சீ சிங்

சீ சிங் («பாடல்களின் தொகுப்பு» Shih-ching, Shijing, அல்லது வாழ்த்துப்பாக்களின் நூல் (Book of Odes) என்பது சீனத்தின் முதல் நூலாகும். இன்று கிடைக்கும் சீன நூல்களில் மிகத் தொன்மையானது இதுவே. இந்த நூலை ஆங்கிலத்தில் Classic of Poetry என்று அழைக்கின்றனர், இது பெரும்பாலும் மிகச்சிறந்த பாடல்களின் தொகுப்பு என்று மொழிபெயர்க்கப்படுகிறது. இதன் காலம் கி.மு. 11 ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 7 ஆம் நூற்றாண்டு வரை ஆகும். "ஐந்து செவ்வியல் இலக்கியங்கள்" என்னும் பாரம்பரிய நூல்களை கன்பூசியஸ் தொகுத்ததாகக் கூறப்படுகிறது, அதில் இதுவும் ஒன்றாகும். இது ஒரு காலகட்டத்தில் இரண்டு நூற்றாண்டுகள் சீனாவிலும் அண்டை நாடுகளிலும் அறிஞர்களால் மனனம் செய்யப்பட்டு, நினைவில் வைக்கப்பட்டிருந்து. பின் எழுத்தால் எழுதப்பட்டன. சிங் அரசமரபு காலத்தில் அதன் ஓசை வடிவங்கள் பழைய சீன ஒலியியல் பற்றிய ஆய்வுகளில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன, நூலுக்கு இருந்த திரிபான விளக்கங்கள் மாற்றப்பட்டு பழைய உரை விளக்கங்கள் மீட்கப்பட்டன.

சீ சின்
சிங் மரபு பேரரசரால் கையெழுத்து இடப்பட்ட "சீ சிங்" நூலின் முதல் பாடலும், அதனுடன் இணைந்த ஓவியமும்.
உண்மையான தலைப்பு[1]
நாடுசவு அரசமரபு
மொழிபழஞ்சீன மொழி
பொருண்மைபழங்கால சீன கவிதைகளும், பாடல்களும்
வெளியிடப்பட்டதுc. 600 BC
சீ சிங்
முத்திரை வரிவடிவில் "சீ சிங்" (மேலே),[1] பாரம்பரிய (நடுவில்) மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட (கீழே) சீன எழுத்துகள்
பண்டைய சீனம் 詩經
நவீன சீனம் 诗经

சீ சிங் என்பதில் உள்ள ஷீ என்ற சொல்லுக்குக் கவிதை அல்லது பாடல் என்றும், சிங் எனபதற்கு பல பொருள்கள் உண்டு என்றாலும் இதில் செவ்விலக்கியம் என்ற சொல்லும், தொகுப்பு என்ற பொருளும் முதன்மையானவை. இதன் பாடல்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

பெயர்

ஆரம்பகால குறிப்புகளில் இது 300 பாடல்கள் (ஷி) என்று அழைக்கப்பட்டுள்ளது. ஆன் அரசமரபு காலத்தில் கன்ஃபூசிய தத்துவங்களைச் சீன சமுதாயத்தின் வழிகாட்டிக் கொள்கைகளாக அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது. அதன் பிறகு ஒடிஸ் என்று அழைக்கப்பட்ட நூலானது முதன்முதலில் சிங் அல்லது ஒரு "செவ்வியல் நூல்" என அறியப்பட்டது. பின்னர் சிங் என்ற அதே சொல் கவிதையைக் குறிக்கும் ஒரு பொதுவான சொல் ஆனது.[2] ஆங்கிலத்தில், சீன மொழிச் சொல்லான ஷி என்ற சொல்லைக் குறிக்க சரியான சொல் ஆங்கிலத்தில் இல்லாததால், இந்தச் சொல்லை "கவிதை", "பாடல்", அல்லது "ஓட" ( "poem", "song", or "ode") என்று மொழி பெயர்த்து அழைக்கப்படுகிறது. சீ சிங் செவ்வியல் பாடலாக அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு நூறு பாடல்கள் என அழைக்கப்பட்டது.[3]

வரலாறு

இந்த நூல் தமிழின் சங்க இலக்கியங்கள் போல ஒரு தொகை நூலாகும். இது கி.மு. 500 இல் தொகுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள பாடல்கள் எப்பொழுது எழுதப்பட்டவை என்பதற்குத் தெளிவான ஆதாரங்கள் இல்லை.[4] இதைத் தொகுத்தவர் கன்பூசியஸ் எனக் கருதப்படுகிறது. ஆன் அரசமரபின் ஆட்சிக் காலத்தில் கன்பூசியம் அரச ஆதரவு பெற்ற சமயமாக இருந்ததால் இந்த நூல் மிகவும் மதிக்கப்பட்டது. ஆனால் பின்னால் வந்த சின் அரசமரபு காலத்தில் சீனத்தின் பழைய நூல்கள் எல்லாம் தடை செய்யப்பட்டன; எரித்தும் அழிக்கப்பட்டன. இதனால் இவர்களின் அரச மரபு ஒழிந்த பிற்காலத்தில் இந்த நூலின் பாடல்கள் அறிஞர்களின் நினைவில் இருந்து மீண்டும் எழுதினார்கள். இதனால் இதில் பல பாடங்கள் கிடைக்காமல் 311 பாடல்களின் பெயரும் அதில் 305 பாடல்கள் மட்டுமே கிடைத்தன.

உள்ளடக்கம்

சீன நூல்களின் காலவரிசைப்படி இந்தக் கவிதை நூல்தான் பழமையானதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2] ஓடீஸ் நூலின் பெரும்பான்மையான பாடல்கள் சவு அரசமரபு காலத்தைச் (கி.மு. 1046-771) சேர்ந்தவையாக உள்ளன.

நூலின் உள்ளடக்கப் பாடல்களை இரண்டு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்: அதில் ஒரு பகுதி "நாட்டுப் பாடல்கள்", மற்ற பகுதி விழாப் பாடல்கள் மற்றும் வேண்டுதல் பாடல்கள் ஆகும்.[5] நாட்டுப் பாடல்கள் என்பவை எளிமையாகச் சொல்வதானால் நாட்டின் பல பகுதிகளில் எளிய மக்களிடம் வழங்கி வந்த நாட்டுப்புறப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.[5] நாட்டுப் பாடல்கள் காதல், காதலியை பிரிந்து செல்லுதல், படைவீரரின் பயணம், வேளாண்மை, வீட்டுவேலை, அரசியல் நையாண்டி மற்றும் எதிர்ப்பு ஆகியவற்றைக் குறித்ததாக உள்ளன.[5] அடுத்த வகையான விழாப் பாடல்கள், இரு பிரிவுகளாக அரச விழாக்களின்போதும், சடங்குகளின்போதும் பாடப்பட்டன, இறுதியாக உள்ள வேண்டுதல் பாடல்களில் யாகம் போன்ற சடங்குகளின்போது கடவுளையும், அரச மரபின் முன்னோர்களையும், ஆவிகளையும் வேண்டிப் பாடப்பட்டவை ஆகும்.[6][7]

பாணி

இதில் உள்ள பாடல்களில் 95% பாடல்கள் நான்கு வரிகளைக் கொண்டதாக உள்ளன. சில நெடிய பாடல்களும் உள்ளன. சில பாடல்கள் பல பக்கங்களைக் கொண்டவையாகவும் உள்ளன.

படைப்பாளிகள்

இது ஒரு தொகைப் பாடல் நூலாக உள்ளது இந்தப் பாடல்களை பாடியவர்களின் பெயர்கள் நூலில் குறிப்பிடப்படவில்லை. இவற்றில் பெரும்பகுதி பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்களாகவும் அரசவை விழாப் பாடல்களாகவும் உள்ளன.[6] இதில் பல பாடல்கள் பெண்கள் எழுதப்பட்டவை, அல்லது பெண் ஆளுமையின் கண்ணோட்டத்தில் தோன்றுகின்றன.

தமிழ் மொழிபெயர்ப்பு

இந்த நூலின் தேர்ந்தெடுத்தக் கவிதைகளை வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை- கவித்தொகை என்ற பெயரில் எம். ஸ்ரீதரன் சீன மொழியில் இருந்து நேரடியாக தமிழாக்கியுள்ளார் இதை - 2012 ஆண்டு காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது.[8]

குறிப்புகள்

    மேற்கோள்கள்

    1. The *k-lˤeng (jing 經) appellation would not have been used until the ஆன் அரசமரபு, after the core Old Chinese period.
    2. Davis (1970), p. xliii.
    3. Hawkes (2011), p. 25.
    4. மு. இராமனாதன் (2017 சூன் 17). "சீனக் கிண்ணத்திலிருந்து தமிழ்த் தட்டுக்கு...". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 18-06-2017.
    5. Kern (2010), p. 20.
    6. de Bary & Chan (1960), p. 3.
    7. Ebrey (1993), pp. 11-13.
    8. "கவித்தொகை: வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை". books.google.co.in. பார்த்த நாள் 18-06-2017.
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.