வேர்ஜில்

வேர்ஜில் (Virgil) எனப்படும் பப்ளியஸ் வேர்ஜிலஸ் மாரோ (Publius Vergilius Maro, அக்டோபர் 15, கிமு 70 – செப்டெம்பர் 21, கிமு 19) ஒரு செந்நெறிக்கால ரோமக் கவிஞர் ஆவார். இவர் வடக்கு இத்தாலியில், மன்ட்வா அருகில்,  அன்டிஸ்  என்னும் இடத்தில் பிறந்தார். இவர் எழுதிய முக்கியமான ஆக்கங்கள், புகோலிக்ஸ் (Bucolics), ஜோர்ஜிக்ஸ் (Georgics), ஏனீட் (Aeneid) என்பன. அவை தவிரப் பல சிறு கவிதை ஆக்கங்களையும் இவர் எழுதியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஒரு விவசாயியின் மகனான வேர்ஜில், ரோமின் மிகப் பெரிய கவிஞர்களுள் ஒருவர் என்ற நிலையை எட்டியதுடன், இவரது ஏனீட் என்னும் ஆக்கம் ரோமின் தேசிய இதிகாசமாகவும் போற்றப்பட்டது.

வேர்ஜில்

வெர்ஜில், கிபி 3-ஆம் நூற்றாண்டு சிற்பம்
பிறப்பு பப்ளியசு வெர்ஜிலியசு மாரோ
அக்டோபர் 15, கிமு 70
வெர்ஜிலியோ,[1] உரோமைக் குடியரசு
இறப்பு செப்டம்பர் 21, கிமு 19 (அகவை 50)
புருண்டிசியம், இத்தாலி, உரோமைப் பேரரசு
தொழில் கவிஞர்
நாடு உரோமர்
இலக்கிய வகை இதிகாசம், அறிவுறுத்தும் பாடல்கள், pastoral poetry
இயக்கம் அகஸ்தான் பாடல்கள்

மேற்கோள்கள்

  1. Oxford Dictionary of the Classical World, ed. Roberts, John, (Oxford: OUP, 2005)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.