வீ ஃபோர் வென்டேட்டா
ஆலன் மூரால் எழுதப்பட்டு,டேவிட் லாயிட் வரையப்பட்ட வரைக்கதை புத்தக தொடரே வீ ஃபோர் வென்டேட்டா. கூச்சல் குழப்பம் மிகுந்த வருங்கால ஐக்கிய ராஜ்ஜியத்தில் நடக்கும் கதை தான் இந்த பத்து-பிரதிகளில் வெளியான வீ ஃபோர் வென்டேட்டா. வீ என்கிற ஓர் புதிரான அரசின்மைவாதி ,அராஜக அரசை வீழ்த்த எடுக்கும் முயற்சிகளே இதன் கதை.
வீ ஃபோர் வென்டேட்டா | |
---|---|
![]() டேவிட் லாயிட் வரைந்த வீ ஃபோர் வென்டேட்டா அட்டை படம் | |
வெளியீட்டுத் தகவல்கள் | |
வெளியீட்டுத் திகதி | மார்ச் 1982-மே 1989 |
இதழ்களின் எண்ணிக்கை | 10 |
முக்கியமான கதாபாத்திரங்(கள்) | வீ எவே ஹம்மொண்டு எரிக் பின்ச் |
உருவாக்கக் குழு | |
எழுத்தாளர்(கள்) | ஆலன் மூர் |
ஓவியர்(கள்) | டேவிட் லாயிட் |
வரைஞர்(கள்) | டேவிட் லாயிட் டோனி வியர் |
மைதீட்டி(கள்) | டேவிட் லாயிட் டோனி வியர் |
எழுத்து வடிவமைப்பாளர்(கள்) | ஸ்டீவ் க்ரட்டோக் |
வண்ணந்தீட்டுனர்(கள்) | ஸ்டீவ் விட்டேகர் சியோபன் டாட்ஸ் டேவிட் லாயிட் |
உருவாக்கியவர்(கள்) | ஆலன் மூர் டேவிட் லாயிட் |
ஆசிரியர்(கள்) | கரேன் பெர்கர் ஸ்காட்ட் நிபக்கேன் |
Collected editions | |
மெல்லிய அட்டை | ISBN 0-930289-52-8 |
தடிமன் அட்டை | ISBN 0-930289-52-8 |
இந்த தொடர் நடைபெறுவது ஓர் அணுஆயுத போருக்கு பின் உலகின் மற்ற பகுதிகள் அழிந்து மீதமிருந்த பிரிட்டனில்.நோர்ஸ்பயர் எனும் ஓர் அராஜக கட்சி ஆட்சியை பிடிக்கிறது. வீ' என்கிற ஒரு அரசின்மை புரட்சியாளர் கய் பாக்ஸ் முகமூடி அணிந்து, அவ்வரசை வீழ்த்த ஓர் மாப்பெரும்,வன்முறையுடன் கூடிய ஓர் பிரச்சாரம் செய்கிறான். வார்னர் சகோதரர்கள் இதே புத்தகத்தை மையமாக கொண்ட திரைப்படமொன்றை 2005-ஆம் ஆண்டு வெளியிட்டனர்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.