்டுள்ளார்.[7] ஆகத்து 2018இல் சோனி நிறுவனம் இப்படத்தின் பாடல்களை வெளியிட்டது.

Untitled
chronology
இலக்குமி அடங்க மறு வஞ்சகர் உலகம்
எண் தலைப்புபாடகர்கள் நீளம்
1. "ஆங்கு வாங்கு"  சாம் சி.எசு, முகேசு, எம்.எல்.ஆர் கார்த்திகேயன் 4:26
2. "சாயாளி"  சத்தியபிரகாசு, சின்மயி 5:15
3. "பச்சை துரோகங்கள்"  அரிச்சந்திரன் 3:46
4. "கார் இருள்"  சிவம் 3:07
மொத்த நீளம்:
17:34

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.