கிருத்திக் ரோஷன்

கிரித்திக் ரோஷன் அல்லது ஹிரித்திக் ரோஷன் (ஹிந்தி: ऋतिक रोशन [ˈrɪtɪk ˈroːʃən]; பிறப்பு:10 ஜனவரி 1974)[1] பாலிவுட் திரைப்படங்களில் தோன்றும் இந்திய நடிகர் ஆவார்.

கிருத்திக் ரோஷன்

கிருத்திக் ரோஷன்
இயற் பெயர் கிருத்திக் ரோஷன்
பிறப்பு சனவரி 10, 1974 (1974-01-10)
மும்பை, மகாராஷ்த்ரா, இந்தியா
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 1980–1986, 2000–தொடக்கம்
துணைவர் சுசனே கான் (2000–தொடக்கம்)

1980 களில் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றியதற்குப் பிறகு, கஹோ நா... பியார் ஹே (2000) என்னும் திரைப்படத்தில் ஹிரித்திக் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதுடன் இதில் ரோஷனின் நடிப்பு அவருக்கு சிறந்த நடிகர் மற்றும் சிறந்த அறிமுக ஆண் நடிகர் ஆகிய ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றுத்தந்தது. இவரது நடிப்பிற்காக அதிக பாராட்டுகளைப்பெற்ற சில படங்கள் கோயி... மில் கயா (2003), க்ரிஷ் (2006), தூம் 2 (2006) மற்றும் ஜோதா அக்பர் (2008) ஆகியவைகள் ஆகும். இதில் ஜோதா அக்பர் இது வரை வெளிவந்த திரைபடங்களில் வர்த்தக ரீதியில் பெரும் வெற்றி பெற்றதுடன் இந்த படத்திற்காக அவருக்கு பல்வேறு சிறந்த நடிகர் விருதுகளும் வழங்கபட்டன.[2]

2008 ம் ஆண்டில் ரித்திக் அவர்கள் அவரது ஜோதா அக்பர் திரைபடத்திற்காக ரஷ்யாவின் கஸானில் நடைபெற்ற கோல்டன் மின்பார் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் அவரது முதல் சர்வதேச விருதினை வென்றார்.[3] ஹிரித்திக் அவர்கள் தன்னை ஒரு முன்னணி பாலிவுட் நடிகராக நிலைபடுத்திக் கொண்டுள்ளார்.[4]

தொழில் வாழ்க்கை

1999 வரையிலான துவக்க காலம்

1980 ல் ஒரு குழந்தை நட்சத்திரமாக ஆஷா என்னும் திரைபடத்தில் வரும் ஒரு நடனக் காட்சியில், ஒரு துணை நடிகர் கதாபாத்திரமாக ரித்திக் அவர்களின் சினிமா வாழ்க்கை துவங்கியது. ஆப் கி தீவானோ (1980) மற்றும் பகவான் தாதா (1986) ஆகிய இரு திரைபடங்களில் ரித்திக் அவர்கள் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றினார். இவ்விரண்டு படங்களிலும் அவரது தந்தை ராகேஷ் ரோஷன் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பின்னர் அவர் அவரது தந்தையின் தயாரிப்புகளான கரண் அர்ஜுன் (1995) மற்றும் கோய்லா (1997) ஆகிய படங்களில் துணை இயக்குனராகப் பணியாற்றினார்.

திருப்புமுனை, 2000-2002

2000 ம் ஆண்டில் ரித்திக் அவர்கள் முதன் முதலில் கதாநாயகனாக கஹோ நா... பியார் ஹே எனும் படத்தில் தோன்றினார். இப்படத்தில் அவரது நாயகி மற்றொரு புதிய அறிமுகமான அமீஷா படேல் ஆவார். இவரது தந்தை இயக்கி ரித்திக் அவர்கள் இரு வேடங்களில் நடித்த இத்திரைப்படம் மிக வெற்றிகரமான திரைப்படமாக ஓடியதுடன் 2000 ம் ஆண்டின் சிறந்த வசூல் குவித்த வெற்றிப்படமாகவும் விளங்கியது[5] மற்றும் ஃபிலிம்பேரின் மிகச்சிறந்த படத்திற்கான விருதுவென்றது. இதில் ரோஷனின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டதுடன், விரைவில் மிகப்பெரிய நட்சத்திரமாகவும் அவர் வளர்ந்தார்.[6][7][8] இப்படத்தில் அவர் நடிப்பிற்காக ஃபிலிம் ஃபேரின் மிகச்சிறந்த அறிமுக ஆண் நடிகருக்கான மற்றும் ஃபிலிம் ஃபேர் மிகச்சிறந்த நடிகர் ஆகிய விருதுகள் அவருக்கு ஒரே சமயத்தில் வழங்கப்பட்டது. இத்திரைப்படம் 2003 ஆம் ஆண்டில் மட்டும் 102 விருதுகளைப் பெற்று, அதிக விருதுகள் வென்ற சாதனைக்காக லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.[9]

பின்னர் அவர் அந்த ஆண்டிலேயே காலித் மொஹம்மது அவர்களின் ஃபிஸா என்னும் திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் வர்த்தக ரீதியில் வெற்றிபெறவில்லை என்றாலும் அவரது நடிப்பிற்காக பரவலாக பாராட்டினை பெற்றது, அதுமட்டுமின்றி ஃபிலிம்ஃபேர் விழாவில் அவருக்கு மற்றுமொரு சிறந்த நடிகர் விருதினையும் பெற்றுத்தந்தது. இந்தியா எஃப்எம் ஐ சேர்ந்த தரண் ஆதர்ஷ் அவர்கள் "திரைப்படத்தின் முக்கிய தூண் சந்தேகமின்றி ரோஷன் மட்டுமே" என்று கூறினார்.அவரது உடல் மொழி, அர்பணிப்புணர்வு, வெளிப்படுத்திய வெளிப்பாடுகள், மற்றும் அவரது ஒட்டுமொத்த நடிப்பும் மிகுந்த பாராட்டிற்கு உரியதாகும். இத்திரைபடத்தின் வழியாக, தான் வெறும் ஃபேஷனான, மற்றும் ஒரு கவர்ச்சி நாயகன் மட்டும் இல்லை என்பதை ரோஷன் அவர்கள் நிரூபித்தார். அவரது திறமை பல காட்சிகளில் வெளிப்பட்டது. குறிப்பாக கரிஷ்மா உடனான காட்சிகளில். எவ்வாறாக இருப்பினும் பிஸாவினை இயன்ற அளவு காப்பாற்றிய பெருமை ரித்திக்கையே சாரும். சந்தேகமின்றி அது ஒரு அற்புதமான நடிப்பே!"[10]

அந்த ஆண்டின் ரித்திக் அவர்களின் கடைசி திரைப்படம் மிஷன் காஷ்மீர் ஆகும். இது அந்த ஆண்டின் மூன்றாவது மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படமாகும்.[5] இவரது நடிப்பு மீண்டும் ஒரு முறை பலதரப்பட்ட பாராட்டுகளைப் பெற்றது. ஒரு விமர்சகர், "தீவிரவாதத்தின் கோரப்பிடியில் சிக்கிய ஒரு இளைஞராக ரித்திக் அற்புதமாக நடித்துள்ளார்” என பாராட்டினார். இத்திரைபடத்தின் துவக்கத்தில் அவர் அரசாங்க விரோதியாக தோன்றியிருப்பார். ஒரு வளர்ந்து வரும் நடிகர் கூட நடிக்க விரும்பாத பாத்திரத்தை அவர் அந்த திரைபடத்தில் ஏற்றுக்கொண்டார்." இவரது இத்தகைய சாதனைகள் அவரை சினிமாதுறையின் மிகப்பெரிய நட்சத்திரங்களுள் ஒருவராக நிலைநிறுத்தியது.[11]

சுபாஷ் கய் அவர்களின் யாதீன் திரைப்படம் 2001 ம் ஆண்டில் ரோஷனின் முதல் திரைப்படமாகும். அதைத்தொடர்ந்துகரன் ஜோஹர் அவர்களின் குடும்பச் சித்திரமாக கபி குஷி கபி கம் வெளிவந்தது. இது வர்த்தக ரீதியில் பெரும் வெற்றி பெற்றதுடன் 2001 ம் ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் மற்றும் வெளிநாடுகளில் பெரும் வெற்றி பெற்ற படமாகவும் திகழ்ந்தது.[12][13] ரோஷனின் நடிப்பு அதிக பாராட்டுதல்களைப் பெற்றதுடன் மிகச்சிறந்த துணை நடிகர் என பல விருதுகளை அவருக்கு பெற்றுத் தந்தது.

2002 ம் ஆண்டு ரோஷனுக்கு வெற்றிகரமாக அமையவில்லை. - முஜே தோஸ்தி கரோகி! , நாம் தும் ஜானோ நா ஹம் மற்றும் ஆப் முஜே அச்சே லக்னே லகே - ஆகிய மூன்று படங்களுடன் சரியான வரவேற்பினை பெறாததால் அவைகள் தோல்வி படங்கள் என அறிவிக்கப்பட்டது.[14]

2003 முதல் இன்று வரை அவரது வெற்றிகள்

2003 ம் ஆண்டில் அறிவியல் புனைவு திரைப்படமான கோயி... மில் கயா , என்னும் திரைபடத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞனாக நடித்தார்.[8] இத்திரைப்படம் அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்ததோடு மட்டுமின்றி அவருக்கு இரண்டாவதாக ஃபிலிம்ஃபேரின் மிகச்சிறந்த நடிகருக்கான விருது மற்றும் முதலாவது ஃபிலிம்ஃபேரின் மிகச்சிறந்த நடிகர் (விமர்சன) விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுத்தந்தது.[15] தரன் ஆதர்ஷ் அவர்கள் "ஒட்டுமொத்தத் திரைபடத்திலும் ஆதிக்கம் செலுத்துவது ரோஷன் அவர்களின் நடிப்பாலே. மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கதாபாத்திரம் அத்தனை சுலபமானது கிடையாது. ஆனால் ரித்திக் அவர்கள் அதை மீன் தண்ணீரில் நீந்துவது போன்று எளிதாகச் செய்துள்ளார். ஜீரோவிலிருந்து ஹீரோவாகும் வழக்கத்தினை அவர் மிகச் சிறப்பாக மேற்கொண்டார். ஒரு நடிகராக, இதன் மூலம் அவர் பல்வேறு புதிய உயரங்களைத் தொட்டார்."[16]

2004 ம் ஆண்டில் ஃபர்ஹான் கான் அவர்களின் லஷ்யா மட்டுமே ரோஷனின் ஒரே ஒரு திரைப்படமாக வெளிவந்தது. அது வெற்றிபெறவில்லை.[17] எனினும் அவரது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.[18]

சூப்பர் ஹீரோ திரைப்படமான கிரிஷ் படத்தில் நடிக்க தயார் செய்துகொள்வதற்காக ரித்திக் அவர்கள் இரண்டு ஆண்டுகள் நடிப்பில் இடைவெளி விட்டு தன்னை தயார் படுத்திக் கொண்டார். இது 2003 ஆம் ஆண்டு வெளிவந்த கோயி... மல் கயா திரைபடத்தின் தொடர்ச்சியாக ஜுன் 2006 ல் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததுடன் 2006 ஆம் ஆண்டின் உச்சபட்ச வசூலினையும் பெற்றது.[19] இத்திரைபடத்தில் ஒரு சூப்பர் ஹீரோவாக இவரது நடிப்பு பலத்த பாராட்டினைப் பெற்றதுடன் அவருக்கு பல்வேறு சிறந்த நடிகர் விருதுகளையும் பெற்றுத்தந்தது. இதில் ஸ்டார் ஸ்கிரீன் மற்றும் இண்டர்நேஷனல் இந்தியன் ஃபிலிம் அகாடமி விருதுகள் விழாக்களும் அடக்கம்.[2]இந்தியா எஃப்எம் பின்வருமாறு எழுதியது. "கிரிஷ் திரைபடத்தின் ஆத்மா ரித்திக் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நடிகர் கோயி... மில் கயா , திரைபடத்திற்காக பெற்ற விருதுகள் கிரிஷ் வழியாக இரட்டிப்பாகும். அப்லாம்ப் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையாக நீங்கள் வேறு எந்த நடிகரையும் கற்பனை செய்து பார்க்க முடியாது. அவரது முகமூடியும், ஆடைகளும் மற்றும் ஒப்பனை, நடை மற்றும் தனிப்பழக்கங்கள் மற்றும் வயதான தந்தை பாத்திரம் ஆகியவைகளினால் ரித்திக் அவர்கள் இந்திய திரைப்பட உலகின் மிக முக்கிய திறமைசாலிகளில் ஒருவர் என்பதை நாம் ஏற்றுக்கொள்வோம். அவரது சாதனை வரலாற்றில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்த திரைப்படம் கிரிஷ் ஆகும்.[20]

அதே வருடத்தில் அவரது அடுத்த படம் 2004 ம் ஆண்டு வெளியான தூம் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான தூம் 2 ஆகும். ஐஷ்வர்யா ராய் பச்சன் அவர்களுடன் நடித்த ரித்திக் அவர்களின் நடிப்பு விமர்சகர்களின் பரவலான பாராட்டினைப் பெற்றது மட்டுமல்லாமல் [2][21] அவருக்கு முன்றாவது முறையாக ஃபிலம்ஃபேர் மிகச்சிறந்த நடிகர் விருதினையும்பெற்றுத்தந்தது. இத்திரைப்படம் 2006 ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக விளங்கியதுடன் பாலிவுட் வரலாற்றின் வெற்றிகரமான படங்களுள் ஒன்றாகவும் திகழ்ந்தது.[19][22]

2008 ம் ஆண்டில், அஷுடோஷ் கோவரிகர் அவர்களின் ஜோதா அக்பர் திரைப்படத்தில் ஐஷ்வர்யா ராய் பச்சனுடன் இவர் நடித்தார். இவர் நடித்தது அக்பர் என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பாத்திரத்தில். இந்தியா மற்றும் வெளிநாடு ஆகிய இரு பகுதிகளிலும் இத்திரைப்படம் வர்த்தக ரீதியில் பெறும் வெற்றியை பெற்றது.[13][23] இத்திரைபடத்தில் இவரது நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டதுடன்,[2] இவருக்கு நான்காவது முறையாக ஃபிலிம் ஃபேர் மிகச்சிறந்த நடிகர் விருதும் மற்றும் ரஷ்யாவிலுள்ள கஜானில் நடைபெற்ற கோல்டர் மினபார் சர்வதேச திரைப்பட விழாவில் முதன் முதலாக மிகச்சிறந்த நடிகருக்கான சர்வதேச விருதும் கிடைத்தது.[3]

ரித்திக் அவர்கள் சமீபத்திய ஜோயா அக்தர் அவர்களின் லக் பை சான்ஸ் என்னும் திரைபடத்தில் கெரளவத் தோற்றத்தில் தோன்றினார். இவர் தற்போது அனுராக் பாசு அவர்களின் கைட்ஸ் படத்தில் மெக்ஸிகன் நடிகை பார்பரா மோரி மற்றும் கங்கனா ரெனாவத் அவர்களுடன் நடித்துவருகிறார். மேலும் ஐஷ்வர்யா ராய் பச்சன் அவர்களுடன் சஞ்ஜய் லீலா பன்சாலி அவர்கள் இயக்கும் குஜாரிஷ் என்ற பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிப்பதற்கும் ஒப்புக்கொண்டுள்ளார்.[24]

சொந்த வாழ்க்கை

சினிமா பிரபலங்கள் அடங்கிய பஞ்சாபி ஹிந்து குடும்பத்தில் மும்பையில் ரித்திக் அவர்கள் பிறந்தார். இவரது தந்தை திரைப்பட இயக்குனரான ராகேஷ் ரித்திக் அவர்கள் இசையமைப்பாளர் ரோஷன் அவர்களின் மகனாவார். தாய் பிங்கி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஜே.ஓம் பிரகாஷ் அவர்களின் மகளாவார். அவரது மாமா ராஜேஷ் ரித்திக் ஒரு பிரபலமான இசையமைப்பாளர் ஆவார்.

சிறுவனாக இருந்த போது ரித்திக் அவர்கள் படித்தது பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளியில்.[25] பின்னர் அவர் சிடென்ஹாம் கல்லூரியில் சேர்ந்து வர்த்தகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.[26]

சுஷேன் ரோஷன்ஸ் ஹவுஸ் ஆஃப் டிசைன் உரிமையாளர் மற்றும் சஞ்சய் கான் அவர்களின் மகள் சுசேன் கான் அவர்களை ரித்திக் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஹிரேஹன் 2006 இலும் மற்றும் ஹ்ரிதான் 2008 இலும் பிறந்தனர்.[27][28]

ரோஷனுக்கு அவரது வலது கையில் இரண்டு கட்டை விரல்கள் உள்ளன [29]

விருதுகள்

படப் பட்டியல்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மற்ற குறிப்புகள்
1980 ஆஷா குழந்தை நட்சத்திரம்
ஆப் கி தீவானே குழந்தை நட்சத்திரம்
1986 பகவான் தாதா கோவிந்தா (குழந்தை நட்சத்திரம்)
2000 கஹோ நா... பியார் ஹே ரோஹித்/ராஜ் சோப்ரா இரட்டை - வெற்றியாளர் , ஃபிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருது &
சிறந்த அறிமுகத்துக்கான பிலிம்பேர் விருது
ஃபிஸா அமான் இக்ராமுல்லா சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்
மிஷன் காஷ்மீர் அல்டாஃப் கான்
2001 யாதேன் ரோனித் மல்ஹோத்ரா
கபீ குஷி கபீ காம் ரோஹன் ராய்சந்த் பரிந்துரை , பிலிம்பேர் சிறந்த துணை நடிகர் விருது
2002 ஆப் முஜே அச்சே லக்னே லகே ரோஹித்
நா தும் ஜானோ நா ஹம் ராகுல் ஷர்மா
முஜ்ஸே தோஸ்தி கரோகே ராஜ் மல்ஹோத்ரா
2003. மைன் பிரேம் கி திவானி ஹூன் பிரேம் கிஷண் மாத்தூர்
கோயி... மில் கயா ரோஹித் மேரா இரட்டை-வெற்றியாளர் , ஃபிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருது &
சிறந்த நடிப்புக்கான பிலிம்ஃபேர் கிரிட்டிக்ஸ் விருது வென்றார்
2004 லஷ்யா கரண் ஷெர்கில் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்
2006 க்ரிஷ் கிருஷ்ணா மேரா(கிருஷ்)/
ரோஹித் மேரா
சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்
தூம் 2 அயன்/திரு.A வெற்றியாளர், சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது
ஐ சி யு சுபஹ் சுபஹ் எனும் பாடலில் சிறப்பு தோற்றம்
2007 ஓம் சாந்தி ஓம் அவரே சிறப்புத் தோற்றம்
2008 ஜோதா அக்பர் ஜலாலுதின் மொஹம்மது
அக்பர்
கோல்டன் மின்பார் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் வெற்றியாளர்
வெற்றியாளர், சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது
க்ரேசி 4 தலைப்பு பாடலில் சிறப்புத் தோற்றம்
2009 லக் பை சான்ஸ் ஜாஃபர் கான் சிறப்புத் தோற்றம்
2010 கைட்ஸ் ஜெய் தயாரிப்புக்கு பிந்தைய பணிகள்
குஜாரிஷ் படப்பிடிப்பில்
2011 விஷால் பரத்வாஜின் நெக்ஸ்ட் ஜுன் 2010 முதல்
2013 க்ரிஷ் 3 கிருஷ்ணா மேரா(கிருஷ்)/
ரோஹித் மேரா
சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்

மேலும் பார்க்க

குறிப்புகள்

  1. "Hrithik Roshan overview and filmography". IMDb. பார்த்த நாள் 2009-04-20.
  2. "Hrithik the super hero…". Indiatimes Movies (3 March 2009). பார்த்த நாள் 2009-08-15.
  3. "Jodhaa Akbar, Hrithik win awards at Golden Minbar Film Festival in Russia". Bollywood Hungama (23 October 2008).
  4. N, Patcy (19 December 2006). "Mr Talented". ரெடிப்.காம். பார்த்த நாள் 2009-05-08.
  5. "Box Office 2000". மூல முகவரியிலிருந்து 2012-07-07 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-03-04.
  6. Rajendran, Girija (18 August 2000). "A perfect professional has come to stay". The Hindu. பார்த்த நாள் 2009-05-08.
  7. Mitlal, Madhur (7 January 2001). "A year of surprises and shocks". The Tribune. பார்த்த நாள் 2009-08-15.
  8. Verma, Sukanya (15 December 2003). "Bollywood's top 5, 2003: Hrithik Roshan". Rediff.com. பார்த்த நாள் 2009-05-08.
  9. "2003 tidbits". http://www.hrithikrules.com/filmography/knph/Limca.htm. பார்த்த நாள்: 2007 பிப்ரவரி 13.
  10. "Fiza: Movie Review". http://www.indiafm.com/movies/review/6577/index.html. பார்த்த நாள்: 2000-12-15.
  11. "Top Actors". Archived from the original on 2012-07-07. http://archive.is/qU27. பார்த்த நாள்: 2009-03-04.
  12. "Box Office 2001". Archived from the original on 2012-07-12. http://archive.is/2IX9. பார்த்த நாள்: 2009-03-04.
  13. "Overseas Earnings (Figures in Ind Rs)". Archived from the original on 2012-12-04. http://archive.is/Uacl. பார்த்த நாள்: 2009-03-04.
  14. "Box Office 2002". Archived from the original on 2012-07-08. http://archive.is/LiPn. பார்த்த நாள்: 2009-03-04.
  15. "Box Office 2003". Archived from the original on 2012-07-09. http://archive.is/FdT9. பார்த்த நாள்: 2009-03-04.
  16. "Koi... Mil Gaya: Movie Review". http://www.indiafm.com/movies/review/7019/index.html. பார்த்த நாள்: 2003-08-08.
  17. "Box Office 2004". Archived from the original on 2012-05-24. http://archive.is/kkAW. பார்த்த நாள்: 2009-03-04.
  18. "Lakshya: Movie Review". http://www.indiafm.com/movies/review/7151/index.html. பார்த்த நாள்: 2004-06-18.
  19. "Box Office 2006". Archived from the original on 2012-06-30. http://archive.is/wPzq. பார்த்த நாள்: 2009-03-04.
  20. "Krrish: Movie Review". http://www.indiafm.com/movies/review/12415/index.html. பார்த்த நாள்: 2006-06-22.
  21. "Dhoom 2: Movie Review". http://www.indiafm.com/movies/review/12546/index.html. பார்த்த நாள்: 2006-11-24.
  22. "All Time Earners Inflation Adjusted". Archived from the original on 2012-07-07. http://archive.is/VeT1. பார்த்த நாள்: 2009-03-04.
  23. "Box Office 2008". Archived from the original on 2012-05-25. http://archive.is/9faT. பார்த்த நாள்: 2009-03-04.
  24. ""Roshan Raahein"" (2008-11-20).
  25. "Chat".
  26. "Sydenham College".
  27. "Another son for Hrithik and Suzanne". Rediff.com. பார்த்த நாள் May 1, 2008.
  28. "Hrithik's son to be named Hridhaan". IANS, DNA News. பார்த்த நாள் March 23, 2006.
  29. Ahmed, Afsana (2004-06-01). "'Impossible dreams can come true'". Times of India. பார்த்த நாள் 2009-10-18.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.