ஏழு கொடிய பாவங்கள்
தலையாய குற்றங்கள் அல்லது முதன்மையான பாவங்கள் என்றும் அறியப்படுகின்ற ஏழு கொடிய பாவங்கள் (Seven deadly sins) என்பவை வீழ்ச்சியுறும் மனித இனத்தில் பாவம் செய்வதற்கான தூண்டுதல் குறித்து (ஒழுக்கக்கேடு) பயிற்றுவிக்கவும் அறிவுறுத்தவும் தொடக்ககால கிறித்துவ காலங்களிலிருந்து பயன்படுத்தப்பட்டு வரும் மிகவும் ஆட்சேபத்திற்குரிய குற்றங்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டியலின் கடைசி பதிப்பு தற்பெருமை, சீற்றம், காமவெறி, பேராசை, பெருந்தீனி விருப்பம், பொறாமை, சோம்பல் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது.

கத்தோலிக்கத் திருச்சபை பாவத்தை இரண்டு முதன்மைப் பிரிவுகளாகப் பிரித்திருக்கிறது: அற்ப பாவம் மற்றும் சாவான பாவம். இதில் சாவான பாவம் மிகவும் கடுமையானவை எனவும். இது அருள் வாழ்வை அழித்துவிடக்கூடியவை என்று கருதப்படுவதோடு ஒப்புரவு அருட்சாதனத்தின் வழியாக தீர்க்கப்படவில்லை என்றால் அல்லது முழுமையான பாவ வருத்தத்தின் வழியாக மன்னிக்கப்படவில்லை என்றாலோ முடிவற்ற நரகத்தை அடைய நேரிடும் என்று நம்பப்படுகிறது.
தொடக்ககால 14ம் நூற்றாண்டு தொடங்கி அந்த நேரத்தில் இருந்த ஐரோப்பியக் கலைஞர்களிடையே ஏழு கொடிய பாவங்கள் பெற்ற புகழ், முடிவில் அவர்களை உலகம் முழுவதிலும் பொதுவாக கத்தோலிக்க கலாச்சாரத்திலும் கத்தோலிக்க உணர்வுகளிலும் வேரூன்றச் செய்தது. இதுபோன்ற வேரூன்றுதலில் ஒரு விளக்கம் "SALIGIA" என்ற நினைவூட்டு வாசகத்தின் உருவாக்கமாக இருந்தது, இந்த வாசகம் இலத்தீன் மொழியிலான பின்வரும் ஏழு கொடிய பாவங்களின் முதல் எழுத்துக்களின் அடிப்படையிலானதாக இருந்தது superbia (தற்பெருமை) , avaritia (பேராசை), luxuria (பெருங்காமம்), invidia (பொறாமை), gula (பெருந்தீனி), ira (வெஞ்சினம்), acedia (சோம்பல்)[1].
கொடிய பாவங்களின் வரலாற்றுப்பூர்வமான மற்றும் நவீன வரையறைகள்
களியாட்டம்
களியாட்டம் (லத்தீன்,luxuria) என்பது கட்டுப்பாடில்லாத மிகுதியாகும். களியாட்ட நடத்தைகள் தொடர்ந்து ஆடம்பரப் பொருட்களை வாங்குதல் மற்றும் புலனின்ப நுகர்வுகளை உள்ளிட்டிருக்கிறது.
ரோமானிய மொழிகளில் லக்ஸரியா (பாவத்தின் லத்தீன் பெயர்) என்பதன் உறவுடைமை நேரடியாக பாலுறவு சார்ந்த பொருளுடனே உருவாகியிருக்கிறது; பழம் பிரெஞ்சு உறவுடைமை ஆங்கிலத்தில் ஆடம்பரம் என்பதாக சேர்த்துக்கொள்ளப்பட்டது, ஆனால் இது இதனுடைய பாலுறவு அர்த்தத்தை பதினான்காம் நூற்றாண்டில் இழந்தது.[7]
காமம்
காமம் அல்லது ஒழுக்கமின்மை என்பது வழக்கமாக பாலுறவு இயல்பின் மிதமிஞ்சிய சிந்தனை அல்லது ஆசைகள் என்று கருதப்படுகிறது. கடவுளுக்கு அன்பையும் பக்தியையும் இரண்டாம்பட்சமானதாக்கும் மற்றவர்களின் மிதமிஞ்சிய அன்பு அரிஸ்டாடிலின் அடிப்படைத் தத்துவமாக இருக்கிறது. தாந்தேயின் பர்காடோரியோவில் பாவத்திற்காக வருந்துபவர் காமம் நிரம்பிய/பாலுறுவு சிந்தனைகள் மற்றும் உணர்வுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள நெருப்பிற்குள்ளாக நடக்கிறார். தாந்தேயின் "இன்ஃபர்னோவில்", காமப் பாவத்தின் மன்னிக்கப்படாத ஆன்மாக்கள் பூவுலக வாழ்க்கையில் அவர்களுடைய காமம் நிரம்பிய உணர்ச்சியின் சுய கட்டுப்பாடின்மையைக் குறிக்கின்ற காற்று போன்ற ஓய்வில்லாத சூறாவளியில் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
பெருந்தீனி

ஒரே மூச்சில் விழுங்குதல் அல்லது குடித்தல் என்பதைக் குறிக்கும் குளுட்டைர் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது பெருந்தீனி என்ற சொல் (லத்தீன், gula) வீணடிக்கும் வகையில் எதையும் மிகையாக-அனுபவித்தல் மற்றும் மிகையாக-நுகர்தல் என்பதைக் குறிக்கிறது. கிறிஸ்துவ மதங்களில் உணவின் மீதான மிதமிஞ்சிய ஆசை அல்லது தேவைப்படுபவர்களுக்கு மறுக்கப்படுதலின் காரணமாக இது ஒரு பாவமாகக் கருதப்படுகிறது.[8]
கலாச்சாரத்தைப் பொறுத்து இது ஒரு பாவமாகவோ அல்லது தகுதியின் சின்னமாகவோ பார்க்கப்படலாம். உணவு அரிதானதாக இருக்குமிடத்தில் நன்றாக உண்ணுதல் என்பது அதை ஒரு பெருமையாக கொள்ளச்செய்வதாக இருக்கலாம். ஆனால் உணவு மிகவும் அதிகமாக கிடைக்கின்ற இடங்களில் இது மிகையாக-அனுபவித்தலுக்கான தூண்டுதலைத் தவிர்ப்பதற்கான ஒரு சுய-கட்டுப்பாட்டுச் சின்னமாக கருதப்படலாம்.
மத்தியகால தேவாலயத் தலைவர்கள் (எ.கா., தாமஸ் அக்குவைனஸ்) பெருந்தீனி குறித்த மிகவும் விரிவான பொருளை எடுத்தாண்டிருக்கின்றனர், இதுவும்கூட உணவுகளின் ஆட்டிப்படைக்கும் எதிர்பார்ப்பு,[8] தொடர்ந்து சுவை மிகுந்த உணவுகளை உண்ணுதல் மற்றும் மிகையான செலவுள்ள உணவுகள் ஆகியவற்றை உள்ளிட்டனவாக இருக்கலாம் என்று வாதிடுகின்றனர்.[9] பெருந்தீனிக்கு ஆளாவதன் ஆறு வழிகளை அக்வினாஸ் உருவாக்கித் தந்திருக்கிறார்:
- Praepropere - விரைவாக உண்ணுதல்.
- Laute - மிகவும் செலவு பிடிக்கும் வகையில் உண்ணுதல்.
- Nimis - அதிகப்படியாக உண்ணுதல்.
- Ardenter - பேரார்வத்தோடு உண்ணுதல் (ஆழ்ந்து அனுபவித்தல்).
- Studiose - மிகுந்த உணர்ச்சிப்பெருக்கோடு உண்ணுதல் (முனைப்போடு).
- Forente - வேண்டாவெறுப்பாக உண்ணுதல் (சலிப்போடு).
பேராசை
செல்வத்தின் மீதான பேரார்வம் அல்லது துராசை எனப்படும் பேராசை (லத்தீன், avaritia), காமம் மற்றும் பெருந்தீனியைப் போன்றே மிதமிஞ்சிய நிலையின் பாவமாகும். இருப்பினும், (தேவாலயத்தின் கண்ணோட்டப்படி) மிகவும் மிதமிஞ்சிய அல்லது சுயநலமிகுந்த ஆசை மற்றும் செல்வம், தகுதி மற்றும் அதிகாரத்திற்கான தேடல் என்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. புனித தாமஸ் அக்வினாஸ் பேராசை என்பது "எல்லா அழிவுப் பாவங்களையும் போன்று கடவுளுக்கு எதிரான பாவம், பூவுலக வாழ்வின் பொருட்டு முடிவற்ற நிலையில் மனிதன் குற்றமிழைப்பது" என்று எழுதுகிறார். தாந்தேயின் தூய்மைப்படுத்துதலில், பாவ மன்னிப்புக் கோருபவர்கள் பூவுலக வாழ்க்கையில் மிகைப்படியாக கவனம் செலுத்தியதன் காரணமாக தலையைக் கீழே கவிழ்த்தபடி பிணைக்கப்பட்டிருக்கின்றனர். "செல்வத்தின் மீதான பேரார்வம்" என்பது பேராசைமிக்க நடத்தையின் மற்ற உதாரணங்களை விளக்கக்கூடிய மிகவும் விரிவான சொற்பதமாக இருக்கிறது. இது பணிவின்மை, உள்நோக்கமுள்ள துரோகம் அல்லது ராஜத்துரோகம், குறிப்பாக சுய நலத்திற்காக என்பதை உள்ளிட்டிருக்கிறது, உதாரணத்திற்கு லஞ்சம் அளிப்பதுEmpty citation (help). பொருட்களையோ பண்டங்களையோ திரட்டி வைத்தல் அல்லது பதுக்குதல், திருட்டு மற்றும் கொள்ளை, குறிப்பாக வன்முறை வகையில், ஏமாற்றுதல், அல்லது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய எல்லா நடவடிக்கைகளும் பேராசையின் தாக்கத்தினால் ஏற்பட்டவையாக இருக்கலாம். இதுபோன்ற தவறான நடத்தைகள் தேவாலயத்தின் அசலான வரம்புகளுக்குள்ளாக பொருட்களை வற்புறுத்திப் பெறுவதிலிருந்து லாபம் பெறுகின்ற ஊழல் என்பதையும் உள்ளிட்டிருக்கலாம்.
சோம்பல்
சோம்பல் என்பது (லத்தீன், acedia) (கிரேக்கம் ακηδία) ஒருவர் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டியதை அலட்சியப்படுத்துவதாகும். இதனை அக்கறையில்லாத அலட்சியம்; மகிழ்ச்சியற்ற மனச்சோர்வு என்று மொழிபெயர்க்கலாம். இது ஊக்கமின்மை என்பதோடு ஒப்பிடக்கூடியது, இருப்பினும் சோம்பல் என்பது நடத்தையைக் குறிக்கிறது, ஊக்கமின்மை அது உருவாக்கும் உணர்ச்சியைக் குறிக்கிறது. முந்தைய கிறிஸ்துவ கருத்தாக்கத்தில் மகிழ்ச்சியற்ற நிலை என்பது கடவுளின் தெய்வீகத்தன்மையை அனுபவிப்பது மற்றும் கடவுள் உருவாக்கிய உலகத்தை மறுக்கின்ற விருப்பத்துடன் கூடிய மறுப்பைக் குறித்தது; இதற்கு முரணாக, அக்கறையின்மை என்பது மக்களை அவர்களுடைய மதம்சார் பணியிலிருந்து ஊக்கம் குன்றச்செய்கின்ற ஆன்மீக துயர்படுத்தல் என்பதைக் குறிக்கிறது.
இந்தப் பட்டியலின் விளக்கத்தில் தாமஸ் அக்வினாஸ் சோம்பலை விளக்குகையில் இதனை அவர் மன ஊக்கமின்மை என்றும், ஓய்வின்மை மற்றும் நிலையின்மை போன்ற குறைவான பாவங்களுக்கான ஒரு மூதாதையராக இருப்பது என்றும் விளக்குகிறார். தாந்தே இந்த வரையறையை மேற்கொண்டு பிரித்தெடுக்கிறார், அவர் சோம்பலை ஒருவர் தன்னுடைய முழு அறிவு, முழுமையான மனம் மற்றும் முழுமையான ஆன்மாவைக் கொண்டு கடவுளிடம் அன்பு செலுத்த தவறுவது என்று விளக்குகிறார்; அவருக்கு இது ஒரு நடுத்தரமான பாவம் , இது ஒன்றுதான் அன்பில்லாமை அல்லது அது போதுமானதாக இல்லாமையால் வரையறுக்கப்படுகிறது.
அவநம்பிக்கை
அவநம்பிக்கை (லத்தீன்,Tristitia) என்பது திருப்தியின்மை அல்லது மகிழ்ச்சியின்மையைக் குறிக்கிறது, இது ஒருவருடைய அப்போதைய சூழ்நிலையால் ஏற்படும் மகிழ்ச்சியின்மைக்கு காரணமாகிறது, குறிப்பாக நம்பிக்கை இன்மைகளின் சிந்தனைப்போக்கோடு தொடர்புபடுத்துகையில். மகிழ்ச்சியின்மை பாவத்தின் காரணமாக ஏற்படுகிறது என்பதால் இந்தப் பாவம் சிலபோது துயரார்ந்தது என்று குறிப்பிடப்படுகிறது. துயரம் எப்போதுமே சோம்பலுக்கு காரணமாகிறது என்பதால் போப் கிரிகோரியின் பட்டியல் திருத்தம் அவநம்பிக்கையை சோம்பல் என்பதாக விரிவுபடுத்துகிறது.
மந்தம்
படிப்படியாக, காரணத்தைக் காட்டிலும் இந்த கவனம் சோம்பலின் தொடர்விளைவுகளாக இருக்கிறது, இதனால் 17 ஆம் நூற்றாண்டில் துல்லியமான கொடிய பாவம் என்பது ஒருவருடைய திறமைகளையும் சிறப்புக்களையும் பயன்படுத்தத் தவறிவிடுவது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நடைமுறையில், இது சோம்பல் என்பதைக் காட்டிலும் மந்தம் (லத்தீன், Socordia) என்பதற்கே அருகாக வருகிறது. தாந்தேயின் காலத்தில்கூட இந்த மாற்றம் குறித்த அறிகுறிகள் இருந்தன; அவருடைய பர்கடோரியோவில் சோம்பலுக்கான பிராயச்சித்தம் தொடர்ந்து அதிகபட்ச வேகத்தில் ஓடிக்கொண்டே இருப்பது என்று சித்தரிக்கிறார்.
இந்த நவீனக் கண்ணோட்டம் மேற்கொண்டும் செல்கிறது, சோம்பியிருப்பதும் அக்கறையின்மையும் மனதில் எழும் பாவமாக குறிப்பிடப்படுகிறது. உதாரணத்திற்கு இந்த முரணிலைகள் கடவுளையும் அவருடைய படைப்புக்களையும் மனமுவந்து விரும்பத் தவறுவதாகக் குறிப்பிடப்படுகிறது, மந்தம் என்பது மற்ற பாவங்களைக் காட்டிலும் குறைந்த கடுமையுள்ளதாகவும், செயல்படுவதைக் காட்டிலும் அலட்சியப்படுத்துவதனால் ஏற்படும் பெரிய பாவமாகவும் இருக்கிறது.
வெஞ்சினம்
வெஞ்சினம் (லத்தீன், ira), கோபம் அல்லது "சீற்றம்" என்றும் அறியப்படுகின்ற இது வெறுப்பு மற்றும் கோபத்தின் மட்டுமீறிய கட்டுப்படுத்தப்படாத உணர்ச்சிகள் என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த உணர்ச்சிகளை மற்றவர்களிடத்தில் உண்மையை மறுப்பதாலும், சட்டத்தின் நடைமுறையால் ஏற்படும் பொறுமையின்மையாலும் சுய-மறுப்பாலும் ஏற்படுவது என்பதாக கூறலாம், அத்துடன் நீதியமைப்பின் நடைமுறைகளுக்கு அப்பால் பழிவாங்க நினைப்பது என்பதாவும் (சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வது போன்று) பொதுவாக தீமை செய்ய நினைப்பது அல்லது மற்றவர்களைக் காயப்படுத்துவது எனலாம். வெஞ்சினத்தால் உருவாகும் குற்றங்கள் மிகவும் தீவிரமடைகின்றன, கொலை, தாக்குதல் மற்றும் உச்சபட்ச நிலையில் இனப்படுகொலை. சுயநலத்தோடு அல்லது சுய-விருப்பத்தோடு சம்பந்தப்படாத ஒரே பாவம் வெஞ்சினம் மட்டுமே (இருப்பினும் ஒருவர் சுயநலத்தினாலும் வெஞ்சினம் உள்ளவராக இருக்கலாம், அதாவது மற்றவர் வளர்ச்சியைக் கண்டு எரிச்சல்கொள்ளும் பாவத்திற்கு அருகாமையில் வரும் பொறாமை போன்று). தாந்தே வெஞ்சினத்தை "நீதியின் மீதான காதல் பழிவாங்கலாகவும் பகைமையாகவும் திசைமாறிப்போவது" என்று குறிப்பிடுகிறார். இதனுடைய அசல் வடிவத்தில் வெஞ்சினப் பாவமானது கோபம் வெளிப்புறமாகத் திரும்புவதைக் காட்டிலும் உட்புறமாக திரும்புவதோடும் உடனிணைந்திருக்கிறது. இவ்வகையில் தற்கொலை செய்துகொள்ளுதல் முடிவானதாக இருக்கிறது, துயரார்ந்ததாக இருந்தபோதிலும் வெஞ்சினத்தின் வெளிப்பாடு உள்நோக்கித் திரும்புகிறது, இதுவே கடவுளின் பரிசை இறுதியாக மறுதலிப்பதாகும்.
பொறாமை
பேராசையைப் போன்று பொறாமையும் (லத்தீன், invidia) திருப்திப்படுத்தப்படாத ஆசை என்று குறிப்பிடப்படுகிறது; இருப்பினும் இவை இரண்டு முக்கியக் காரணங்களால் வேறுபடலாம். முதலில், பேராசை என்பது பொருள்சார்ந்த அம்சங்களுடனே பெருமளவிற்கு சம்பந்தப்பட்டிருக்கிறது, அதேசமயத்தில் பொறாமையானது மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. இரண்டாவதாக, பொறாமை பாவத்தை செய்பவர்கள் தங்களுக்கு கிடைக்கவேண்டியதாக நினைப்பது மற்றவர்களுக்கு கிடைப்பதை நினைத்து சினம்கொள்வதாகும், அத்துடன் அந்த நபர் அதை இழந்துவிட வேண்டும் என்று விரும்புவதுமாகும். தாந்தே இதனை மற்றவர்கள் இழந்துவிட வேண்டும் என்று நினைக்கின்ற விருப்பம்" என்று வரையறுக்கிறார். தாந்தேயின் பர்காடோரியில், பொறாமை கொள்வதற்கான தண்டனை அவர்களுடைய கண்கள் கம்பியினால் தைக்கப்பட வேண்டும் என்பதாகும், ஏனென்றால் மற்றவர்கள் கீழே போவதைக் கண்டு அவை பாவம்செய்யும் மகிழ்ச்சியைப் பெறுகின்றன. அக்வினாஸ் பொறாமையை "மற்றவர்களுடைய நன்மையைக் கண்டு துயரப்படுவது" என்று விளக்குகிறார்.[10]
தற்பெருமை
ஏறத்தாழ எல்லா பட்டியலிலும் தற்பெருமை (லத்தீன், superbia) அல்லது இறுமாப்பு என்பது அசலான மற்றும் மிகவும் கடுமையான கொடிய பாவங்களாகக் கருதப்படுகிறது, உண்மையில் இதிலிருந்துதான் மற்றவை முற்றாக எழுகின்றன. இது மற்றவற்றைக் காட்டிலும் மிகவும் முக்கியமான அல்லது கவர்ச்சிகரமானதாக இருப்பதற்கான விருப்பமாக இருக்கிறது, மற்றவர்களின் சிறந்த பணிகளை ஒப்புக்கொள்ள மறுப்பது மற்றும் மிதமிஞ்சிய சுய காதல் (குறிப்பாக கடவுளை நோக்கிய நிலை என்பதற்கு வெளியில் சுயத்தைப் பிடித்துக்கொண்டிருப்பது). தாந்தேயின் வரையறை "சுய காதல் வெறுப்பிற்கும் ஒருவருடைய அயலாளர் குறித்த வெறுப்பிற்கும் திசைமாறிச்செல்வது" என்பதாக இருக்கிறது. ஜகோப் பைடர்மன்னின் மத்தியகால அற்புத நாடகமான செனோடாக்ஸஸில் தற்பெருமை என்பது எல்லாப் பாவங்களிலும் மிகவும் கொடியதாக இருக்கிறது என்பதுடன் தற்பெருமைக்குப் புகழ்பெற்ற பாரீஸ் மருத்துவரின் புகழ் அழிவதற்கு நேரடியாக இட்டுச்செல்கிறது. லூசிபரின் கதை நன்கறியப்பட்ட உதாரணமாக இருக்கலாம், தற்பெருமை (கடவுளுடன் போட்டியிடுவதற்கான அவருடைய விருப்பம்) அவரை சொர்க்கத்திலிருந்து வீழ்ந்துவிடச் செய்கிறது என்பதுடன் அவரை சாத்தானாகவும் மாற்றிவிடுகிறது. தாந்தேயின் டிவைன் காமெடியில் பாவமன்னி்பபுக் கோருபவர்கள் பணிவுடமை உணர்வுகளை அடைவதற்கு தங்களுடைய பின்பக்கத்தில் கற்பாளங்களை சுமந்து நடக்கும்படி விதிக்கப்படுகின்றனர்.
பகட்டு
பகட்டு (லத்தீன், vanagloria) என்பது நியாயப்படுத்தப்படாத தற்புகழ்ச்சியாகும். போப் கிரிகோரி இதனை தற்பெருமையின் ஒரு வடிவமாகக் காண்கிறார், எனவே அவர் தன்னுடைய பாவங்களின் பட்டியலில் பகட்டை தற்பெருமையாக சேர்த்துக்கொள்கிறார்.
லத்தீன் வார்த்தையான குளோரியா நேரடியாக தற்புகழ்ச்சி என்பதைக் குறிக்கிறது, இருப்பினும் இதனுடைய ஆங்கில இணையான - புகழ் - என்பது நேரடியான நேர்மறை அர்த்தத்தைக் குறிக்கிறது; வரலாற்றுப்பூர்வமாக, வீண் என்பது நேரடியாக பயனின்மையைக் குறித்து வந்திருக்கிறது, ஆனால் 14 ஆம் நூற்றாண்டில் வலுவான சுயகாதல் உணர்வுகளையே இது குறித்தது, இது தொடர்பற்ற பொருள் என்பதோடு இன்றுவரை இதுதான் நிலைத்திருக்கிறது.[11] இதன் பொருள் மாற்றங்களின் காரணமாக, பகட்டு அரிதாகவே பயன்படுத்தப்படும் வார்த்தையானது என்பதுடன் தற்போது பொதுவாக பகட்டாரவாரத்தை குறிப்பதாகவே விளக்கப்படுகிறது (அதனுடைய நவீன சுயகாதல் பொருளில்).
கத்தோலிக்க நல்லொழுக்கங்கள்
ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஏழு நல்லொழுக்கங்களையும் அங்கீகரித்திருக்கிறது, இவை ஒவ்வொரு ஏழு கொடிய பாவங்களோடும் எதிர்மறையான உறவு கொண்டிருக்கின்றன.
பாவம் | நல்லொழுக்கம் |
---|---|
காமம் | கற்பு |
பெருந்தீனி | அளவோடு உண்ணல் |
பேராசை | தாராள குணம் |
சோம்பல் | கடும் உழைப்பு |
வெஞ்சினம் | பொறுமை |
பொறாமை | தயையுள்ளம் |
தற்பெருமை | தாழ்ச்சி |
தீய சக்திகளுடனான தொடர்பு
1589 ஆம் ஆண்டில் பீட்டர் பின்ஸ்ஃபீல்ட் ஒவ்வொரு கொடிய பாவத்தோடும் தீய ஆவியை இணைத்துப்பார்க்கிறார், இவை மக்களை பாவத்தோடு தொடர்புகொள்ளும் வகையில் தூண்டுகிறது. பின்ஸ்ஃபீல்டின் தீய ஆவிகள் வகைப்படுத்தலின்படி, அதனுடைய இணைகள் பின்வருமாறு
- லூசிபர்: தற்பெருமை (சூப்பர்பியா)
- மேமன்: பேராசை (அவெரிஷியா)
- ஆஸ்மோடியஸ்: காமம் (லக்ஸூரியா)
- லெவியேதன்: பொறாமை (இன்விடியா)
- பீல்ஸ்பப்: பெருந்தீனி (குலா அல்லது குலியா)
- சாத்தான்/அமோன்: வெஞ்சினம் (ஐரா)
- பெல்பெகோர்: சோம்பல் (அகேடியா)
வகைமுறைகள்
ஜேஸுட் ஆய்வாளரின் 2009 ஆம் ஆண்டு ஆய்வின்படி, ஆண்களால் மன்னிப்புக் கோரப்படும் மிகவும் பொதுவான கொடிய பாவம் காமமாகவும், பெண்களால் கோரப்படும் கொடிய பாவம் தற்பெருமையாகவும் இருக்கிறது.[12] இந்த வேறுபாடுகள் வேறுபட்ட பலன்களின் வீதத்தினாலோ அல்லது "கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதிலான" வேறுபட்ட கண்ணோட்டங்கள் அல்லது மன்னிக்கப்பட வேண்டியதன் காரணமாக அமைகிறது.[13]
கலாச்சார மேற்குறிப்புகள்
இந்த ஏழு கொடிய பாவங்களும் நீண்டகாலமாகவே எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கான உந்துசக்தியாக இருந்திருக்கிறது, நீதிநெறிக் கதைகளிலிருந்து மத்திய காலப்பகுதிகள் மற்றும் நவீன மான்கா தொடர்கள் மற்றும் வீடியோ கேம்கள் வரை.
எனக்ராம் ஒருங்கிணைப்பு
எனக்ராம் ஆளுமை வஞ்சம் மற்றும் அச்சம் என்ற இரண்டு கூடுதல் "பாவங்களோடு" ஒருங்கிணைகிறது. எனக்ராம் விளக்கங்கள் வழக்கமான கிறிஸ்துவ விளக்கத்தைக் காட்டிலும் விரிவானவை என்பதோடு இவை ஒரு விரிவுபடுத்தப்பட்ட வரைபடத்தில் வழங்கப்பட்டிருக்கின்றன.[14][15]
அறிவியல்
- கன்சாஸ் மாகாணப் பல்கலைக்கழக புவியமைப்பு ஆராய்ச்சியாளரான தாமஸ் வோக்ட் தன்னுடைய ஆய்வை “நிவேடாவிற்குள்ளான ஏழு கொடிய பாவங்களின் பரவெளி பகிர்மானம்” என்று அளித்திருக்கிறார். மேலும், இந்த ஆய்வு நாடு முழுவதிலும் உள்ள 3,000 கவுண்டிகளை உள்ளடக்கியிருக்கிறது என்பதுடன் அமெரிக்கா முழுவதிலும் பாவ பகிர்மானத்தின் ஒருங்கிணைந்த வரைபடங்களையும் உள்ளடக்கியிருக்கிறது.[16]
உசாத்துணை
- Boyle, Marjorie O'Rourke (1997). "Three: The Flying Serpent". Loyola's Acts: The Rhetoric of the Self. The New Historicism: Studies in Cultural Poetics,. 36. Berkeley: University of California Press. பக். 100–146. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-20937-4. http://ark.cdlib.org/ark:/13030/ft2t1nb1rw/.
- Proverbs 6:16–19
- Galatians
- Evagrio Pontico,Gli Otto Spiriti Malvagi , trans., Felice Comello, Pratiche Editrice, Parma, 1990, p.11-12.
- ரெஃபோல், 1967
- கத்தோலிக்க தேவாலயத்தின் கொள்கைகள்
- ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி
- ஆக்ஹோம், டென்னிஸ். "பெருந்தீனிக்கான வேர்ச்சொல்". கிறிஸ்டியானிட்டி டுடே , தொகுப்பு. 44, எண். 10, செப்டம்பர் 11, 2000, பக்.62
- "Gluttony". Catholic Encyclopedia.
- "Summa Theologica: Treatise on The Theological Virtues (QQ[1] - 46): Question. 36 – OF ENVY (FOUR ARTICLES)". Sacred-texts.com. பார்த்த நாள் 2010-01-02.
- ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி
- 'வேறுபட்ட வழிகளில் இரண்டு பால்களின் பாவம்'
- நிஜமான பாவமன்னிப்பு: ஆண்கள் மற்றும் பெண்களின் பாவம் வேறுபட்டது
- மைத்ரி, தி எனக்ராம் ஆஃப் பேஷன்ஸ் அண்ட் வர்ச்சுஸ் , பக்.11-31
- ரோர், தி எனக்ராம்
- By dukeofurl. "One nation, seven sins – Thursday, March 26, 2009 | 2 a.m.". Las Vegas Sun. பார்த்த நாள் 2010-01-02.
புற இணைப்புகள்
- Catholic Catechism on Sin
- Medieval mural depictions – in parish churches of England (online catalog, Anne Marshall, Open University)
- Stranger, An Allegorical Tale of the Seven Deadly Sins, ISBN 978-1-311-07384-6