ரென்மின்பி
ரென்மின்பி (人民币, rளூnmங்nbக்) அல்லது ஆர்.எம்.பி. (RMB), என்னும் மக்களின் நாணயம் சீன மக்கள் குடியரசின் நாணயம் ஆகும். ஒரு யுவான், 10 ”ஜியாவோ”க்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஜியாவோ, 10 சீன ஃபென்களுக்குச் சமம். ரென்மின்பி பணம், ஒரு ஜியாவோவில் தொடங்கி, 100 யுவான் வரையில் உள்ளது. காசுகள் ஒரு ஃபென்னில் டொடங்கி ஒரு யுவான் வரையிலும் அச்சடிக்கப்படுகின்றன. ரென்மின்பி நாணயம், சீனாவில் மட்டுமே செல்லுபடியாகும். ஹாங்காங், சீனக் குடியரசு, மக்காவு பகுதிகளில் செல்லுபடியாகாது. ஆயினும், ஆங்காங், மக்காவு பகுதிகளில் ஏற்கப்பட்டு, வங்கிகளில் கணக்கு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். 2005 ஆம் ஆண்டுவரையில், அமெரிக்க டாலருக்கு இணையாக மாற்றப்பட்டது. திட்டமிட்ட பொருளாதாரத்தின் காரணமாக, சீனப் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது.
ரென்மின்பி | |
---|---|
人民币 சீனம் | |
2005 வெளியிட்ட ரென்மின்பி | |
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | CNY |
வகைப்பாடுகள் | |
சிற்றலகு | |
1/10 | ஜியாவ் (角) |
1/100 | ஃபன் (分) |
பன்மை | The language(s) of this currency does not have a morphological plural distinction. |
குறியீடு | ூ |
வேறுபெயர் | குவாய் (块) |
ஜியாவ் (角) | மாவ் (毛) |
வங்கிப் பணமுறிகள் | |
அதிகமான பயன்பாடு | ூ1, ூ5, ூ10, ூ20, ூ50, ூ100 |
Rarely used | ூ2 |
Coins | |
Freq. used | 1, 2, 5 ஜியாவ் |
Rarely used | 1, 2, 5 ஃபன் |
மக்கள்தொகையியல் | |
Official user(s) | வார்ப்புரு:PRC-main |
Unofficial user(s) | ![]() ![]() |
Issuance | |
நடுவண் வங்கி | சீன மக்களின் வங்கி |
Website | www.pbc.gov.cn |
Valuation | |
Inflation | 8.7% |
Source | National Bureau of Statistics of China, Feb 2008. |
Pegged with | பல்வேறு நாணயங்கள் |
தயாரிப்பு
இந்த பணத்தை தயாரிக்கும் பணியை சீன பணத்தாள் அச்சடிப்பு, வார்ப்பு நிறுவனம் செய்கிறது. இதன் தலைமையகம் பெய்ஜிங் நகரில் உள்ளது. அச்சடிக்கும் கிளைகள் பெய்ஜிங், சாங்காய், செங்குடு, இஃக்சியான், ஷிஜியாசுஆங், நன்சாங் உள்ளிட்ட நகரங்களில் உள்ளன. காசுகளை வார்க்கும் அலுவலகங்கள் நாஞ்சிங், ஷாங்காய், ஷென்யாங் ஆகிய நகர்களில் உள்ளன. [1] சீன மக்கள் வங்கி, தனக்கென தனித்துவமான அச்சடிக்கும் முறையைக் கொண்டுள்ளது. [2]
தாள்கள்
1948 ஆம் ஆண்டு, திசம்பர் 1 ஆம் நாள், புதிதாக உருவான சீன மக்கள் வங்கி, பணத்தை வினியோகித்தது. 1, 5, 10, 20, 50, 100, 1000 யுவான் என்ற எண்ணிக்கைகளில் இவை வினொயோகிக்கப்பட்டன. 62 வடிவமைப்புகள் இவற்றில் பயன்படுத்தப்பட்டன. 1955 ஆம் சீன மக்கள் வங்கி, சீனக் குடியரசு என்ற வரிகள் இந்த பணங்களில் எழுதப்பட்டிருந்தன. [3] ரென்மின்பி என்ற பெயர், 1949 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.
காசுகள்
1955 இல், 1,2, 5 ஃபென் காசுகள் அலுமினியத்தில் செய்யப்பட்டு வெளியாயின. 1980 இல், 1, 2, 5 ஜியாவோ காசுகள் வெளியிடப்பட்டன. சில ஆண்டுகளுக்குப் பின்னர், 1,2 ஃபென் காசுகள் செல்லாக் காசுகள் ஆயின. அடுத்த ஆண்டே 5 ஃபென் காசும் மதிப்பிழந்தது. இவற்றின் வடிவமும் மாற்றப்பட்டது.
உலக வர்த்தகம்
2009 ஆம் ஆண்டிற்கு முன்னர், சீன ரென்மின்பி காசுகள் உலக சந்தையில் இடம்பிடிக்கவில்லை. சீன ரசின் கெடுபிடிகளால், சீனப் பணம் இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்டவில்லை. சீன, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உண்டான வர்த்தகத்தில் அமெரிக்க டாலர்களே பயன்படுத்தப்பட்டன. சீனப் பணத்தை வெளிநாட்டு நிறுவனங்கள் கொண்டிருக்கமுடியவில்லை. சீனாவிலும் அமெரிக்க டாலர்களை கொண்டிருக்கமுடியவில்லை. எனவே, வர்த்தகங்கள் சீன மக்கள் வங்கியின் மூலம் மேற்கொள்ளப்பட்டன. வெளிநாட்டு ஆள், இவ்வங்கியில் டாலர்களாக பணத்தைத் தருவார். இது, உள்நாட்டு மாற்றுவிகிதத்தில், சீனப் பணமாக (ரென்மின்பி) மாற்றி சீன நிறுவனங்களுக்குத் தரும். ரென்மின்பியை உலகப் பணமாக மாற்றுவதற்காக, வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, உருசியா, வியட்நாம், தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுடனான வர்த்தகத்தில் சீனப் பணத்திலேயே தொடரலாம் என்று ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டது. விரைவில் ஆஸ்திரேலியாவும் இப்பட்டியலில் இணையவுள்ளது.[4]
வடிவமைப்பு
பணத்தாள்களில் சீன எண்களிலும், அரபிய எண்களிலும் பணத்தின் மதிப்பு எழுதப்பட்டிருக்கும். சீன மக்கள் வங்கி என்ற பெயர் மங்கோலியம், திபெத்தியம், உய்குர் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்டிருக்கும். சீனப் பின்யின் எழுத்துகளில் ழோங்குவோ ரென்மின் யின்ஹாங் என்ற பெயர் இருக்கும். பார்வையற்றோருக்காக, தாளின் வலதுபுறத்தில் சீன பிரெய்லியிலும் எழுதப்பட்டுள்ளன.
1999 இல் 50யுவான் சிவப்பு பணத்தில், சீன மக்கள் வங்கியின் ஐம்பது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் வகையில், சின்னம் பொறிக்கப்பட்டது. முன்பக்கத்தில் மா சே துங் படமும், பின்பக்கத்தில் விலங்குகளின் படமும் பொறிக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டை புது ஆயிரம் ஆண்டின் தொடக்கமாக நினைவுகூற, பாலிமரில் செய்யப்பட்ட ஆரஞ்சு நிற பணம் அச்சடிக்கபப்ட்டது. 100 யுவான் மதிப்புடைய இதில், டிராகன் படமும், சீன ஆயிர ஆண்டு நினைவுச் சின்னமும் பொறிக்கப்பட்டன. 2008 ஒலிம்பிக் போட்டியின் நினைவாக, ஒலிம்பிக் நடைபெற்ற சீன அரங்கத்தின் (பேர்ட்ஸ் நெஸ்ட்) சின்னத்தையும், வட்டெறியும் வீரர், பிற விளையாட்டுகள் ஆகியனவும் அச்சடிக்கப்பட்டன. தேசிய மக்கள் பேராயத்தைச் சேர்ந்தவர்கள், எதிர்கால பணத்தாள்களில் சுன் இ சியன், டங் சியாவுபிங் ஆகியோரின் படங்களை அச்சிட வேண்டும் என்றும் கருத்து கூறினர்.
சிறுபான்மையினர் பகுதிகள் ரென்மின்பி

ரென்மின்பி, சிறுபான்மையினர் பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
- மங்கோலியா: உள்ளூர் மங்கோலியப் பகுதிகளில், யுவான் என்னும் காசை டுக்ரெக் என அழைப்பர். மங்கோலிய குடியரசுப் பகுதியில் யுவானி என்று அழைப்பர். ரென்மின்பி என்ற பெயரை மங்கோலிய மொழியில் அரடின் ஜோகோஸ் என்பர்.
- திபெத்: திபெத் தன்னாட்சிப் பகுதியில் யுவானை கோர் என்பர். ஒரு கோர், பத்து கோர்சுருக்கு சமம். ஒரு கோர்சுர் 10 காருக்கு சமம். ரென்மின்பி என்னும் பெயரை திபெத்திய மொழியில் மிமங்ஃசோங்கு என்பர்.
சீனாவுக்கு வெளியில் ரென்மின்பி
சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளான ஆங்காங், மக்காவு பகுதிகளில் தனி நாணயங்கள் உள்ளன. ஹாங்காங்கில் ஹாங்காங் டாலரும், மக்காவ் பகுதியில் மவவ் படகாவு செல்லத்தக்க நாணயங்கள். மக்காவில் ரென்மின்பியின் பயன்பாடு மிகக் குறைவே. [5] இதுதவிர பாக்கிஸ்தான், மங்கோலியா ஆகிய நாடுகளிலும் ரென்மின்பியின் பயன்பாடு உள்ளது. கம்போடியா, லாவோஸ், மியான்மர் நாட்டு எல்லைகளில் ரென்மின்பியை பயன்படுத்துவர்.
மதிப்பு
முன்பு, ஒரு அமெரிக்க டாலருக்கு 2.46 யுவான்கள் சமம் என்ற மாற்றுவீதம் இருந்தது. சீனாவின் பொருளாதார மாற்றத்தினால், மாற்றுவீதமும் மாறியது. 2013, ஆகஸ்டு மாதத்தில், ஒரு டாலருக்கு 6.109 யுவான் என்ற அளவில் வீதம் இருந்தது.
சான்றுகள்
- China Banknote Printing and Minting
- Article 2, "The People's Bank of China Law of the People's Republic of China" (2003-12-27).
- "中国最早的一张人民币". Cjiyou.net (2007-10-22). பார்த்த நாள் 2012-04-06.
- [http://www.nytimes.com/2011/02/11/business/global/11yuan.html "In China, Tentative Steps Toward a Global Currency"] article by David Barboza in த நியூயார்க் டைம்ஸ் February 11, 2011
- "Macao gets green light for RMB services". China Daily. 2004-08-05. http://www.chinadaily.com.cn/english/doc/2004-08/05/content_359235.htm. பார்த்த நாள்: 2007-03-22.
வெளி இணைப்புகள்
- யுவான் ரென்மின்பி - சீனாவின் வரலாற்று மற்றும் தற்போதைய ரூபாய் நோட்டுகள் (CNY / RMB) 1953-2019 (ஆங்கிலம்) (செருமன் மொழி) (பிரெஞ்சு)
- யுவான் சான்றிதழ்கள் - சீன மக்கள் குடியரசின் அந்நிய செலாவணி சான்றிதழ்கள் (FEC) 1980-1994 (ஆங்கிலம்) (செருமன் மொழி) (பிரெஞ்சு)