அக்கரோட்டு

அக்கரோட்டு (Juglans regia, Walnut) என அழைக்கப்படும் தாவரச் சாதியைச் சேர்ந்த ஒரு மரமாகும்.[1] தென்மேற்கு ஐரோப்பாவான பால்க்கன் பகுதியிலிருந்து, இமயமலைப் பகுதி மற்றும் தென்மேற்குச் சீனா வரை பரந்துள்ள பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இதன் மிகப் பெரிய காடுகள் கிர்கிஸ்தானில் உள்ளன.

அக்கரோட்டு
அக்கரோட்டு மரம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு: மக்னோலியோப்சிடா
வரிசை: ஃபேகேலெஸ்
குடும்பம்: ஜுக்லாந்தேசியே
பேரினம்: ஜுக்லான்ஸ்
இனம்: ஜு. ரீஜியா
இருசொற் பெயரீடு
ஜுக்லான்ஸ் ரீஜியா
லின்.

அக்கரோட்டு மரங்கள் 25 – 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. இவற்றின் அடிமரம் 2 மீட்டர் வரையான விட்டம் வரை வளரக்கூடும். பொதுவாக, இவை குட்டையான அடிமரத்தையும், பரந்த மேற்பகுதியையும் உடையவை, எனினும், அடர்ந்த காட்டுப்பகுதிகளில், ஒடுக்கமாகவும், உயரமாகவும் காணப்படுகின்றன. சூரிய ஒளியை விரும்புகின்ற இம்மரங்கள், சிறப்பாக வளர்வதற்கு முழுமையான சூரிய ஒளி தேவைப்படுகின்றது.

இதன் பட்டை வழவழப்பான வெள்ளிபோன்ற சாம்பல் நிறம் கொண்டது. எனினும் பட்டையில் ஆங்காங்கே அகன்ற வெடிப்புக்கள் காணப்படுகின்றன. இவற்றின் சிறு கிளைகளின் மையப் பகுதியில் காற்றிடைவெளிகள் உள்ளன. சுருள் வடிவில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இலைகள் 5, 7 அல்லது 9 எண்ணிக்கையில் இலைகளைக் கொண்ட கூட்டிலைகளாகும். இவை சுமார் 25-40 சதமமீட்டர் (சமீ) வரை நீளமுள்ளவையாக உள்ளன. இத் தொகுதியின் நுனியில் அமைந்த மூன்று இலைகளே பெரியவை. இவை ஏறத்தாழ 10-18 சமீ நீளமும், 6-8 சமீ அகலமும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. அடிப் பகுதியில் உள்ள இரண்டு இலைகளும் 5-8 சமீ நீளம் கொண்டு மிகச் சிறியவையாகக் காணப்படுகின்றன. ஆண், பெண் பூக்கள் தனித்தனியாக அமைந்துள்ளன. நீண்ட காம்பொன்றைச் சுற்றி ஆண் பூக்கள் அடர்ந்து காணப்பட நுனியில் 2-5 பெண் பூக்கள் அமைந்திருக்கும். தொங்கும் நிலையில் காணப்படும் இப் பூத்தொகுதியில் (catkins) காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகின்றது.

ஊட்டச்சத்துப் பெறுமானம்

100 கிராம் கோது நீக்கிய விதையில் இருப்பவை:

வாழ்க்கைச் சுழற்சி

இவற்றையும் பார்க்கவும்

பிற திட்டங்களில்

மேற்கோள்கள்

  1. அறிவியல் களஞ்சியம், தொகுதி-1,தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-10.1986.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.