ஹிஸ்புல் முஜாகிதீன்

ஹிஸ்புல் முஜாகிதீன் (Hizbul Mujahideen அரபி: حزب المجاھدین‎) இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் செயல்படும் தீவிரவாத அமைப்பு ஆகும்.[1] ஹிஸ்புல் முஜாகிதீன் என்பதற்கு புனிதப் போராளிகளின் குழு என்று பொருள். இந்தக் குழுவானது இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தீவிரவாதக் குழுவாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.[2] இந்தக் குழுவின் தற்போதைய தலைவர் காஷ்மீரைச் சேர்ந்த சையது சலாலுதீன் ஆவார். இக்குழு அசான் தார் என்பவரால் 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சையது சலாலுதீன் தற்போது பாகிஸ்தானில் உள்ளார். இவரை இந்தியாவிடம் ஒப்படைக்கும் படி பாகிஸ்தானை இந்தியா பலமுறை கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் சமீபத்திய ஊடகப் பேட்டி ஒன்றில் இக்குழுவிலுள்ள ஒருவர் பாகிஸ்தான் அரசு ஒருபோதும் சையது சலாலுதீனை இந்தியாவிடம் ஒப்படைக்காது எனக் கூறியுள்ளார். அமெரிக்கா அரசு சையது சலாலுதீனை சர்வதேசத் தீவிரவாதியாக ஜூன் 2017 ஆம் ஆண்டு அறிவித்தது.[3]

பாகிஸ்தான் தொடர்பு

சையது சலாலுதீன் இந்தியாவின் காஷ்மீரில் பிறந்திருந்தாலும் அவருக்கு பாகிஸ்தானின் லாகூர் மற்றும் பெஷாவரில் வீடுகள் உள்ளன. சையது சலாலுதீன் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்புடன் தொடர்பு கொள்வதற்காகவும், மேலும் காஷ்மீரில் மேற்கொள்ளப்படும் தீவிரவாதச் செயல்கள் பற்றி விவாதிக்கவும், நிதி தொடர்பான விஷயங்களைக் கையாளவும், பயிற்சி முகாம்கள் பற்றி விவாதிக்கவும் இந்த வீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

வாக்குமூலம்

நாள்கள் பாகிஸ்தானுக்காக காஷ்மீரில் போரை நடத்துகிறோம், பாகிஸ்தான் எங்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தினால் நாங்கள் பாகிஸ்தானுடன் போரிட நேரும்.

சையது சலாலுதீன் (ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர்)[4]

2012 ஆம் ஆண்டின் நேர்காணல் ஒன்றில் சையது சலாலுதீன், பாகிஸ்தான் தற்போது காஷ்மீரில் தீவிரவாதச் செயல்களை ஊக்கிவிப்பதில்லை என்றும் அதனால் பாகிஸ்தானயே தாக்க உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தான்.[4] 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதிகளில் ஒருவரான தாலிப் லாலி இந்தியப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.[5]

இணையத்தளம்

இந்த இயக்கத்தின் இணையத்தளம்.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.