வேளச்சேரி இரயில் நிலையம்

வேளச்சேரி தொடருந்து நிலையம் (Velachery railway station) சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டத்தைச் சார்ந்த வேளச்சேரியில் உள்ள தொடருந்து நிலையம் ஆகும்.

வரலாறு

19 நவம்பர் 2007 அன்று வேளச்சேரி தொடருந்து நிலையம் செயல்பட துவங்கியது. வேளச்சேரி தொடருந்து நிலையமானது சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இடையே ஒரு எல்லை போல் செயல்படுகிறது.

அமைவிடம்

இங்கு உள்ள நடைமேடையின் நீளம் 280 மீட்டர் ஆகும்.[1] தொடருந்து நிலைய வளாகத்தில் 12,250 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட திறந்தவெளி வாகன நிறுத்த வசதி உள்ளது.[2] தொடருந்து நிலையத்தில் இருந்து அரை கி.மீ தொலைவில் (வேளச்சேரி) விஜயநகரம் பேருந்து நிலையம் உள்ளது. அங்கிருந்து சென்னையின் பிற பகுதிகளுக்கு பேருந்தில் செல்லலாம்.

போக்குவரத்து

இந்த நிலையத்தில் இருந்து பூங்கா நகர் வரை தொடர்வண்டியில் செல்லலாம். பெருங்குடி, தரமணி, திருவான்மியூர், இந்திரா நகர், கஸ்தூரிபா நகர், மைலாப்பூர் வழியாக சென்னை சென்ட்ரல்(பூங்கா நகர்) நிலையத்தை அடையலாம்.

படங்கள்

சான்றுகள்

  1. "MRTS Phase-II Extension". Development of MRTS in Chennai. CMDA. பார்த்த நாள் 20 Aug 2012.
  2. R.Ramanathan. "Presentation on MRTS & Rail facilities in and around Chennai". Traffic Transportation and Parking - Session 2. CMDA, Chennai. பார்த்த நாள் 19 August 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.