முதல் பூவர் போர்
முதல் பூவர் போர் (First Boer War), அல்லது முதல் ஆங்கில-பூவர் போர் அல்லது டிரான்சுவால் போர், எனப்படும் போர் பெரிய பிரித்தானியா, அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியத்திற்கும் தென்னாபிரிக்கக் குடியரசுக்கும் [1] இடையே திசம்பர் 16, 1880 முதல் மார்ச் 23, 1881 வரை நடந்த போராகும்.[2]

முதல் ஆங்கில-பூவர் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
போயர் போர்கள் பகுதி | |||||||
![]() இலைய்ங் நெக்கிலிருந்து மஜுபா மலை |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
![]() | ![]() |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
![]() பியெட் யூபெர்ட் ![]() நிக்கோலசு ஜெ. இசுமிட் ![]() ஜே.டி. வெய்ல்பாக் ![]() பிரான்சு யூபெர்ட் ![]() பியெட் குரொன்யெ]] | ![]() ஜார்ஜ் போமெராய் கோலே † ![]() பிலிப் அன்சுட்ருதெர் † ![]() டபுள்யூ. பெல்லைர்சு |
||||||
பலம் | |||||||
3,000 (ஏறத்தாழ 7,000 மொத்தம்) | 1,200 நதால் களப் படையினர் (டிரான்சுவாலில் 1,700) | ||||||
இழப்புகள் | |||||||
41 மரணம் 47 காயம் | 408 மரணம் 315 காயம் |
19ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்காவைப் பிடிக்க நடந்த போட்டியில் பிரித்தானியப் பேரரசு தெற்கு ஆபிரிக்கா முழுமையையும் தனது கட்டுக்குள் கொணர முயன்றது. 1815இல் நெப்போலியப் போர்கள் முடிவடைந்த நிலையில் நன்னம்பிக்கை முனையைக் கைப்பற்றியிருந்தனர். தாங்கள் குடியேறிய பகுதிகளை பிரித்தானியா கட்டுப்படுத்துவதை டச்சு, செருமனி, பிரான்சிய நாட்டினரின் கலவையினமாகிய பூர்கள் விரும்பவில்லை. சிலர் வடக்கு நோக்கிச் சென்று ஆரஞ்சு விடுதலை இராச்சியம் என்ற புதிய நாட்டை உருவாக்கிக் கொண்டனர். வைரச் சுரங்கங்கள் நிறைந்திருந்த ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தைக் கைப்பற்ற 1877இல் பிரித்தானியப் படையினர் முன்னேறினர்.
டிரான்சுவாலின் தலைவர் பவுல் குருகர் பிரித்தானியர் வெளியேற இறுதி எச்சரிக்கை விடுத்தார். இதற்கு மறுதளித்த பிரித்தானியர் திசம்பர் 16, 1880இல் முதலாம் பூவர் போர் மூண்டது. சாண்டுசுபுரூய்ட், வொல்க்சுகிரஸ்ட் ஆரஞ்சு விடுதலை இராச்சியம், டிரான்சுவால் ஆகியன இணைந்து போரில் ஈடுபட்டன. போரில் இறந்த வீரர்களுக்கு மாற்றாக இளைஞர்களையும் முதியோரையும் பூவர் அரசு ஈடுபடுத்தியது. இவர்களுடன் கருப்பின மக்களும் இணைந்தனர். மொத்த பூவர் போர்ப்படையில் 20 முதல் 25 % கருப்பர்களாக இருந்தனர். செருமானியப் பேரரசு பூர்களுக்கு ஆதரவளித்தது. அவர்களது கிரப் துப்பாக்கிகளை பூர்களுக்கு வழங்கியது. பெரும்பான்மையானச் சண்டை குதிரைப்படை வீரர்களுக்கிடையே நடைபெற்றது.
அமெரிக்கப் போருக்குப் பின்னர் பிரித்தானியர் தோல்வியடைந்த முதல் போராக முதலாம் பூவர் போர் திகழ்ந்தது. தோல்வியடைந்த பிரித்தானியர் அமைதி உடன்படிக்கையில் தங்களுக்கு விருப்பமில்லாத சரத்துக்களுடன் கையொப்பமிட வேண்டியதாயிற்று. இதுவே பிரித்தானியர் தங்களது சிவப்பு மேலங்கியுடன் போரிட்ட கடைசி போராக அமைந்தது; இப்போரிலிருந்து காக்கி சீருடைகளை அணிந்து பிரித்தானியர் போரிட்டனர். பூர்களின் கரந்தடிப் போர் முறை, நகரும் தன்மை, குறிபார்த்து சுடும் திறன், தற்காப்பு நிலைகளை கூடுதலாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றால் நவீனத் துப்பாக்கிகளைக் கொண்டிருந்த, பட்டறிவு வாயந்த பிரித்தானியரை வென்றனர்.
இதனையும் காண்க
மேற்சான்றுகள்
- இது டிரான்சுவால் குடியரசு எனவும் அறியப்பட்டது; தற்கால தென்னாப்பிரிக்காவுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்
- Raugh, Herold. The Victorians at War, 1815–1914: An Encyclopedia of British Military History. Santa Barbara: ABC-CLIO, 2004. p. 267.