ஸ்வரம் (நிரலாக்க மொழி)

ஸ்வரம் என்பது நிரல்களை முழுமையாகத் தமிழிலேயே எழுதும் வகையில் உருவாக்கப்பட்ட நிரலாக்க மொழியாகும். இம்மொழியில் தமிழ்ச் சொற்களைக் கொண்டே நிரல்களை எழுத முடியும். எளிமையாக பயன்படுத்தும்வகையிலும் பொதுப் பயன்பாட்டு மொழியாகவும் உருவாக்கப் பட்டுள்ளது. உருவாக்குனர்கள் தங்கள் கல்லூரிப் படிப்பின்போது செயல்முறைப் பயன்பாட்டில் சோதித்துப் பார்த்ததாகக் கூறியுள்ளனர். தமிழ்க் கணிமை இதன்மூலம் மேலும் ஒருபடி மேம்பட்டிருக்கிறது. இது வரலாற்று ஆர்வம் உள்ளது. இது கைவிடப்பட்டது, மூல குறியீடு பதிவிறக்க அல்லது பயன்பாடு கிடைக்கவில்லை.

உருவாக்கக் காரணம்

ஆங்கிலம் சாராதவர்கள் தங்கள் தாய்மொழியில் எளிதில் நிரல்களை எழுத முடியாமல், ஆங்கிலத்தில் எழுதினாலும், புரிந்துணர்வு குறைவே. தாய்மொழியின்வழி எழுதுதலே மேம்பட்ட புரிதலுக்கு வழிவகுக்கும். எனவே தங்கள் தாய்மொழியில் எழுத விரும்பியே இதை வடிவமைத்து உருவாக்கினர். இது போன்றே ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளான பிரெஞ்சு, அரபி, உருசியம், யப்பானியம் ஆகிய மொழிகளிலும் நிரலாக்க மொழிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பெயர்க் காரணம்

நிரல்கள் ஒருமொழியைச் சார்ந்து இருத்தல் நன்றன்று. தாய்மொழியில் இருத்தல் கற்பவருக்கும் பயன்படுத்துவருக்கும் நலம். இசைதான் உலகமொழியாயிற்றே! எனவே ஸ்வரம் என்ற பெயர் வைத்ததாக உருவாக்குனர்கள் கூறுகின்றனர்.

உருவாக்குனர்கள்

இம்மொழியை கணேஷ், பிரகாஷ், இரவிக்குமார் ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கினார்கள். கணேஷ், ஹேலட் பேக்கர்டு நிறுவனத்தின் முதன்மை கம்பைலர் தொடர்பான குழுவில் இடம்பெற்றுள்ளார். சி, ஜாவா, சி++ ஆகிய மொழிகளை கற்பதற்கு எளிமையான நூல்களையும் எழுதியுள்ளார். தன் கல்லூரிப் படிப்பை பி. எஸ். ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து முடித்தார். பிரகாஷ், சென்னையிலுள்ள வெரிசான் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரும் சி மொழியைக் கற்பதற்கான எளிய புத்தகமொன்றை வழங்கியுள்ளார். நுண்கணினிகளிலும், இயங்குதளங்களிலும் ஈடுபாடு கொண்டுள்ளார். இவரும் தன் கல்லூரி படிப்பை பி. எஸ். ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து முடித்தார். இரவிக்குமார், சென்னையிலுள்ள வெரிசான் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரும் தன் கல்லூரிப் படிப்பை கோவையின் பி. எஸ். ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து முடித்தார். பன்மொழிக் கணிமையில் ஈடுபாடு கொண்டுள்ளார்.

எடுத்துக்காட்டு நிரல்:

வெற்று முதன்மை ( )

{

சரம் பெயர் [ ] = { "பிரபாகர்", "தணிகைவேல்", "மதன் குமார்", "கிரண்", "பல்லவி", " அனுபல்லவி","சரணம்"};

முழு நீள = பெயர்.நீளம்;

ஆக (முழு =0; <நீள; ++)

{

எனில் (பெயர்[] < பெயர்[])

{

சரம் = சி[];

சி[] = சி[];

சி[] = ;

}

}

ஆக(முழு =0; <நீள; ++)

திரை.அச்சிடு(சி[]);

}

பயன்பாடுகள்

இந்த மொழியை ஆய்வுக்கும், தொடக்க கட்ட நிரலாக்க மாணவர்கள் கல்விக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம்.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.