என் புருசன் குழந்தை மாதிரி (திரைப்படம்)
என் புருசன் குழந்தை மாதிரி என்பது 2001 ஆவது ஆண்டில் எஸ்.பி. ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். லிவிங்ஸ்டன், தேவயானி, விந்தியா, வடிவேலு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[1] 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த இத்திரைப்படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்தது.[2][3][4][5] இத்திரைப்படம் சிவாஜி, மீரா ஜாஸ்மின், சங்கீதா ஆகியோரின் நடிப்பில் மா அயநா சண்டி பில்லாடு எனும் பெயரில் தெலுங்கில் மறுஆக்கம் செய்யப் பட்டது.
என் புருசன் குழந்தை மாதிரி | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். பி. ராஜ்குமார் |
இசை | தேவா |
நடிப்பு | லிவிங்ஸ்டன் தேவயானி விந்தியா வடிவேலு |
வெளியீடு | 2001 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
முருகேசன் (லிவிங்ஸ்டன்), தனது மாமன் மகளான மகேஸ்வரியையே (தேவயானி) தனது உலகமென நினைத்து வாழ்கிறார். அவருடைய காதலுக்கு மகேஷ்வரியும் சம்மதம் தரவே இருவருக்கும் திருமணம் நடக்கிறது. இந்நிலையில் சாந்தமூர்த்தியிடம் நடனக் கலைஞரான சிந்தாமணி (விந்தியா) மாட்டிக் கொள்ளும் போது அவரை முருகேசன் காப்பாற்றி தனது தோட்டத்தில் தங்க வைக்கிறார். எதிர்பாராத விதமாக சிந்தாமணி கர்ப்பமாக முருகேசன் காரணமாகிறார். இதே நேரத்தில் முருகேசனின் மனைவியான மகேஷ்வரியும் கர்ப்பமாகிறார். இந்த பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதே இப்படத்தின் இறுதிக் காட்சியாகும்.
நடிகர்கள்
- லிவிங்ஸ்டன் - முருகேசன்
- தேவயானி - மகேஷ்வரி
- விந்தியா - சிந்தாமணி
- வடிவேலு - அங்குசாமி
- பொன்னம்பலம் - சாந்த மூர்த்தி
- ஆர். சுந்தர்ராஜன்
பாடல்கள்
இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.
எண் | பாடல் | பாடியவர்(கள்) |
---|---|---|
1 | ஆடிய ஆட்டம் | தேவா |
2 | சித்திரையே | ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் |
3 | நாலு அடி ஆறு அங்குலம் | வடிவேலு |
4 | பட்டாம்பூச்சி | மனோ, அனுராதா ஸ்ரீராம் |
5 | வாழ வைக்கும் | சபேஷ், கிருஷ்ணராஜ் |
6 | வெண்ணிலா | உன்னிகிருஷ்ணன், சத்யா |
மேற்கோள்கள்
- "the En Prusan Kulanthai Mathiri Songs - Deva - En Prusan Kulanthai Mathiri Tamil Movie Songs - Oosai.com - A Sound of Tamil Music - An Online Tamil songs Portal , Carries more than 4600 Tamil Movie Songs Online". Oosai.com. பார்த்த நாள் 2014-11-27.
- "Film review: En Purushan Kuzhandhai Madhiri". The Hindu (2001-03-16). பார்த்த நாள் 2014-11-27.
- ""EN PURUSHAN KUZANDAI MADHIRI" New Tamil Movie Review By "Your Prabhu"". Lolluexpress.com. பார்த்த நாள் 2014-03-01.
- "En Purushan Kuzhandhai Maadhiri". Bbthots.com. பார்த்த நாள் 2014-11-27.
- http://web.archive.org/web/20010405150614/http://www.chennaionline.com/Moviereviews/tammov108.asp