2013 பாட்னா தொடர் குண்டுவெடிப்புகள்
2013-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் நாள் , இந்தியாவின் பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் எட்டு இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இதில் 5 பேர் பலியாயினர் மற்றும் 66 பேர் காயமுற்றனர்.[1][2][3] இந்த குண்டுவெடிப்புகளுக்கு எவரும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை[4]
2013 பாட்னா தொடர் குண்டுவெடிப்புகள் | |
---|---|
நிகழ்விடம் | பாட்னா,பீகார், இந்தியா |
நாள் | 27 அக்டோபர் 2013 (UTC+05:30) |
ஆயுதம்(ங்கள்) | 8 நாட்டு வெடிகுண்டுகள்[1] |
இறப்பு(கள்) | 5[1] |
காயமடைந்தவர் | 66[1] |
பாட்னா தொடர்வண்டி நிலையம் குண்டுவெடிப்புக்கள்
27 அக்டோபர் அன்று பாட்னா தொடர்வண்டி நிலையத்தின் பத்தாவது நடைமேடையில் ஓர் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். மேலும் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்கப்பட்டன[5].
காந்தி மைதான் குண்டு வெடிப்புகள்
காந்தி மைதானில் நடைபெற்ற நரேந்திர மோடியின் தேர்தல் பேரணியில் ஐந்து குண்டுகள் வெடித்தன. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்[5] . இந்த மைதானத்திற்கு அருகே இருந்த திரையரங்கில் வெடித்த குண்டில் ஆறு பேர் காயமடைந்தனர்[6]. மோடி அவர்கள் பேசிய மேடையின் கீழ் வெடிக்காத குண்டு ஒன்று கைபெற்றபட்டது. மாலை ஐந்து மணி அளவில் மைதானத்தில் ஓர் குப்பை மேட்டின் கீழே மேலும் ஒரு குண்டு வெடித்தது. [1]
மேற்கோள்கள்
- Simantik Dowerah (27 October 2013). "Patna blasts live: 8th explosion hits Gandhi Maidan at 5.10 pm".
- Shubham Ghosh (27 October 2013). "Hunkaar Rally updates: 7 blasts in Patna, say reports".
- http://www.hindustantimes.com/india-news/serial-blasts-at-patna-1-dead-16-injured/article1-1141012.aspx
- http://www.bloomberg.com/news/2013-10-27/serial-blasts-kill-five-in-india-s-patna-before-modi-poll-rally.html
- Express News Service (27 October 2013). "LIVE: Modi attacks Rahul, says nation feels bad on dynasty politics".
- The Hindu (27 October 2013). "Serial bomb blasts at Modi rally, several injured".