ஜோன் கீற்ஸ்
ஜோன் கீற்ஸ் (தமிழக வழக்கு:ஜான் கீட்ஸ், John Keats, அக்டோபர் 31, 1795 -– பெப்ரவரி 23, 1821) ஆங்கில இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர். இருபத்தாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கீற்ஸ் (கீட்ஸ்) ஆங்கில இலக்கியத்தின் பொற்காலமாகக் கருதப்படும் ரொமான்டிக் காலப்பகுதியின் முக்கிய கவிஞராவார். எனினும் இவருடைய ஆக்கங்களில் மில்ரன் (மில்டன்), ஷேக்ஸ்பியர் ஆகியோரின் எழுத்துக்களின் தாக்கம் இருந்ததாக திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். இவரது ஆக்கங்களில் To Autumn என்ற கவிதை மிகவும் புகழ் பெற்றுள்ளதோடு இலங்கையில் ஆங்கில இலக்கிய மேற்படிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஜோன் கீற்ஸ் | |
---|---|
![]() இலண்டன் உருவப்பட கலையரங்கத்தில் வில்லியம் ஹில்டன் வரைந்த கீட்ஸின் உருவப்படம் | |
பிறப்பு | அக்டோபர் 31, 1795 மூர்கேட், இலண்டன், இங்கிலாந்து |
இறப்பு | பெப்ரவரி 23, 1821 25) உரோம், திருத்தந்தை நாடுகள் | (அகவை
படித்த கல்வி நிறுவனங்கள் | கிங் கல்லூரி, இலண்டன் |
பணி | கவிஞர்,புனைவியம் |
ஜான் கீட்ஸ் இரண்டாம் தலைமுறை காதல் கவிஞர்களைச் (ஜார்ஜ் கோர்டன் பைரன் மற்றும் பெர்சி பைச்சு ஷெல்லி) சேர்ந்தவர். அவருடைய படைப்புகள் அவர் இறந்து நான்கு வருடங்களுக்குப் பிறகே வெளியிடப்பட்டது. அவர் வாழ்ந்த பொது அவருடைய படைப்புகள் பெரும் வரவேற்பை பெறாது போனாலும் அவர் இறந்த பிறகு, அவை பெரிதும் போற்றப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் எல்லோராலும் போற்றப்படும் ஒரு ஆங்கிலக் கவியாகப் புகழ் பெற்றார்.
அவருடைய படைப்புகள் பல கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் பாதித்துள்ளது. ஜார்ஜ் லூயிஸ் போர்க்ஸ் தனது வாழ்நாளில் கீட்ஸின் கவிதைகளைப் படித்த நாள் அன்று தான் தனக்கு முதல் இலக்கிய அனுபவம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார்.
கீட்ஸின் கவிதைகள் பெரும்பாலும் உருவகங்களைக் கொண்டே இயற்றப்பட்டுள்ளது. இது எல்லா காதல் கவிஞர்களுக்கும் பொதுவானதாகும். உருவகங்களைக் கொண்டே உணர்வுகளைத் தூண்டும் விதமாக அந்த கவிதைகள் இயற்றப்பட்டுள்ளன.
இன்று அவரது கவிதைகளும் கடிதங்களும் ஆங்கில இலக்கியத்தில் மிகவும் புகழப்படுகின்றது, மற்றும் ஆராய்ச்சிக்கு பயன்படுகின்றது. அவருடைய முக்கியமான படைப்புகள் - "I stood on a little toe hill"-"நான் ஒரு சின்ன குன்றின் மீது ஏறி நின்றேன்" , "Sleep and Poetry"-"தூக்கமும் கவிதையும்" மற்றும் மிகவும் பிரபலமான "On First Looking into Chapman's Homer"-"முதன் முதலில் சாப்மனின் ஹோமரைக் கண்ட பொது"