மேலாண்மை கல்வித் துறை இ. தொ. க ரூர்க்கி
மேலாண்மை கல்வித் துறை இ. தொ. க ரூர்க்கி (Department of Management Studies, DoMS) இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கியில் [1] இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் மேலாண்மைக் கல்வி வழங்கும் திட்டத்தின்படி 1998ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஓர் மேலாண்மை பள்ளியாகும். இங்கு ஈராண்டு முழுநேர எம்பிஏ பாடதிட்டமும் பல்வேறு சிறப்புப் பாடங்களில் முனைவர் பட்டத்திட்டங்களும் வழங்கப்படுகின்றன.
வளாகம்
இ.தொ.க ரூர்க்கியின் மேலாண்மைப் பள்ளி இதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இருதள கட்டிடமொன்றில் இயங்குகிறது. இதில் வகுப்பு அறைகள், கணினி மையம், நூலகம், ஒலி ஒளி உதவிகளுடன் கூடிய அரங்கம் ஆகியன உள்ளன. இந்தக் கட்டிடம் முழுமையும் கம்பியில்லா இணைய பரப்பு (வை-ஃபை) வழங்கப்பட்டுள்ளது.
பட்டப்படிப்பு
இங்கு எம்பிஏ பட்டப்படிப்பு கீழ்காணும் சிறப்புப் பாடங்களில் ஏதேனும் இரண்டில் விருப்பத்தேர்வு பெறுமாறு அமைக்கப்பட்டுள்ளது: MBA at IIT Roorkee is it offers a dual specialization in any two of the following categories:
- சந்தைப்படுத்துதல்
- நிதி
- தகவல் தொழில்நுட்பம்
- இயக்கங்கள்
சேர்க்கைகள்
ஒவ்வொரு ஆண்டும் இ.தொ.கழகங்களும் இந்திய அறிவியல் கழகமும் இணைந்து நடத்தும் ஒருங்கிணைந்த மேலாண்மை நுழைவு தேர்வு (JMET) வழியாக சேர்க்கைகள் நடைபெறுகின்றன.[2]. தேர்விற்குப் பிறகு இப்பள்ளியின் இணையதளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கி விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள், முந்தைய கல்விநிறுவனங்களில் நிலையான மதிப்பெண்கள், தகுதிகள் மற்றும் வேலை துய்ப்பறிவு ஆகியன கொண்டு குழு உரையாடல்/நேர்காணலுக்கு அழைக்கப்படுகின்றனர்.
மேற்கோள்கள்
- IIT management programmes தி இந்து, October 25, 2004.
- schools that use JMET scores.. தி இந்து, October 1, 2007.