செவ்வாய் சுற்றுகலன் திட்டம்
செவ்வாய் சுற்றுகலன் திட்டம் (Mars Orbiter Mission), அல்லது மங்கள்யான் (Mangalyaan)[9][10] என்பது செவ்வாய் கோளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 2013 நவம்பர் 5 அன்று வெற்றிகரமாகச் செலுத்தப்பட்ட ஆளில்லாத விண்கலம் ஆகும்.[11][12][13][14][15]
![]() செவ்வாய்க் கோளைச் சுற்றும் மங்கள்யான் (ஓவியரின் கைவண்ணத்தில்) | |
திட்ட வகை | செவ்வாய் சுற்றுக்கலன் |
---|---|
இயக்குபவர் | இசுரோ |
காஸ்பார் குறியீடு | 2013-060A |
சாட்காட் இல. | 39370 |
இணையதளம் | www.isro.org/mars/home.aspx |
திட்டக் காலம் | 6 மாதங்கள் (திட்டத்தில்)[1] |
விண்கலத்தின் பண்புகள் | |
பேருந்து | I-1K[2] |
தயாரிப்பு | ஐசாக் |
ஏவல் திணிவு | 1,337 கிகி (2,948 இறா)[3] |
உலர் நிறை | 500 கிகி (1,100 இறா) |
ஏற்புச்சுமை-நிறை | 15 கிகி (33 இறா)[4] |
பரிமாணங்கள் | 1.5-மீட்டர் (4 அடி 11 அங்) கனசதுரம் |
திறன் | 840 வாட்டுகள்[2] |
திட்ட ஆரம்பம் | |
ஏவப்பட்ட நாள் | 5 நவம்பர் 2013, 09:08 ஒசநே[5] |
ஏவுகலன் | PSLV-XL சி25[6] |
ஏவலிடம் | சதீஸ் தவான் |
ஒப்பந்தக்காரர் | இசுரோ |
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |
Reference system | செவ்வாய் மையம் |
அண்மைareon | 365.3 கிமீ (227.0 மை) |
கவர்ச்சிareon | 80,000 கிமீ (50,000 மை) |
சாய்வு | 150.0° [7] |
சுற்றுக்காலம் | 76.72 மணி |
Epoch | திட்டத்தில் |
செவ்வாய் சுற்றுக்கலன் | |
சுற்றுப்பாதையில் இணைதல் | 24 செப்டம்பர் 2014, 02:00 ஒசநே MSD 50027 06:27 AMT[8] |
இவ்விண்கலம் 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாய்க் கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது. இதன் மூலம், முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு செயற்கைக் கோள் ஒன்றை வெற்றிகரமாக அனுப்பிய முதலாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.[16][17][18][19] இத்திட்டத்திற்காக முப்பத்து நான்காவது சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாட்டின்போது சிறந்த விண்வெளி முன்னோடி விருதினை இஸ்ரோவிற்கு தரவிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
செவ்வாய் சுற்றுக்கலன் முனைய துணைக்கோள் ஏவுகலம் (PSLV) சி25 மூலம் ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து 2013 நவம்பர் 5 அன்று இந்திய நேரப்படி பிற்பகல் 02:38 மணிக்கு வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.[20] இக்கலன் புவியின் சுற்றுப்பாதையில் ஒரு மாதமளவில் தங்கியிருந்த பின்னர் 2013 நவம்பர் 30 இல் செவ்வாயை நோக்கிச் செலுத்தப்பட்டது.[21]
இத்திட்டம் இந்தியாவின் முதலாவது கோளிடைத் திட்டமாகும். சோவியத், நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றுக்கு அடுத்ததாகச் செவ்வாயை அடைந்த நான்காவது விண்வெளி நிறுவனம் என்ற பெருமையை இசுரோ பெற்றது.[22][23] விண்கலம் தற்போது பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் விண்கலக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இந்திய தொலை தூர விண்வெளி வலைப் பின்னல் (IDSN) உணர்நீட்சி மூலமாகக் கண்காணிக்கப்படுகிறது.[24]
திட்டசெலவு
2008 ஆம் ஆண்டில் சந்திரயான்-1 நிலவுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து 2010 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இயலுமை ஆய்வுடன் மங்கள்யான் திட்டப்பணி ஆரம்பமாகியது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் சுற்றுக்கலனின் ஆய்வுக்காக ரூ.4.54 பில்லியன் ($74 மில்லியன்) செலவிலான ஆய்வுப் பணிகளை முடித்ததை அடுத்து,[25] 2012 ஆகத்து 3 இல் இந்திய அரசு இத்திட்டத்தை அங்கீகரித்தது.[26] திட்டத்தின் மொத்தச் செலவு ரூ.4.54 பில். ($74 மில்.) ஆகும்.[12][27] இதில் ஐந்து ஆய்வுக் கருவிகளுடன் கூடிய செயற்கைக்கோளுக்கான செலவு ரூ.1.53 பில்லியன் ($25 மில்லியன்) ஆகும்.[28] உலகில் குறைந்த செலவில் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் திட்டம் என இது புகழ்பெற்றுள்ளது.[29][30][31]
நோக்கம்
செவ்வாயை சென்றடையும் அளவுக்குத் தொழில்நுட்பத் திறன் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும், செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருக்கிறதா என்பன உள்ளிட்ட ஆய்வுகளை நடத்துவதுமே மங்கள்யானின் முக்கிய நோக்கங்கள்.[11] மேலும் ,[32]
- விண்வெளிப் பயணங்களுக்குத் தூக்கிச் செல்லும் ராக்கெட் திறனை உறுதிப் படுத்துவது; விண்ணுளவி அமைப்பு, இயக்க நெறிகளைச் செயலாக்க முற்படுவது; அண்டவெளித் தேடல் பணிகளைத் திட்டமிட்டு நிறைவேற்றுவது. விண்வெளித் தொடர்பு முறைகளை விருத்தி செய்வது.
- செவ்வாய்க் கோள் சுற்றுளவியை அமைப்பது; அது நெடுந்தூரப் பயணத்துக்குத் தயார் செய்வது; அது செந்நிறக் கோளில் இறங்கச் செய்வது.
- செவ்வாய்க் கோளைச் சுற்றி வந்து படமெடுப்பது. அங்கே மீதேன் வாயு இருப்பதைச் சோதிப்பது.
- செந்நிறக் கோளில் ஒரு காலத்தில் இருந்த சூழ்வெளி வாயு மண்டல இழப்பை ஆராய்வது.
துணைக் கருவிகள்
செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் 15 கிலோ எடையுள்ள ஐந்து துணைக் கருவிகள் உள்ளடக்கியுள்ளது:[4][33][34]
- காற்றுமண்டல ஆய்வுகள்
- லைமன் ஆல்ஃபா ஒளிமானி (Lyman Alpha Photometer)
- செவ்வாய்க்கான மீத்தேன் உணரி(Mars Methane Sensor)
- மேற்புற படிம ஆய்வுகள்
- செவ்வாய் வண்ண ஒளிப்படக்கருவி (Mars Color Camera)
- வெதுப்பு அகச்செங்கதிர் படிமமாக்கல் பட்டைமானி (Thermal Infrared Imaging Spectrometer)
- துகள் சுற்றுப்புற ஆய்வுகள்
- செவ்வாய் புறக்காற்று மண்டல நடுநிலை பொதிவு பகுப்பாய்வி (mars exospheric neutral composition analyser).
செயல்பாடு
1350 கிலோ எடையுள்ள மங்கள்யான், விண்ணில் ஏவப்பட்டு 10 மாதங்களுக்கு பின் செவ்வாயை சென்றடைந்தது. சுமார் ஆறுமாத காலமே இது செவ்வாய் கிரகத்தை சுற்றிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக அந்த கிரகத்தை மங்கள்யான் 60 முறை சுற்றிவரும். சந்திரயானில் மொத்தமாக 11 கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. அதில் சில வெளிநாட்டு நிறுவனங்களுடையவை. ஆனால் இதில் எடுத்துச் செல்லப்பட்டுள்ள 5 உபகரணங்களும் இந்தியாவுடையது.[11] மங்கள்யான் விண்கலத்தின் மொத்த எடை 1,350 கிகி ஆகும்.[35]
வேகம்
மங்கள்யான் உயரே சென்றடைந்தபோது அதன் வேகம் மணிக்கு சுமார் 27 ஆயிரம் கிலோ மீட்டர். மங்கள்யானின் வேகத்தை அதிகரிக்க பூமியின் ஈர்ப்பு சக்தி உதவியது. பூமியை வட்டவடிவப் பாதையில் சுற்றும்படி மங்கள்யானைச் செலுத்தினால், அதன் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்பதால், நீள் வட்டப் பாதையில் அதை செலுத்தினர். பூமியை ஆறாவது தடவை சுற்றி முடித்தபோது, மங்கள்யானின் வேகம் மணிக்கு சுமார் 38 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரித்தது. இவ்விதம் (பூமி உள்பட) ஒரு கிரகத்தின் ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி விண்கலத்தின் வேகத்தை அதிகரிக்கும் உத்திக்கு ஆங்கிலத்தில் கிராவிடி அசிஸ்ட் என்று பெயர். கடந்த காலங்களில், "பயனீர்', "வாயேஜர்' விண்கலங்களை அனுப்பியபோது, நாசா இந்த உத்தியைப் பயன்படுத்தியது.[36]
புகைப்படம்
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் செயற்கைக் கோள், வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஹெலன் புயலை புகைப்படம் எடுத்து அனுப்பியது[37][38]
தடங்கல்
இஸ்ரோ மங்கள்யானின் கண்காணிப்பு மற்றும் சுற்றுப்பாதை தகவல் பெற நாசாவை சார்ந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா அரசாங்கத்தின் பணிநிறுத்தம் காரணமாக நாசாவின் பல கண்காணிப்பு நிலையங்கள் ஆளில்லா நிலையங்களாக மாற்றப்பட்டிருந்தன. இப்பணிநிறுத்தம் இஸ்ரோவின் கல ஏவு கால அளவை கடந்து தொடர்ந்தால் மங்கள்யான் கல ஏவு கால அளவிற்காக 2015 அல்லது 2016 வரை காத்திருக்க நேரிடும் சூழ்நிலை இருந்தது .[39] நவம்பர் 5 அன்று பிற்பகல் 2:38 மணிக்கு ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி.-25 மூலமாக மங்கள்யான் விண்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ பின்னர் தெரிவித்தது.[40][41]
பயணக் கட்டங்கள்
பி.எஸ்.எல்.வி சி-25 என்ற ஏவுகலம் மூலம் மங்கள்யான் செயற்கைகோள், நவம்பர் 5, 2013 அன்று பிற்பகல் 2:38 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.[42][43][44][45] தற்போது இந்த ஏவுகலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் பூமியைச் சுற்றி வருகிறது. இந்த சுற்றுவட்டப் பாதையின் உயரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, இறுதியாக திசம்பர் 1, 2013 அன்று செவ்வாய் கிரகத்தை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[46] 43 நிமிடங்கள் பயணத்துக்குப் பிறகு பூமி அருகில் குறைந்தது 246 கிலோமீட்டர் தொலைவிலும் அதிகப்படியாக 23,566 கிலோமீட்டர்கள் கொண்ட நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகிறது.[47] 11.11.2013 திங்கள்கிழமை அன்று அதிகாலை 2.06 மணிக்கு 3ஆவது சுற்றுப்பாதையை கடந்து 4 ஆவது சுற்றுப்பாதைக்கு மங்கள்யானை முன்னேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சில இயந்திரக்கோளாறு காரணமாக தடங்கல் ஏற்பட்டது. பின்னர் அது சரிசெய்யப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.[48]
2 லட்சம் கிமீ
16.11.2013 (சனிக்கிழமை) அதிகாலை 1.27 மணி நிலவரப்படி மங்கள்யான் 1.92,874 கிமீ தூரத்தில் 217 கிமீ நீள்வட்டப்பாதையில், விநாடிக்கு 101 கிமீகள் வேகத்தில் மங்கள்யான் சுற்றிவந்தது.[49] 30.11.2013 (சனிக்கிழமை இரவு) புவியின் நீள்வட்டப் பாதையிலிருந்து 12.49 மணிக்கு விண்கல கட்டுப்பாட்டறையில் அமைந்துள்ள 440 நியூட்டன் திரவ எரிபொருள் என்ஜினை 22 நிமிடங்கள் இயக்கி செவ்வாய் கிரகம் நோக்கி பயணிக்க உந்தப்பட்டது.[50] மங்கள்யான் 04.12.2013 அன்றுடன் 72 மணி நேர பயணத்தின் மூலம் 9.25 லட்சம் கிமீ தூரத்தைக்கடந்தது. அடுத்த 300 தினங்களில் சூரியனைக் கடக்குமென கணிக்கப்பட்டது.[51]
10 லட்சம் கிமீ
டிசம்பர் 4 2013 அன்று அதிகாலை 1.14 மணிக்கு புவி ஈர்ப்புவிசையை விட்டு வெளியே மங்கள்யான் விண்கலம் கடந்தது.[52][53] 25.05.2014 அன்றைய கணக்குப்படி 200 நாளில் 42 கோடி கிமீ அதாவது 60 சதவீத தூரத்தைக் கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருந்தது.[54]
பாதை மாற்றம்

மங்கள்யான் விண்கலம் சரியான திட்டமிட்ட பாதையில் செல்வதைக் கண்காணித்து தேவையெனில் நான்கு முறை நிர்ணயித்தப் பாதையை நோக்கி திருப்பிவிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி,
- முதல் நிர்ணயிக்கப்பட்ட பாதைத் திருப்பம் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் நாள் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் இயந்திரம் 40.5 வினாடிகள் இயக்கப்பட்டு நிர்ணயித்தப் பாதையில் விண்கலத்தைத் திருப்பினர்.[55]
- இரண்டாவது பாதைத் திருப்பம் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று திட்டமிடப்பட்டது. ஆனால் மங்கள்யான் விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்வதால் அத்திருப்பம் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது.
- மூன்றாவது பாதைத் திருப்பம் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தியதி திட்டமிடப்பட்டது. அதன் படி மங்கள்யானின் இயந்திரம் 16 வினாடிகள் இயக்கப்பட்டு நிர்ணயித்தப் பாதையில் திருப்பிவிடப்பட்டது.
- கடைசி பாதைப் திருப்பம் இரண்டு கட்டமாக ஆகஸ்டு மாதம் மற்றும் செப்டம்பர் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டது.[56]
வெற்றி
மங்கள்யான் விண்கலம் சரியான திட்டமிட்டபடி செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தியதி இந்திய நேரப்படி காலை 7.41 மணிக்கு செலுத்தப்பட்டது. இவ்விண்கலனில் பொருத்தப்பட்டிருந்த எட்டு சிறிய இயந்திரங்கள் 24 நிமிடங்கள் எரியூட்டப்பட்டு அதன் வேகத்தை குறைத்து செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.[57][58] விண்கலத்தின் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறும் போது விண்கலத்திற்கும் தரைக் கட்டுப்பாட்டு அறைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இயந்திரங்கள் எரியூட்டப்பட்டு அதன் திசைவேகம் குறைக்கப்படும் போது, செவ்வாய் கிரகம் விண்கலத்திற்கும் பூமிக்கும் இடையே இருந்ததால் விண்கலமும் தரைக்கட்டுப்பாட்டு மையமும் எந்த வித சமிக்கைத் தொடர்பும் கொள்ளமுடியாத நிலையில் இருந்தன. மீண்டும் விண்கலம் பூமியைத் தொடர்பு கொள்ளும் போது, 1099 மீட்டர்கள்/வினாடி சமிக்கை கிடைத்தது. இதன் மூலம் விண்கலம் செவ்வாயின் வட்டப்பாதையில் நுழைந்தது உறுதி செய்யப்பட்டது. இந்நிகழ்வுகள் அனைத்தும் நடைபெறும் போது விண்கலத்திற்கும் பூமிக்கும் இடையேயான தொலைவு 12.5 ஒளி நிமிடங்கள் ஆகும்.
செயல்பாடு
செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மங்கள்யான் செயற்கைக்கோள், வண்ணப் புகைப்படங்களை எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியது.[57] 2015 ஜூன் மாதம் 14 ஆம் திகதி துவங்கி இரண்டு வாரங்கள் பூமி, சூரியன் செவ்வாய் மூன்றும் இரண்டு ஆண்டுகளுக்கு (26 வாரங்கள்) ஒருமுறை நேர்கோட்டுக்கு வருவதால் மங்கள்யானின் பூமியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.[59][60]
மங்கள்யான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் ஓஃபிர் சஃசுமா என்ற பள்ளத்தாக்கின் முப்பரிமாண படத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் இசுரோ 18 ஆகத்து 2015 அன்று வெளியிட்டது.[61]
மேற்கோள்கள்
- "Mars Orbiter Spacecraft completes Engine Test, fine-tunes its Course". Spaceflight 101. 22 September 2014. http://www.spaceflight101.com/mars-orbiter-mission-updates.html. பார்த்த நாள்: 2014-09-24.
- "Mars Orbiter Spacecraft". ISRO (நவம்பர் 2013). பார்த்த நாள் 6 நவம்பர் 2013.
- "Mars Orbiter Mission – Spacecraft". ISRO (5 நவம்பர் 2013). பார்த்த நாள் 4 பெப்ரவரி 2014.
- "Mars Orbiter MIssion - Payloads" (PDF). Indian Space Research Organisation (ISRO). இந்திய விண்வெளி ஆய்வு மையம் (October 2013). பார்த்த நாள் 2013-10-08.
- "India to launch Mars Orbiter Mission on November 5". NDTV. 22 அக்டோபர் 2013. http://timesofindia.indiatimes.com/india/India-to-launch-Mars-Orbiter-Mission-on-November-5/articleshow/24548060.cms. பார்த்த நாள்: 19 அக்டோபர் 2013.
- "Mars Orbiter Mission – Launch Vehicle". ISRO. பார்த்த நாள் 4 பெப். 2014.
- "Mars Orbiter Mission". ISRO. பார்த்த நாள் 4 February 2014.
- in whole world./story-fnjwlbuf-1227068835676?nk=20dfb6bbe7f9267fcf8572967c544066 "India becomes first country to enter Mars’ orbit on their first attempt". Herald Sun. 24 September 2014 in Morning 8:15 Indian Time. http://www.heraldsun.com.au/technology/science/India-becomes-first-country-to-enter-mars-orbit-on-their-first-attempt in whole world./story-fnjwlbuf-1227068835676?nk=20dfb6bbe7f9267fcf8572967c544066. பார்த்த நாள்: 24 செப். 2014.
- http://nssdc.gsfc.nasa.gov/nmc/spacecraftDisplay.do?id=2013-060A
- "India's First Mars Probe Makes Historic Red Planet Arrival". ஸ்பேஸ்.காம். September 23, 2014. http://www.space.com/27242-india-mars-mission-arrival.html.
- "அக்டோபர் 28 ஆம் தேதி மங்கள்யான் ஏவப்படும்". பிபிசி (22 செப்டம்பர், 2013). பார்த்த நாள் 12 அக்டோபர் 2013.
- Walton, Zach (15 August 2012). "India Announces Mars Mission One Week After Landing". Web Pro News. http://www.webpronews.com/india-announces-mars-mission-one-week-after-curiosity-landing-2012-08. பார்த்த நாள்: 8 September 2013.
- Staff (15 August 2012). "Manmohan Singh formally announces India's Mars mission". தி இந்து. http://www.thehindu.com/sci-tech/science/article3775271.ece. பார்த்த நாள்: 31 August 2012.
- Bal, Hartosh Singh (30 August 2012). "BRICS in Space". த நியூயார்க் டைம்ஸ். http://latitude.blogs.nytimes.com/2012/08/30/india-and-china-race-to-send-a-mission-to-mars/. பார்த்த நாள்: 31 August 2012.
- Patairiya, Pawan Kumar (23 November 2013). "Why India Is Going to Mars". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2013/11/23/opinion/india-must-go-to-mars.html. பார்த்த நாள்: 23 November 2013.
- "India's Mars satellite successfully enters orbit, bringing country into space elite". கார்டியன். 24 Sசெப்டம்பர் 2014. http://www.theguardian.com/science/2014/sep/24/india-mars-satellite-successfully-enters-orbit. பார்த்த நாள்: 2014-09-24.
- "India becomes first Asian nation to reach Mars orbit, joins elite global space club". The Washington Post. 24 செப்டம்பர் 2014. http://www.washingtonpost.com/world/india-is-the-first-asian-nation-to-touch-mars-orbit-joins-elite-global-space-club/2014/09/23/b6bc6992-a432-4f1e-87ad-5d6fc4da3460_story.html. பார்த்த நாள்: 2014-09-24.
- "India's spacecraft reaches Mars orbit ... and history". CNN. 24 செப்ட்ம்பர் 2014. http://edition.cnn.com/2014/09/23/world/asia/mars-india-orbiter/index.html. பார்த்த நாள்: 2014-09-24.
- http://www.maalaimalar.com/2013/11/06181150/India-Mars-mission-a-great-ach.html
- "India's Mars Mission Mangalyaan to be launched on November 5". பார்த்த நாள் 22 அக்டோபர் 2013.
- "Mars Orbiter Mission Update". http://www.isro.org/mars/updates.aspx. பார்த்த நாள்: 30 November 2013.
- "India Launches Mars Orbiter Mission". http://abcnews.go.com/Technology/india-launches-mars-orbiter-mission/story?id=20793860. பார்த்த நாள்: 6 நவம்பர் 2013.
- "India's low-cost space mission reaches Mars orbit". http://rt.com/news/190096-india-mars-orbiter-probe/. பார்த்த நாள்: 24 செப்டம்பர் 2014.
- "Mangalyaan successfully placed into Mars Transfer Trajectory". பார்த்த நாள் 1 டிசம்பர் 2013.
- "India's Mars mission gets Rs. 125 crore (19 March 2012)". Marsdaily.com. பார்த்த நாள் 4 பெப்ரவரி 2014.
- "Cabinet clears Mars mission". The Hindu (4 ஆகத்து 2012). பார்த்த நாள் 10 ஆகத்து 2012.
- "'We are planning to send our first orbiter to Mars in 2013'". தி டெக்கன் குரோனிக்கள். 12 ஆகத்து 2012. http://www.deccanchronicle.com/editorial/op-ed/%E2%80%98we-are-planning-send-our-first-orbiter-mars-2013%E2%80%99-548. பார்த்த நாள்: 13 ஆகத்து 2012.
- "Rocket science: how ISRO flew to Mars cheap". Hindustan Times (6 நவம்பர் 2013). பார்த்த நாள் 4 பெப்ரவரி 2014.
- சீனா சாதிக்காததை இந்தியா சாதிக்குமா தினமணி Aug 12, 2013
- செவ்வாய்க் கிரகத்துக்கு அடுத்த மாதம் விண்கலம் அனுப்ப "இஸ்ரோ' திட்டம் தினமணி
- India’s Mangalyaan Mission To Head To Mars In November 2013 Asian Scientist Magazine September 12, 2013
- "ஆசியாவிலே முதன்முதல் செந்நிறக் கோள் நோக்கிச் செல்லும் இந்திய விண்ணுளவி". S. Jayabarathan (நவம்பர் 8, 2013). பார்த்த நாள் நவம்பர் 9, 2013.
- Chellappan, Kumar (11January 2013). "Amangal to budget from Mangalyaan, say experts". Daily Pioneer. http://www.dailypioneer.com/home/online-channel/360-todays-newspaper/121404-amangal-to-budget-from-mangalyaan-say-experts.html. பார்த்த நாள்: 11 January 2013.
- "Mars mission gets October, 2013 launch date deadline as India reaches out to the stars". The Indian Express. 4 January 2013. http://www.indianexpress.com/news/mars-mission-gets-october-2013-launch-date-deadline-as-india-reaches-out-to-the-stars/1054576/0. பார்த்த நாள்: 5 January 2013.
- கிரகத்தை நோக்கி சீறிப்பாய்ந்தது 'மங்கள்யான்'
- என். ராமதுரை (30 நவம்பர் 2013). "மங்கள்யானுக்கு உதவும் பூமியின் ஈர்ப்பு சக்தி". தினமணி. பார்த்த நாள் 4 திசம்பர் 2013.
- "ஹெலன் புயலை புகைப்படம் எடுத்த மங்கள்யான்!". விகடன். பார்த்த நாள் 23 நவம்பர் 2013.
- "ஹெலன் புயலை புகைப்படம் எடுத்தது மங்கள்யான்". தினமணி. பார்த்த நாள் 23 நவம்பர் 2013.
- "US govt shutdown may force Isro to delay October 28 Mars mission launch by 2 years". Times Of India. 5 அக்டோபர் 2013. http://articles.timesofindia.indiatimes.com/2013-10-05/india/42744721_1_launch-vehicle-pslv-c-sriharikota-isro-mission. பார்த்த நாள்: 12 அக்டோபர் 2013.
- "செவ்வாய் கிரகத்திற்கு இன்று மங்கள்யான் ;இஸ்ரோ சேர்மன் திருப்பதியில் வேண்டினார்". தினமலர். 05 நவம்பர் 2013. http://www.dinamalar.com/news_detail.asp?id=843007. பார்த்த நாள்: 05 நவம்பர் 2013.
- "Isro chief seeks divine help for Mars mission". டைம்ஸ் ஆஃப் இன்டியா. 05 நவம்பர் 2013. http://timesofindia.indiatimes.com/india/Isro-chief-seeks-divine-help-for-Mars-mission/articleshow/25238936.cms. பார்த்த நாள்: 05 நவம்பர் 2013.
- http://www.financialexpress.com/news/indias-mars-mission-begins-as-isro-launches-mangalyaan-successfully/1191116
- http://www.dnaindia.com/india/commentary-rs450-crore-indian-mars-orbiter-mission-expedition-seeks-to-find-if-there-is-methane-on-mars-1913946
- விண்ணில் பாய்ந்தது மங்கள்யான்! புதிய தலைமுறை
- இந்தியாவின் மங்கள்யான் வெற்றிகரமாக ஏவப்பட்டது பி பி சி 5 நவம்பர், 2013 - 09:57 ஜிஎம்டி
- புவி வட்டப் பாதையை மங்கல்யான் வெற்றிகரமாக சுற்றி வருகிறது
- 'மங்கள்யான்' கோளாறை சீரமைத்தது இஸ்ரோ: ஃபேஸ்புக்கில் அப்டேட்
- செவ்வாய் கிரகத்தை நோக்கி வெற்றிகரமாக அனுப்பியது இஸ்ரோ
- விண்வெளியில் ஒரு மைல்கல் சாதனை
- "பூமியின் ஈர்ப்பு விசையை விட்டு வெளியே சென்றது மங்கள்யான்". தினமணி. பார்த்த நாள் 5 திசம்பர் 2013.
- "Isro's Mars Orbiter Mission crosses Moon's orbit, travelling 10,00,000 km per day". THE TIMES OF INDIA. பார்த்த நாள் 5 திசம்பர் 2013.
- http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=93344
- http://zeenews.india.com/news/space/isro-successfully-performs-first-tcm-on-mars-orbiter_895915.html
- http://www.planetary.org/blogs/emily-lakdawalla/2013/11300724-mars-orbiter-mission-ready.html
- http://news.vikatan.com/article.php?module=news&aid=32721
- http://www.dinamalar.com/news_detail.asp?id=1078054
- ஜூன் 14-ல் நேர்க்கோட்டில் வரும் பூமி, சூரியன், செவ்வாய்: மங்கள்யானின் 15 நாள் மவுனம் தொடங்கியது தி இந்து தமிழ் ஜூன் 11 2015
- மங்கள்யானின் இரண்டு வார மவுனம்
- "செவ்வாய்க் கிரகத்தின் புதிய படத்தை வெளியிட்டது மங்கள்யான்" (Tamil). பி.பி.சி. தமிழ் (2015-08-18). பார்த்த நாள் 2015-08-23.
வெளியிணைப்புகள்
- Mars mission launch window from Oct. 21 to Nov. 19, தி இந்து நாளிதழில் வெளியான ஒரு செய்திக் கட்டுரை
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Mission Brochures
- பி.எஸ்.எல்.வி சி-25 என்ற ராக்கெட் மூலம் மங்கள்யான் செயற்கைகோள் விண்ணில் பாயும் காணொளிக்காட்சி
- Journey to the Red Planet
- மங்கள்யான் : அடுத்தது என்ன? - செவ்வி
- செவ்வாய்க்கிரகப் படங்களை அனுப்பியது மங்கள்யான்
- மங்கள்யான் வெற்றி: சாத்தியமானது எப்படி?
- மங்கள்யான், செவ்வாயை எட்டிய பதைபதைப்பு நிமிடங்கள்...விண்ணில் பிழை திருத்தம் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள்