ஹில் முறை
ஹில் முறை (Hill system, அல்லது Hill notation) என்பது மூலக்கூறு வாய்ப்பாட்டை எழுதும் ஒரு முறையாகும். இங்கே முதலில் கார்பன் குறியீடும் பின்னர் ஐதரசன் குறியீடும் அதன் பின்னர் ஆங்கில நெடுங்கணக்கு வரிசையில் அணுக்களின் குறியீடுகள் எழுதப்படும். மூலக்கூறில் கார்பன் அணு இல்லாவிட்டால் நெடுங்கணக்கு வரிசையின் படி மூலக்கூறு வாய்ப்பாடு எழுதப்படும். இம்முறையானது மூலக்கூறு வாய்ப்பாட்டில் இலகுவாக அணு எண்ணிக்கைகளைத் தேடியறிய உதவும்.
இம்முறையானது 1900ஆம் ஆண்டு எட்வின். ஏ. ஹில் என்பாரால் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இதுவே மூலக்கூறு வாய்ப்பாடுகளை எழுதுவதில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் முறையாகும்.[2]
உதாரணங்கள்
பின்வரும் மூலக்கூற்று வாய்ப்பாடுகள் ஹில் முறையிலேயே எழுதப்பட்டுள்ளது:[2]
- BrH
- BrI
- CH3I
- C2H5Br
- H2O4S
மேற்கோள்கள்
- Edwin A. Hill (1900). "On a system of indexing chemical literature; Adopted by the Classification Division of the U.S. Patent Office". J. Am. Chem. Soc. 22 (8): 478–494. doi:10.1021/ja02046a005.
- Wiggins, Gary. (1991). Chemical Information Sources. New York: McGraw Hill. p. 120.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.