பகவதி சரண் வர்மா

பகவதி சரண் வர்மா என்பவர் இந்தி மொழிக் கவிஞர் ஆவார். இவர் பல புதினங்களை எழுதியுள்ளார். அவற்றுள் சித்ரலேகா என்ற புதினம் குறிப்பிடத்தக்கது. இதைத் தழுவி, 1941, 1964-ஆம் ஆண்டுகளில் இரண்டு இந்தித் திரைப்படங்கள் வெளியாகி வெற்றியடைந்தன.[1][2]

1961-ஆம் ஆண்டில் இந்தி மொழிக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார். இது பூலே பிஸ்ரே சித்ரா என்ற நூலுக்காக வழங்கப்பட்டது.[3] 1971-ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[4]

1978-ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[5]

எழுதியவை

புதினங்கள்

  • பதன்
  • சித்ரலேகா
  • தீன் வர்ஷ்
  • டேடே மேடே ராஸ்தே
  • அப்னே கிலௌனே
  • பூலே பிஸ்ரே சித்ர

சான்றுகள்

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.