வீரபத்ர சிங்

வீரபத்ர சிங் (Virbhadra Singh, பிறப்பு:சூன் 23, 1934) முன்னாள் இமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர்[1] காங்கிரசு அரசியல்வாதியும் ஆவார். இமாச்சலப் பிரதேச முதல்வராக, 1983 முதல் 1990 வரையும், 1993 முதல் 1998 வரையும் 2003 முதல் 2007 வரையும் முன்னதாகப் பொறுப்பாற்றி உள்ளார். நடுவண் அரசிலும் பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 1962, 1967, 1972, 1980 மற்றும் 2009களில் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.

வீரபத்ர சிங்
4வது இமாச்சலப் பிரதேச முதலமைச்சர்
பதவியில்
25 டிசம்பர் 2012  27 டிசம்பர் 2017
முன்னவர் பிரேம் குமார் துமால்
பின்வந்தவர் ஜெய்ராம் தாகூர்
தொகுதி சிம்லா ஊரகம்
பதவியில்
ஏப்ரல் 8, 1983  மார்ச்சு 5, 1990
முன்னவர் தாக்கூர் ராம்லால்
பின்வந்தவர் சாந்த குமார்
தொகுதி ரோகிரு
பதவியில்
திசம்பர் 3, 1993  மார்ச்சு 24, 1998
முன்னவர் சாந்த குமார்
பின்வந்தவர் பிரேம் குமார் துமால்
தொகுதி ரோகிரு
பதவியில்
மார்ச்சு 6, 2003  திசம்பர் 30, 2007
முன்னவர் பிரேம் குமார் துமால்
பின்வந்தவர் பிரேம் குமார் துமால்
தொகுதி ரோகிரு
நாடாளுமன்ற உறுப்பினர்
மண்டி
பதவியில்
2009–2012
குறு,சிறு மற்றும் இடைநிலை தொழில்துறை அமைச்சர்
பதவியில்
சனவரி 19, 2011  சூன் 26, 2012
முன்னவர் தின்ஷா பட்டேல்
பின்வந்தவர் விலாசராவ் தேசுமுக்
இரும்புத் துறை அமைச்சர்
பதவியில்
மே 28, 2009  சனவரி18, 2011
முன்னவர் ராம் விலாஸ் பாஸ்வான்
பின்வந்தவர் பெனிப் பிரசாத் வர்மா
தொழில்துறை இணை அமைச்சர்
பதவியில்
செப்டம்பர் 1982  ஏப்ரல் 1983
சுற்றுலா மற்றும் உள்நாட்டு வான்துறை இணை அமைச்சர்
பதவியில்
திசம்பர் 1976  மார்ச்சு 1977
தனிநபர் தகவல்
பிறப்பு 23 சூன் 1934 (1934-06-23)
சாரஹான், சிம்லா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) பிரதிபா சிங்
இருப்பிடம் பதம் அரண்மனை, ராம்பூர் புசாகர், சிம்லா மாவட்டம்

வாழ்க்கை வரலாறு

வீரபத்ர சிங் இராசபுத்திர குடும்பமொன்றில் சிம்லா மாவட்டத்தில் உள்ள சாரஹானில் சூன் 23,1934இல் பிறந்தார்.[2][3] புசாகிர் மன்னரான சேர் பதம் சிங்கிற்கு வாரிசாகப் பிறந்து 1947ஆம் ஆண்டில், தமது 13வது அகவையில், சமத்தானத்தின் மன்னராக பதவி ஏற்றார்.

சிங் தெகராடூனில் உள்ள கேனல் பிரவுன் கேம்பிரிட்ஜ் பள்ளியிலும் சிம்லாவிலுள்ள பிஷப் காட்டன் பள்ளியிலும் பயின்றார். பின்னர் தில்லியில் உள்ள செயின்ட் இசுடீபன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2]

சூன் 2, 1954இல் இளவரசி இரத்னகுமாரியை திருமணம் புரிந்தார்.இவர்களுக்கு ஒரு மகனும் ஐந்து மகள்களும் பிறந்தனர். 1985இல் பிரதிபா சிங்கை மணந்து ஒரு மகனையும் மகளையும் பெற்றுள்ளார்.

ஊழல் வழக்கு

சான்றுகோள்கள்

  1. "இமாசலப் பிரதேச முதல்வராக வீரபத்ர சிங் நாளை பதவியேற்பு". தினமணி (டிசம்பர் 24, 2012). பார்த்த நாள் டிசம்பர் 26, 2012.
  2. "Detailed Profile: Shri Virbhadra Singh". NIC. பார்த்த நாள் 5 March 2012.
  3. Virbhadra Singh
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.