புலிக்கால் முனிவர்

புலிகால் முனிவர் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் மத்யந்தனர் என்பவரின் மகனும், சிறந்த சிவ பக்தனும் ஆவார். இவருடைய இயற்பெயர் மழன் என்பதாகும். இவரை வியாக்ரபாதர் வியாக்கிரபாதர் என்றும் அறியப்பாடுகிறார்.

புலிக்கால் முனிவர்
கிருஷ்ணகிரி மாவட்டம், பெண்ணேஸ்வரர் கோயில் இராசகோபுரத்தில் புலிக்கால் முனிவர் சிவலிங்கத்தை வழிபடும் புடைப்புச் சிற்பம்

தோற்ற காரணம்

சிவபெருமானுக்கு தூய மலர்களால் அர்ச்சனை செய்ய விரும்பிய மழன், மரத்திலிருந்து கீழே விழும் மலர்களையும், வண்டு போன்ற உயிரினங்களால் நுகரப்பட்ட மலர்களையும் ஏற்க மறுத்தார். அதனால் அதிகாலையிலேயே மரத்தில் ஏறி அர்சனைப் பூக்களை சேகரிக்க எத்தனித்தார். இரவு நேரத்தில் கண்களுக்கு போதிய வெளிச்சம் இல்லாமையாலும், மரத்தில் ஏறுவதற்கு வசதியான உடலமைப்பு இல்லாமையாலும் மிகுந்த கவலையுற்றார். அதனை தீர்க்க சிவபெருமானை நோக்கி தவமிருந்து இரவில் தெரியும் பார்வையும், புலிக்கால் மற்றும் புலி நகங்களையும் பெற்றார்.

சமஸ்கிருதத்தில் வியாக்ரம் என்பது புலியைக் குறிப்பதனால் வியாக்ரபாதர் என்று அழைக்கப்பட்டார். இதற்கு புலிக்கால்களை உடையவர் என்று பொருளாகும். தமிழில் புலிக்கால் முனிவர் என்றும் அறியப்படுகிறார்.

சமாதி இவர் திருச்சி சமயபுரம் அருகில் உள்ள திருபட்டுர் என்னும் இடத்தில் ஜிவசமாதி அடைந்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.