வாளையார்

வாளையார் (Walayar) இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் எல்லைப்புறத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். கேரளா தமிழ்நாடு மாநிலங்களின் தணிக்கைச் சாவடிகள் இங்கு அமைந்துள்ளன. இது தேசிய நெடுஞ்சாலை 544 இல் பாலக்காட்டிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலும், கோவை தொடருந்து நிலையத்திலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

Walayar
வாளையார்
தமிழகத்தின் பகுதியிலிருந்து வாளையாரின் தோற்றம்
அடைபெயர்(கள்): வாலு
Walayar
வாளையார்
Walayar
வாளையார்
Walayar
வாளையார்
Location in Tamilnadu - Kerala, India
ஆள்கூறுகள்: 10°23′30″N 76°52′0″E
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர் மாவட்டம்
Languages
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்678624
Telephone code04915
வாகனப் பதிவுTN-38
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)
காலநிலைவெப்ப மண்டலக் காலநிலை (Köppen)

அமைவிடம்

வாளையார் ஒரு வளர்ந்து வரக்கூடிய சிறிய நகரம் ஆகும். இந்த இடம் தமிழக, கேரள எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் வணிகவரித்துறை, போக்குவரத்துத் துறை மற்றும் ஆயத்தீர்வை ஆகியவற்றுக்கான சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன. கேரளாவிற்கு அனுப்பப்படும் பெரும்பாலான சரக்குகள் இந்த வழியிலேயே செல்வதால் இந்த இடம் அதிக போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர் போன இடமாக விளங்குகிறது. ஆனால், தற்போது வலயார் முதல் வடக்கஞ்சேரி வரை தேசிய நெடுஞ்சாலையானது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதாலும், சேவைச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாலும் நிலைமை மாறியுள்ளது. மேலும், சரக்குந்துகளுக்கு சுங்கச்சாவடிகளுக்கு நுழையக்கூடிய இடத்திலிருந்து, வரி செலுத்தி வெளிவரும் வரையிலும் வாகனங்களுக்குத் தனியான பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே பயணிகள் வாகனங்கள் இடையூறின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி 2015 ஆம் ஆண்டு முடிவுற்றது. இதர மாநிலங்களிலிருந்து வரும் பெரும்பாலான பயணிகள் வாகனங்கனான பேருந்துகள், மகிழ்வுந்துகள், சுற்றுலா வாகனங்கள் இந்த வழியிலேயே செல்கின்றன. வலயாரின் தொடருந்து நிலையமானது தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.