சாத்தான்

சாத்தான் அல்லது அலகை என்பது, யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய தொன்மவியல் கதைகளுக்கு இணங்க தீய சக்திகளின் ஒர் உருவகம். சாத்தான் என்ற எண்ணக்கரு இரானிய தீர்க்கதரிசி சொரோஸ்ரர் என்பவரால் நல்ல சத்திகளுக்கு நேர் எதிரான தீய சக்திகளின் வடிவமாக ஆக்கப்பட்டது. யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய கதையாடலில் சாத்தான் இறைவனால் உருவாக்கப்பட்ட ஒரு தேவதூதன் தன் தெரிவால் தீய வழியில் வீழ்ந்தான் எனப்படுகின்றது.

சாத்தான்

மதங்களின் பார்வையில்

கிறிஸ்தவம்

கிறிஸ்தவ மதத்தில் சாத்தான் என்பவன் கடவுளால் உருவாக்க பட்ட தேவதூதன், கடவுளின் கட்டளைக்கு கீழ்படிய மறுத்ததால் நரகத்திற்கு தள்ளபட்டான் என்று நம்பப்படுகிறது. கிறிஸ்தவர்களின் புனித நூலாக திருவிவிலியத்தில் சாத்தானை பற்றி பல குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. முதல் பெற்றோர்களான ஆதாம், ஏவாளை பாம்பு வடிவில் தோன்றி உண்ணக்கூடாது என்று கடவுள் கூறிய பழத்தை ஏமாற்றி உண்ண வைத்தாகவும், இதன் மூலம் கடவுளின் அருகிலிருக்கும் பேற்றை மனிதன் இழந்ததாகவும் திருவிவிலியத்தின் முதல் புத்தகமான தொடக்கநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.