வேளாளர்
வேளாளர் எனப்படுவோர் சாதீய அமைப்பில் வேளாண்மைத் தொழில் செய்து வந்தவர்களைக் குறிக்கும். இவர்களில் பெரும்பான்மையினர் சைவ சமயத்தையே சார்ந்துள்ளனர். சைவ வேளாளர், கொங்கு வேளாளர், போன்றோர்களில் பலர் முறையே பிள்ளை, கவுண்டர், என பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். இவற்றில் விதிவிலக்கும் உண்டு...
வேளாளர் விளக்கம்
வேளாண்மையாவது உழுதுண்டு வாழும் வாழ்வாகும். தாளாண்மையாவது இம்முயற்சியால் ஈட்டிய பொருளைத் தக்கார்க்குக் கொடுத்து மகிழ்வதாகும்.
வேளாளன் எனும் சொல் வெள்ளத்தை ஆள்பவன் எனும் பொருளுடையது என்பர் சிலர். இவர்கள் மன்னர்களுக்குப் பின்னராய் நாடுகாத்து வந்தனர் என்பது, சேக்கிழார், என்பனவற்றால் அறிய முடிகிறது. மேலும் இந்த வேளாளர் ஒரு காலத்தில் மேகத்தைச் சிறையிட்ட பாண்டியனுக்கு இந்திரன் பொருட்டு பிணை நின்று காத்தாராதலின் கார்காத்தார் என்றும், நாகக்கண்ணி மணந்த சோழன் கொணர்ந்த நாகவல்லி எனும் வெற்றிலைக் கொடியினை இப்பூமியில் உற்பத்தி செய்ததால் “கொடிக்கால் வேளாளர்” எனவும், துளுவ நாட்டிலிருந்து தொண்டை நாட்டில் சோழனால் கொண்டு வரப்பட்டோராதலின் “துளுவர்” எனவும் கூறப்படுவர்.[1]
பட்டங்கள்
வேளாளர் இன பட்டங்கள்
- பிள்ளை
- முதலியார் அல்லது முதலி
- கவுண்டர்
- உடையார்
- தேசிகர்
- குருக்கள்
- ஓதுவார்
சைவ வேளாளர்
இவர்கள் தங்கள் சாதிக் குறியீடாக "பிள்ளை" என்பதைக் கொண்டுள்ளனர். இந்த வேளாளர் சாதியினர் முதலில் "சைவ வேளாளர்" அல்லது "சைவப் பிள்ளைமார்" என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் சைவமாக இருந்தாலும், இந்த சாதியிலிருந்து சில குழுவினர் அசைவ வகை உணவுகளை உண்ணும் வழக்கத்திற்கு மாறத் தொடங்கிய பின்பும், கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் பிரிந்து செல்லத் தொடங்கிய பின்பும், இச்சாதியிலிருந்து பல உட்பிரிவுகள் தோன்றின. இன்று இந்த உட்பிரிவு சாதியினரில் சிலர் புதிய சாதிப் பெயர்களில் பிள்ளை என்பதை இணைத்துக் கொண்டுள்ளனர். சிலர் வேளாளர் என்பதை இணைத்துக் கொண்டுள்ளனர். சிலர் தனிப்பட்ட பெயர்களை வைத்துக் கொண்டுள்ளனர்.
உட்பிரிவு சாதியினர்
- ஆதிசைவ வெள்ளாளர் [2] [3]
- ஊற்று வளநாட்டு வேளாளர்
- சைவ வேளாளர்
- அசைவ வேளாளர்
- காக்கட்டு வேளாளர்
- கார்காத்தார் அல்லது கார்காத்தர் பிள்ளை
- சோழிய வேளாளர்
- வீரகுடி வேளாளர்
- நாமதாரிப் பிள்ளை
- ஓதுவார் பிள்ளை
- தேசிகர்
- ஆறுநாட்டு வேளாளர்
- நாஞ்சில்நாட்டு வேளாளர்
- சேர வேளாளர்
- சோழ வேளாளர்
- நாட்டம்படி வேளாளர்
- நன்குடி வேளாளர்
- துளுவ வேளாளர்
- பாண்டிய வேளாளர்
- கொடிக்கால் வேளாளர்
- தொண்டை மண்டல வேளாளர்
- அரும்புக்கட்டி வேளாளர்
- வெள்ளாள முதலியார்
- வீரக்கொடி வேளாளர்
- ஆரிய வேளாளர்
- கோட்டை பிள்ளைமார்
மேற்கோள்கள்
- சிங்காரவேலு முதலியார் எழுதிய “அபிதான சிந்தாமணி” நூல் பக்கம். 1069.
- Castes and tribes of south India, volume 1, page 4, https://archive.org/stream/castestribesofso01thuriala#page/4/mode/2up
- http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=63094