சி. ஆர். விஜயகுமாரி

விஜயகுமாரி 1950களில் நடிக்கத் துவங்கிய தமிழ்த் திரைப்பட நடிகை.

சி. ஆர். விஜயகுமாரி
பணிதிரைப்பட நடிகை
வாழ்க்கைத்
துணை
எஸ். எஸ். ராஜேந்திரன்[1][2]
பிள்ளைகள்இரவிகுமார்[3]

பல இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்தவர். ஸ்ரீதரின் முதல் திரைப்படம் " கல்யாண பரிசு ", கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் முதல் திரைப்படம் சாரதா, ஆரூர்தாஸ் இயக்கிய முதல் திரைப்படம் பெண் என்றால் பெண், மல்லியம் ராஜகோபாலின் "ஜீவனாம்சம்" ஆகியவை இத்தகையத் திரைப்படங்களாகும்.

அவர் நடித்த சில திரைப்படங்கள் அவரேற்ற வேடத்தின் பெயர் கொண்டு வெளிவந்தன. காட்டாக, சாரதா, சாந்தி, ஆனந்தி, பவானி ஆகும். ஸ்ரீதரின் இயக்கத்தில் அவர் நடித்த போலீஸ்காரன் மகள் , ஏ. சி. திரிலோகச்சந்தர் இயக்கிய நானும் ஒரு பெண் திரைப்படங்களில் அவரது நடிப்பு சிறப்பாக அமைந்திருந்தது. பூம்புகார் திரைப்படத்தில் கண்ணகியாக நடித்துள்ளார்.

திரைப்பட நடிகர் எஸ். எஸ். இராஜேந்திரனைத் திருமணம் புரிந்து கொண்டார்.[4] இருப்பினும் மணவாழ்வில் ஏற்பட்ட பிணக்கின் விளைவாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இவருக்கு இரவி என்றொரு மகன் உள்ளார்.[5]

நடித்த சில திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்கதாபாத்திரம்மொழிகுறிப்பு
1953நால்வர்தமிழ்
1958பெற்ற மகனை விற்ற அன்னைதமிழ்
1958பதிபக்திதமிழ்
1958வஞ்சிக்கோட்டை வாலிபன்தமிழ்
1959அழகர்மலை கள்வன்தமிழ்
1959கல்யாணப் பரிசுதமிழ்
1959நாட்டுக்கொரு நல்லவள்தமிழ்
1960தங்க ரத்தினம்தமிழ்
1960தங்கம் மனசு தங்கம்தமிழ்
1961குமுதம்தமிழ்
1961பணம் பந்தியிலேதமிழ்
1962ஆலயமணிதமிழ்
1962தெய்வத்தின் தெய்வம்தமிழ்
1962எதையும் தாங்கும் இதயம்தமிழ்
1962முத்து மண்டபம்தமிழ்
1962பாத காணிக்கைதமிழ்
1962போலீஸ்காரன் மகள்தமிழ்
1962சாரதாதமிழ்
1962சுமைதாங்கிதமிழ்
1963குங்குமம்தமிழ்
1963ஆசை அலைகள்தமிழ்
1963கைதியின் காதலிதமிழ்
1963காஞ்சித் தலைவன்Tதமிழ்
1963மணி ஓசைதமிழ்
1963நானும் ஒரு பெண்தமிழ்
1963நீங்காத நினைவுதமிழ்
1963பார் மகளே பார்தமிழ்
1964அல்லி]] தமிழ்
1964பச்சை விளக்குதமிழ்
1964பாசமும் நேசமும்தமிழ்
1964பூம்புகார்தமிழ்
1965ஆனந்திதமிழ்
1965காக்கும் கரங்கள்தமிழ்
1965பணம் தரும் பரிசுதமிழ்
1965பூமாலைதமிழ்
1965சாந்திதமிழ்
1966அவன் பித்தனாதமிழ்
1966கொடிமலர்தமிழ்
1966மணி மகுடம்தமிழ்
1967சுந்தர மூர்த்தி நாயனார்தமிழ்
1967விவசாயிதமிழ்
1967கணவன்தமிழ்
1967பவானிதமிழ்
1968கல்லும் கனியாகும்தமிழ்சிறப்புத் தோற்றம்
1968நீயும் நானும்தமிழ்
1968தேர்த் திருவிழாதமிழ்
1968ஜீவனாம்சம்தமிழ்
1969அவரே என் தெய்வம்தமிழ்
1969மனைவிதமிழ்
1971சவாலே சமாளிதமிழ்
1973ராஜராஜ சோழன்தமிழ்
1973அன்பைத் தேடிதமிழ்
1976சித்ரா பௌர்ணமிதமிழ்
1983தங்க மகன்தமிழ்
1984நான் மகான் அல்லதமிழ்
1986மாவீரன்தமிழ்
1990பெரிய இடத்து பிள்ளைதமிழ்
1993அரண்மனைக்கிளிதமிழ்
1993ஆத்மாதமிழ்
1996பூவே உனக்காகதமிழ்
1997தர்ம சக்கரம்தமிழ்
2000தெனாலிதமிழ்
2003காதல் சடுகுடுதமிழ்

மேற்கோள்கள்

  1. "Veteran Tamil actor S.S. Rajendran dead". பார்த்த நாள் 5 January 2015.
  2. "S.S. Rajendran: Dialogue delivery was his forte". பார்த்த நாள் 5 January 2015.
  3. "Potpourri of titbits about cinema - Vijayakumari". பார்த்த நாள் 5 January 2015.
  4. https://antrukandamugam.wordpress.com/2013/09/09/vijayakumari/

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.