பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி
பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி ( பி. எஸ். ஜி தொழில்நுட்பக் கல்லூரி) தமிழ் நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஒன்றாகும். இது அரசு உதவி பெறும் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியாகும். கோயம்புத்தூரில் 1951 ஆம் ஆண்டு ஜி. ஆர். கோவிந்தராஜலு, டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் என்பவர்களால் உருவாக்கப்பட்ட கல்லூரியாகும். இந்தியாவில் தொழிற்சாலையுடன் கூடிய ஒரே கல்லூரியும் இதுவாகும்.[1]
பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி / பி. எஸ். ஜி தொழில்நுட்பக் கல்லூரி | |
---|---|
![]() | |
குறிக்கோள்: | அறிவும் சேவையும் |
நிறுவல்: | 1951 |
வகை: | தொழில்நுட்பக் கல்லூரி |
முதல்வர்: | டாக்டர் ஆர். ருத்தரமூர்த்தி |
பீடங்கள்: | 750 |
இளநிலை மாணவர்: | 4000 |
முதுநிலை மாணவர்: | 1200 |
அமைவிடம்: | கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
வளாகம்: | நகர் புறம், 45 ஏக்கர் |
சார்பு: | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையத்தளம்: | http://www.psgtech.edu |
1926 ஆம் ஆண்டு பூளைமேடு சாமநாயுடு கோவிந்தசாமி நாயுடுவால் நிறுவப்பட்ட பி. எஸ். ஜி அறக்கட்டளையின் கீழ் அமைக்கப்பட்டதால் அவர் நினைவாக பூ. சா. கோ. என்னும் பெயர் வைக்கப்பட்டது. இக்கல்லூரியின் தற்போதைய முதல்வர் டாக்டர் ஆர். ருத்தரமூர்த்தி. இந்நிறுவனம் மூன்று 5 வருட ஒருங்கிணைந்த சாண்ட்விச் பொறியியல் படிப்புகளை வழங்குகிறது, இது வகுப்பு அறை பயிற்சியை தொழில்துறை பயிற்சி மூலம் ஒருங்கிணைக்கிறது.
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்:
- மயில்சாமி அண்ணாதுரை - திட்ட இயக்குனர், சந்திராயன்-1 திட்டம், இந்திய விண்வெளி ஆய்வு மையம்.
- சிவ நாடார் - நிறுவனர் மற்றும் தலைவர், ஹச் சி எல்
- கே. பாண்டியராஜன், நிறுவனர் மா ப்போய்
மேலும் பார்க்க
- பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி