2 ஸ்டேட்ஸ்
2 ஸ்டேட்ஸ் என்பது 2014 ஏப்ரல் 18 வெளிவந்த பாலிவுட் காதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 2 ஸ்டேட்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ் நாவலை அடிப்படையாக வைத்து அபிஷேக் வர்மன் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் கபூர் பஞ்சாபிப் பையனாகவும் மற்றும் கதாநாயகி அலீயா பட் தமிழ்ப் பெண்ணாகவும் நடித்துள்ளார்கள். தமிழ்த் திரைப்பட நடிகை ரேவதி, அலீயா பட்டின் தாயாக நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.
2 ஸ்டேட்ஸ் | |
---|---|
![]() சுவரொட்டி | |
இயக்கம் | அபிஷேக் வர்மன் |
தயாரிப்பு | சஜித் நதியத்வாலா கரண் ஜோஹர் |
கதை | சேத்தன் பகத் |
மூலக்கதை | 2 ஸ்டேட்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ், |
இசை | ஷங்கர்–எஹ்சான்–லாய் |
நடிப்பு | அர்ஜுன் கபூர் அலீயா பட் ரேவதி அம்ரிதா சிங் |
ஒளிப்பதிவு | பினோத் பிரதான் ஆகாஷ் பாட்டீல் |
படத்தொகுப்பு | நம்ரதா ராவ் |
கலையகம் | தர்மா புரொடக்சன்ஸ் சஜித் நதியத்வாலா |
விநியோகம் | யுடிவி மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | 2014-04-18 |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
நடிகர்கள்
- அர்ஜுன் கபூர் - கிரிஷ் மல்ஹோத்ரா
- அலீயா பட் - அனன்யா சுவாமிநாதன்
- ரேவதி
- அம்ரிதா சிங்
- சிவகுமார் சுப்ரமணியம்
- ரோனித் ராய்
- சாரங் நடராஜன்
கதை
பஞ்சாபைச் சேர்ந்த இளைஞனுக்கும், தமிழ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இடையில் காதல் மலர்கிறது. கல்லூரியில் காதல் வயப்பட்ட இருவரும், தங்கள் காதலை தொடர்கின்றனர். வேலை கிடைத்தவுடன், தங்கள் பெற்றோரை சம்மதிக்க முயல்கின்றனர். தங்கள் குடும்பத்துப் பிரச்சனைகளை இருவருமாக தீர்த்து வைத்து, தங்கள் பெற்றோரை சம்மதிக்கச் செய்து, திருமணம் முடிக்கின்றனர். திரைப்படத்தின் இடையே தமிழ் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
படப்பிடிப்பு
சென்னை, டெல்லி, அகமதாபாத் மற்றும் இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது.
வெளி இணைப்புகள்
- 2 States - பாலிவுட் ஹங்கமாவில்