1729 இன் வால்வெள்ளி

1729 இன் வால்வெள்ளி (Comet of 1729, அல்லது C/1729 P1 அல்லது சரபாத் வால்வெள்ளி (Comet Sarabat) என்பது காலச்சுழற்சி அற்ற ஒரு வால்வெள்ளி ஆகும். தனி ஒளிப்பொலிவெண் −3[2] என்ற எண்ணைக் கொண்ட இவ்வால்வெள்ளி இதுவரை அவதானிக்கப்பட்டவற்றுள் ஒளிர்ப்புக் கூடியதாகும்.[3] எனவே இதுவே இதுவரை காணப்பட்ட வால்வெள்ளிகளுள் மிகப் பெரியதாகக் கருதப்படுகிறது.[4]

சி/1729 பி1
C/1729 P1
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்): நிக்கொலாசு சரபாத்
கண்டுபிடித்த நாள்: ஆகத்து 1, 1729
வேறு குறியீடுகள்: C/1729 P1, 1729,
1729 இன் வால்வெள்ளி
சுற்றுவட்ட இயல்புகள் A
ஊழி: 2352731.148
(சூன் 16, 1729)
ஞாயிற்றண்மைத் தூரம்: 4.05054 வா.அ[1]
மையப்பிறழ்ச்சி: 1 (அனுமானம்)
சாய்வு: 77.095°[1]
கடைசி அண்மைப்புள்ளி: சூன் 16, 1729[1]
அடுத்த அண்மைப்புள்ளி: தெரியவில்லை

கண்டுபிடிப்பு

இந்த வால்வெள்ளி எக்கூலியசு என்ற விண்மீன் குழாமில் இருப்பதை நிக்கொலாசு சரபாத் என்ற குருவானவர் கண்டுபிடித்தார். மர்சேய் பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியரும், இயேசு சபையைச் சேர்ந்தவருமான இவர் 1729 ஆகத்து 1 இல் அதிகாலையில் இதனைக் கண்டுபிடித்தார்.[5]

மேற்கோள்கள்

  1. "JPL Small-Body Database Browser: C/1729 P1". Jet Propulsion Laboratory (1730-01-16 last obs (only 3 observations using a two-body model; very poorly determined)). பார்த்த நாள் 2011-07-26.
  2. Kidger, M. 'Comet Hale-Bopp Light Curve', NASA JPL, accessed 24-Nov-2008
  3. இது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் சீசர் வால்வெள்ளி (C/-43 K1) −3.3 தனி ஒளிப்பொலிவெண் கொண்டதாக இருந்தது; cp. John T. Ramsey & A. Lewis Licht, The Comet of 44 B.C. and Caesar's Funeral Games, Atlanta, 1997, ISBN 0-7885-0273-5.
  4. Moore, P. The Data Book of Astronomy, CRC, 2000, p.232
  5. Lynn, W. T. 'Sarrabat and the comet of 1729', The Observatory, Vol. 19, p. 239–240 (1896).

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.