த. வேணுகோபால்

தனபால் வேணுகோபால் (பிறப்பு: நவம்பர் 5, 1936) இந்தியாவின் பதினைந்தாவது மக்களவைக்கான திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆவார்.[3] இவர் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர். இவர் திருப்பத்தூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர்.[4]

த. வேணுகோபால்
D. Venugopal
தனபால் வேணுகோபால்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1996 - 2014
தொகுதி திருப்பத்தூர், திருவண்ணாமலை
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1977–1980
தொகுதி தாம்பரம்பட்டு[1]
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1980–1984
தொகுதி தாம்பரம்பட்டு
தனிநபர் தகவல்
பிறப்பு 5 நவம்பர் 1931 (1931-11-05)[2]
திருவண்ணாமலை, தமிழ்நாடு
அரசியல் கட்சி திமுக
வாழ்க்கை துணைவர்(கள்) உதிரம்பாள்
பிள்ளைகள் 3 மகள்கள்
இருப்பிடம் திருவண்ணாமலை
As of ஆகத்து, 2013
Source:

அரசியல் வாழ்க்கை

மக்களவைக்கு ஐந்து முறையும், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 2 தடவையும் இவர் தெரிவாகி இருந்தார்.[5] தமிழ் நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்.[6]

மேற்கோள்கள்

  1. State assembly 1977
  2. Lok Sabha Website Profile
  3. "Statistical Reports of Lok Sabha Elections". Election Commission of India. பார்த்த நாள் 17 September 2011.
  4. "List of Successful Candidates". Statistical Reports of General elections 2004. Election Commission of India. பார்த்த நாள் 9 January 2011.
  5. Lok Sabha Website Positions held
  6. மக்களவைத் தேர்தலில் வெற்றி

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.