வி. அ. அழகக்கோன்

விராசிப்பிள்ளை அல்பர்ட் அழகக்கோன் (Virasipillai Albert Alegacone, 19 மார்ச் 1903 - 25 நவம்பர் 1973) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

வி. ஏ. அழகக்கோன்
V. A. Alegacone

நாஉ
மன்னார் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1956–1973
முன்னவர் சி. சிற்றம்பலம், சுயேட்சை
பின்வந்தவர் எஸ். ஏ. ரகீம், ஐதேக
தலைவர், மன்னார் நகரசபை
பதவியில்
1947–1956
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 19, 1903(1903-03-19)
இறப்பு 25 நவம்பர் 1973(1973-11-25) (அகவை 70)
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி
படித்த கல்வி நிறுவனங்கள் புனித சேவியர் ஆண்கள் கல்லூரி
தொழில் வழக்கறிஞர்
சமயம் கத்தோலிக்கர்
இனம் இலங்கைத் தமிழர்

ஆரம்ப வாழ்க்கை

அழகக்கோன் 1903 ஆம் ஆண்டு மார்ச் 19 இல்[1] பஸ்தியாம்பிள்ளை விராசிப்பிள்ளை சின்னையா, அன்னம்மா ஆகியோருக்குப் பிறந்தார். மன்னார் புனித சேவியர் ஆண்கள் கல்லூரியில் கல்வி கற்ற இவர்[1], சட்டக் கல்வி பயின்று மன்னாரில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இவர் மன்னார், மற்றும் யாழ்ப்பாண மறைமாவட்டப் பேரவைத் தலைவராகப் பல ஆண்டுகள் சேவையாற்றினார்.[1]

பஸ்தியாம்பிள்ளை அரசரத்தினம் எனபவரின் மகள் மேரி செபஸ்தியம்மா என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு அருந்ததி, தேவதாசன், பாலேந்திரா, சத்தியவன், அரிச்சந்திரன் என ஐந்து பிள்ளைகள்.[1]

அரசியலில்

1940களில் அழகக்கோன் மன்னார் நகரசபை உறுப்பினராகத் தெரிவானார். 1947 முதல் 1956 வரை நகரசபைத் தலைவராகப் பணியாற்றினார்..[1]

1952 நாடாளுமன்றத் தேர்தலில் அழகக்கோன் சுயேட்சை வேட்பாளராக மன்னார் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[2] பின்னர் அவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் சேர்ந்து அக்கட்சி சார்பாக 1956 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] பின்னர் அவர் 1960 மார்ச்[4], 1960 சூலை[5], 1965[6], 1970 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[7]

மறைவு

அழகக்கோன் 1973 நவம்பர் 25 இல் காலமானார்.[1]

மேற்கோள்கள்

  1. ஆறுமுகம், எஸ். (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 2. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon.
  2. "1952%20GENERAL%20ELECTION.PDF Result of Parliamentary General Election 1952". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  3. "1956%20GENERAL%20ELECTION.PDF Result of Parliamentary General Election 1956". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  4. "1960 03 19%20GENERAL%20ELECTION.PDF Result of Parliamentary General Election 1960-03-19". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  5. "1960 07 20%20GENERAL%20ELECTION.PDF Result of Parliamentary General Election 1960-07-20". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  6. "1965%20GENERAL%20ELECTION.PDF Result of Parliamentary General Election 1965". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  7. "1970%20GENERAL%20ELECTION.PDF Result of Parliamentary General Election 1970". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.