தென்னாபிரிக்கக் குடியரசு
தென்னாப்பிரிக்கக் குடியரசு (South African Republic, டச்சு: Zuid-Afrikaansche Republiek, ZAR), பெரும்பாலும் டிரான்சுவால் என்றும் சிலநேரங்களில் டிரான்சுவால் குடியரசு ( Republic of Transvaal) என்றும் அறியப்படும் தன்னாட்சியான பன்னாட்டு ஏற்பு பெற்ற நாடு தென்னாப்பிரிக்காவில் 1852 முதல் 1902 வரை இருந்தது. இந்த நாடு முதல் பூவர் போர் எனக் குறிப்பிடப்படும் போரில் பிரித்தானியரை வீழ்த்தியது. மே 31, 1902இல் நடந்த இரண்டாம் பூவர் போரின் இறுதிவரை தன்னாட்சியுடன் திகழ்ந்தது. இரண்டாம் போரில் பிரித்தானியரிடம் தோற்று சரணடைந்தது. இப்போருக்குப் பின்னர் இக்குடியரசு இருந்த பகுதி டிரான்சுவால் குடியேற்றம் என அழைக்கப்பட்டது. முதல் உலகப் போர் மூண்டபோது சிறிய எண்ணிக்கையிலான பூர்கள் மாரிட்சு புரட்சியை முன்நடத்தி மைய சக்திகளுடன் கூட்டு சேர்ந்தனர்; விடுதலை பெறுவதற்கான இவர்களது இம்முயற்சி தோல்வியடைந்தது.
தென்னாப்பிரிக்கக் குடியரசு Zuid-Afrikaansche Republiek (டச்சு மொழி) | |||||
| |||||
| |||||
நாட்டுப்பண் டிரான்சுவாலீசு வொல்க்சுலீடு | |||||
![]() தென்னாப்பிரிக்கக் குடியரசு அமைவிடம் 1890இல் தென்னாப்பிரிக்கக் குடியரசின் அமைவிடம். | |||||
தலைநகரம் | பிரிட்டோரியா 25°43′S 28°14′E | ||||
மொழி(கள்) | டச்சு | ||||
சமயம் | நெதர்டுச்சு எர்வோர்ம்தெ கெர்க் (டச்சு சீர்திருத்தத் திருச்சபை) | ||||
அரசாங்கம் | குடியரசு | ||||
அரசுத் தலைவர் | |||||
- | 1857–1863 | மார்த்தினூசு வெசல் பிரிடோரியசு | |||
- | 1883–1902 | பவுல் குருகர் | |||
- | 1900–1902 | ஷாக் வில்லெம் பர்கர் (பொறுப்பு) | |||
வரலாறு | |||||
- | உருவாக்கம் | 17 சனவரி 1852 | |||
- | முதல் பூவர் போர் | 20 திசம்பர் 1881 | |||
- | தன்னாட்சி | 27 பெப்ரவரி 1884 | |||
- | இரண்டாம் பூவர் போர் | 11 அக்டோபர் 1899 | |||
- | வெரீனிகிங் உடன்பாடு | 31 மே 1902 | |||
பரப்பளவு | |||||
- | 1870[1] | 1,91,789 km² (74,050 sq mi) | |||
மக்கள்தொகை | |||||
- | 1870[1] est. | 1,20,000 | |||
அடர்த்தி | 0.6 /km² (1.6 /sq mi) | ||||
நாணயம் | சூட் ஆபிரிகானீசு பாண்டு (தென்னாப்பிரிக்க பவுண்டு) | ||||
தற்போதைய பகுதிகள் | ![]() | ||||
பெயரும் சொல்லியலும்
செட்சு-ஆபிரிகான்ச்செ ரிபப்ளீக் (ZAR)
அரசியலமைப்பின்படி நாட்டின் பெயர் செட்சு-ஆபிரிகான்ச்செ ரிபப்ளீக் (தென்னாப்பிரிக்கக் குடியரசு அல்லது சுருக்கமாக சார் ZAR) ஆகும். வால் ஆற்றின் புறத்தேயுள்ளே பகுதியாதலால் (டிரான்சு) பெரும்பாலானோர் சார் டிரான்சுவால், என்றும் அழைத்தனர்.[2] குறிப்பாக "டிரான்சுவால்" என்ற பெயர் பின்னர் தென்னாபிரிக்கக் குடியரசு என்ற பெயரை ஏற்க மறுத்த பிரித்தானியராலும் பலமுறை பயன்படுத்தப்பட்டது. ஆகத்து 3, 1881ஆம் ஆண்டு பிரிடோரியா வழக்காற்றின்படி[3] 'டிரான்சுவால் ஆட்பகுதி' எனக் குறிப்பிடப்படும் டிரான்சுவாலின் எல்லைகளும் தென்னாப்பிரிக்கக் குடியரசின் எல்லைகளும் வெவ்வேறானவை என பிரித்தானியர் வலியுறுத்தினர்.[4] இருப்பினும், பிரித்தானியருக்கும் சார் நாட்டிற்கும் இடையேயான உடன்படிக்கை பெப்ரவரி 27, 1884 இலண்டன் வழக்காற்றில்[3]:469–474 பிரித்தானியா தனது நிலையை மாற்றிக்கொண்டு "தென்னாப்பிரிக்கக் குடியரசு" என்ற பெயரை பயன்படுத்தியது.

டிரான்சுவால்
தென்னாப்பிரிக்கக் குடியரசு என்ற பெயருக்கு மிகுந்த முக்கியத்துவம் இருந்தமையால் பிரித்தானியர் செப்டம்பர் 1, 1900இல் தென்னாப்பிரிக்கக் குடியரசின் பெயர்[3]:514 "டிரான்சுவால்" என மாற்றப்படவேண்டும் என்று சிறப்பு சாற்றறிக்கை வெளியிட்டது. இந்த சாற்றறிக்கை இரண்டாம் பூவர் போரின் போது தென்னாப்பிரிக்கக் குடியரசு தன்னாட்சியுடன் விளங்கிய நேரத்திலேயே வெளியிடப்பட்டது.
மே 31, 1902இல் பிரித்தானிய அரசு, தென்னாப்பிரிக்கக் குடியரசு, ஆரஞ்சு விடுதலை இராச்சியத்திற்கும் இடையே வெரீனிகிங் உடன்பாடு கையொப்பமிடப்பட்டது; இதன்படி சார் பகுதி டிரான்சுவால் குடியேற்றம் என மாற்றப்பட்டது. பிரித்தானிய அரசின் குடியேற்றங்களை மேலாண்மை செய்ய மே 20, 1903இல் குடியேற்றங்களுக்கிடையான அவை[3]:516 நிறுவப்பட்டது. ஆ.தே.கா டிரான்சுவால் பகுதியை பிரித்து மையப்பகுதியை "கடெங்" என்று மறுபெயரிட்டபோது 1994இல் "டிரான்சுவால்" என்ற பெயர் இறுதியாக மாற்றப்பட்டது.
மேற்சான்றுகள்
- Alexander Mackay (1870). Manual of modern geography, mathematical, physical, and political. பக். 484. http://books.google.com/books?id=HHEDAAAAQAAJ&pg=PA484.
- Tamarkin (1996). Cecil Rhodes and the Cape Afrikaners. பக். 249–250. http://books.google.co.za/books?id=mZXRoPzPql0C.
- Eybers (1917). Select constitutional documents illustrating South African history 1795–1910. பக். 455–463. https://openlibrary.org/books/OL24129017M.
- Irish University Press Series: British Parliamentary Papers Colonies Africa, (BPPCA Transvaal Vol 37 (1971) No 41 at 267)