மே 2014 சென்னை மத்திய தொடர்வண்டி நிலைய குண்டுவெடிப்பு

2014இல் மே 1 அன்று, காலை 7:15 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9ஆம் நடைமேடையில் குண்டு வெடித்தது.[1][2]இந்த நடைமேடையில் குவகாத்தி-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபொழுது குண்டுவெடித்தது. இதன் காரணமாக 24 வயது சுவாதி என்ற பெண் பயணி பலியானார்; 16 பேர் காயமடைந்தனர். காயமடைந்தோர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

மே 2014 சென்னை குண்டுவெடிப்பு
இடம்சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
நாள்1 மே 2014
07:15 இசீநே (ஒசநே+05:30)
தாக்குதல்
வகை
குண்டுவெடிப்பு
இறப்பு(கள்)1
காயமடைந்தோர்30+

புலனாய்வு

  • இந்த குண்டுவெடிப்பினை சிறப்புப் புலனாய்வுக் குழுவொன்று விசாரிக்குமென தமிழகக் காவல்துறை டி. ஜி. பி. கே. இராமனுஜம் தெரிவித்தார்.[3]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.