எம். ஸ்ரீதரன்
எம். ஸ்ரீதரன் என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளராவார் மற்றும் மொழி பெயர்பாளராவார். குறிப்பாக சீன மொழி இலக்கியங்களை சீன மொழியிலருந்தே நேரடியாக பயணி என்ற புனை பெயரில் மொழிபெயர்ப்பராவார். இவர் இந்திய வெளியறவுத் துறை அதிகாரியாக தற்போது தாய்வானில் பணியாற்றிவருகிறார்.[1] இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றுகிற அலுவலர்கள் வெளிநாட்டு மொழியொன்றைக் கற்க வேண்டுமென்பது விதி. ஸ்ரீதரன் சீன மொழியைத் தேர்ந்தெடுத்து, கற்றுத் தேர்ந்தார்.
எழுதிய நூல்கள்
- சீன மொழி- ஓர் அறிமுகம் (2004, காலச்சுவடு பதிப்பகம் [2]) தான் பெற்ற சீன மொழிக் கல்வியை மற்றவர்களேடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற வருப்பத்துடன் தன முதல் நூலாக இந்த நூலை எழுதினார். சீனமொழியைக் கற்பதற்கும் வேறு வரிவடிவங்களில் எழுதுவதற்கும் வேற்று மொழியினரால் ரோமன் எழுத்துக்களைக் கொண்டு சீனச் சொற்களை ஒலிக்கும் ‘பின்யின்’ என்னும் முறை கடந்த 50 ஆண்டுகளாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாகத் தமிழின் வரிவடிங்களைக் கொண்டு சீன மொழியின் சொற்களை ஒலிக்கும் புதிய முறையைப் பயணி அறிமுகப்படுத்துகிறார். தமிழிலிருந்து நேரடியாகச் சீன மொழியைக் கற்பது எளிதானது என்றும் இந்த நூலில் நிறுவுகிறார்.
- வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை- கவித்தொகை - சீனாவின் சங்க இலக்கியம் (2012 காலச்சுவடு பதிப்பகம்[3]) ஏறக்குறைய 3000 ஆண்டுகள் பழமையானதும் சீன நூல்களில் மிகத் தொன்மையானதுமான, சீனாவின் முதல் நூலான ஷிழ் சிங் நூலின் தேர்ந்தெடுத்த கவிதைகளை கவித்தொகை என்று தமிழாக்கியிருக்கினார்.
- மாற்றம் (2015 காலச்சுவடு பதிப்பகம்) 2012 இல் நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர் மோ யான் எழுதிய புதினத்தின் தமிழாக்கம் ஆகும்.
மேற்கோள்கள்
- மு. இராமனாதன் (2017 சூன் 17). "சீனக் கிண்ணத்திலிருந்து தமிழ்த் தட்டுக்கு...". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 18 சூன் 2017.
- "சீன மொழி ஓர் அறிமுகம்". தினமலர். பார்த்த நாள் 18 சூன் 2017.
- "கவித்தொகை: வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை". books.google.co.in. பார்த்த நாள் 18 சூன் 2017.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.