நிலக்கடலை
நிலக்கடலை அல்லது வேர்க்கடலை அல்லது கச்சான் (peanut) என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரம் ஆகும். இது நடு தென் அமெரிக்காவுக்கு பூர்வீகமானது. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன.
நிலக் கடலை (Arachis hypogaea) | |
---|---|
![]() | |
வேர்க்கடலை (நிலக் கடலை) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | திசுவுடைத் தாவரங்கள் |
வகுப்பு: | மாக்னோலிஃபைடா |
வரிசை: | ஃபேபேலிஸ் |
குடும்பம்: | பூக்கும் தாவரம் |
துணைக்குடும்பம்: | ஃபேபுய்டியா |
சிற்றினம்: | அஸ்கினோமேனானியே |
பேரினம்: | அராக்கிஸ் |
இனம்: | ஹைபோஜியா |
இருசொற் பெயரீடு | |
அராக்கிஸ் ஹைபோஜியா லி கரோலஸ் லின்னேயஸ் | |
இது வட்டார வழக்குகளில் வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக்கொட்டை (மல்லாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. நிலக்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது. வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. பொடித்து இனிப்புருண்டைகளாக தயாரிக்கப்படுகிறது. கடலை காந்தியடிகளுக்குப் பிடித்த உணவாகும்.
நோய்கள்
பூஞ்சணங்கள், நச்சுக் கிருமிகளால் ஏற்படும் நோய்கள் [(உ-ம்) இலைப்புள்ளி நோய்] நிலக்கடலையின் மகசூலைக் குறைக்கக்கூடிய பல்வேறு காரணிகளுள் முக்கியப் பங்கு வகிக்கின்றன[1].
பயன்கள்
நிலக்கடலை, valencia, raw 100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து | |||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆற்றல் 570 kcal 2390 kJ | |||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||
Link to full USDA Database entry ஐக்கிய அமெரிக்கா அரசின் வயதுக்கு வந்தவருக்கான, உட்கொள்ளல் பரிந்துரை . |
நிலக்கடலையில் மாங்கனீசு சத்து அதிகமாக உள்ளது.நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துகள் நமது உடலுக்கு கிடைக்கவும் இது பயன்படுகிறது.நிலக்கடலையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இதய வால்வுகளை பாதுக்காக்கிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடண்ட் நோயிலிருந்து பாதுக்காப்பதோடு இளமையையும் பராமரிக்கவும் செய்கிறது.நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது தீமை செயும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது.நிலக்கடலையில் உள்ள ஒமேகா -3 சத்தானாது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மேற்கோள்கள்
- "நிலக்கடலையில் நோய்த் தடுப்பு முறைகள்". தினமணி. 13 ஆகஸ்டு 2015. http://www.dinamani.com/agriculture/2015/08/13/நிலக்கடலையில்-நோய்த்-தடுப்/article2971518.ece. பார்த்த நாள்: 13 ஆகத்து 2015.