பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்
பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ராமையா எழுதி, ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், சரோஜாதேவி, சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ. பீம்சிங் |
தயாரிப்பு | வி. அருணாசலம் சாவித்திரி பிக்சர்ஸ் சின்ன அண்ணாமலை |
கதை | பி. எஸ். ராமையா |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் சகஸ்ரநாமம் டி. ஆர். ராமச்சந்திரன் வி. ஆர். ராஜகோபால் சாந்தினி லட்சுமி பி. சரோஜாதேவி |
ஒளிப்பதிவு | கர்ணன் |
வெளியீடு | சூலை 10, 1959 |
நீளம் | 14614 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். கண்ணதாசன், கே. எஸ். கோபாலகிருஷ்ணன், கு. மா. பாலசுப்பிரமணியம் ஆகியோர் பாடல்களை இயற்றினர். சுப்பிரமணிய பாரதியார் இயற்றிய பாடலொன்றும் திரைப்படத்தில் இடம்பெற்றது. எம். எல். வசந்தகுமாரி, (ராதா) ஜெயலட்சுமி, சூலமங்கலம் ராஜலட்சுமி, டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ், எஸ். சி. கிருஷ்ணன், வி. டி. ராஜகோபாலன், சீர்காழி கோவிந்தராஜன், கே. ஜமுனாராணி, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. ரத்னமாலா, பி. லீலா, பி. சுசீலா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]
No | Songs | Singers | Lyrics | Length(m:ss) |
---|---|---|---|---|
1 | இன்று நேற்று வந்த | பி. பி. ஸ்ரீநிவாஸ் & கே. ஜமுனாராணி | கண்ணதாசன் | 05:52 |
2 | மன்னாதி மன்னன் இங்கே | பி. சுசீலா | ||
3 | யாரோ நீ யாரோ | டி. எம் சௌந்தரராஜன் & பி. சுசீலா | 03:21 | |
4 | மைனா சிட்டு மனசு | டி. எம் சௌந்தரராஜன் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் | 02:57 |
5 | நான் சுகவாசி, தினம் கைவீசி | சீர்காழி கோவிந்தராஜன் | ||
6 | ஒளி படைத்த கண்ணினாய் வாவா | எம். எல். வசந்தகுமாரி & (ராதா) ஜெயலட்சுமி | சுப்பிரமணிய பாரதியார் | |
7 | சின்னப் பொண்ணு சிரிக்குது | ஏ. பி. கோமளா & ஏ. ஜி. ரத்னமாலா | கு. மா. பாலசுப்பிரமணியம் | |
8 | அழகு ராணி பொண்ணே | எஸ். சி. கிருஷ்ணன், வி. டி. ராஜகோபாலன் & கே. ஜமுனாராணி | ||
9 | தேச சுதந்திரம் தேடி வாங்கிய (வ. உ. சி. பற்றிய இசை நாடகம்) | பி. லீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி குழுவினர் |
மேற்கோள்கள்
- ராண்டார் கை (2 அக்டோபர் 2011). "President Panchatcharam 1959". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/president-panchatcharam-1959/article2504634.ece. பார்த்த நாள்: 24 அக்டோபர் 2016.
- கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 178.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.