விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்கள் மற்றும் நண்பர்களால் உருவாக்கப்பட்ட இலக்கிய அமைப்பு. அவரது குறிப்பிடத்தக்க படைப்பான “விஷ்ணுபுரம்” புதினத்தின் பெயரே இதற்கு இடப்பட்டுள்ளது. இதன் தலைமை இடம் தற்போது கோவை. 2009 ஆகஸ்டில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே. வி. அரங்கசாமி. இப்போது கோவையை மையமாக்கி செயல்படுகிறது. ஆண்டுதோறும் விஷ்ணுபுரம் இலக்கிய விருதினை வழங்கி வருகிறது.

'நோக்கம்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சீரிய இலக்கியத்தை பரப்பும் நோக்கம் கொண்டது. நல்ல எழுத்துக்களையும் எழுத்தாளர்களையும் கவனப்படுத்துவதும் ஆராய்வதும்தான் இலக்குகள். அதன்பொருட்டு கருத்தரங்கங்களையும் ஆய்வரங்கங்களையும் நடத்துகிறது.

விஷ்ணுபுரம் 2010 முதல் இலக்கியவட்டம் வருடம்தோறும் இலக்கியவிருதுகளை வழங்கிவருகிறது

நிகழ்ச்சிகள்'

  • கலாப்பிரியா படைப்புக்களம் (2010) - கோவை (படைப்புகள் மீதான விமர்சன அரங்கம்)
  • உதகை கவிதையரங்கு (2010) - நாராயணகுருகுலம் - உதகை
  • நாஞ்சில் நாடன் விழா (2010) - சென்னை
  • விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா 2010 [ கோவை ] ஆ.மாதவன்
  • தேவதேவன் கவிதையரங்கு (2011) - திற்பரப்பு
  • உதகை காவிய அரங்கு (2011) - நாராயணகுருகுலம் - உதகை
  • யுவன் கவிதையரங்கு (2011) - கன்னியாகுமரி
  • விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா 2011 [கோவை] [பூமணி]
  • விஷ்ணுபுரம் நாவல் வாசிப்பரங்கு [2012 ]காரைக்குடி
  • இலக்கியவிவாத அரங்கு ஊட்டி 2012
  • விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா 2012 [தேவதேவன்] [ஊட்டி]
  • கல்பற்றா நாராயணன் கவிதையரங்கு[ 2012] ஆலப்புழா
  • இலக்கிய விவாத அரங்கு ஏற்காடு [2013]
  • விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா 2013 [கோவை][தெளிவத்தை ஜோசப்]
  • வெண்முரசு விவாத அரங்கு மூணாறு 2014
  • இலக்கிய விவாத அரங்கு ஊட்டி [2014]\
  • விஷ்ணுபுரம் விருது ஞானக்கூத்தனுக்கு 2014 டிசம்பர்
  • ஊட்டி இலக்கியச் சந்திப்பு மே 2015
  • விஷ்ணுபுரம் விருது தேவதச்சனுக்கு 2015 டிசம்பர்
  • இளையவாசகர் சந்திப்பு ஈரோடு பெப்ருவரி 2016
  • இளையவாசகர் சந்திப்பு கொல்லிமலை மார்ச் 2016
  • இளையவாசகர் சந்திப்பு கோவை மார்ச் 2016
  • இளையவாசகர் சந்திப்பு ஊட்டி ஏப்ரல் 2016
  • சிங்கப்பூர் இலக்கியச் சந்திப்பு செப்டெம்பர் 2016
  • விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது 2016
  • விஷ்ணுபுரம் விருது சீ.முத்துசாமி வழங்கப்பட்டது 2017

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.